districts

img

மத்திய பல்கலைக்கழகங்களில் நுழைவுத் தேர்வை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

திருவாரூர், மே 12- நீட் நுழைவுத்தேர்வுக்கு எதிராக ஒட்டுமொத்த தமிழகமும் எதிர்ப்பு  தெரிவித்து வரும் நிலையில் ஒன்றிய மோடி அரசு விடாப்பிடியாக நீட் தேர்வை நடத்தி வருகிறது. இதனால் ஏராளமான மாணவர்கள் தன்னுயிரை மாய்த்துக் கொண்டு வருகின்றனர்.  இந்தக் கொடுமைகளை தாங்கிக் கொள்ள முடியாத நிலை யில் தற்போது மத்திய பல்கலைக் கழகங்களில் கியூட் நுழைவுத் தேர்வை அமல்படுத்த ஒன்றிய அரசு முயற்சிக்கிறது. இதன் மூல மாக இட ஒதுக்கீடு உரிமை பறி போகும் நிலை ஏற்பட்டுள்ளது.  எனவே நுழைவுத் தேர்வை ரத்து செய்யக் கோரியும் ஏனைய கோரிக்கைகளை வலியுறுத்தியும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் வியாழனன்று திருவாரூ ரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  பழைய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு மாவட்டச் செயலாளர் கே.தமிழ்மணி தலைமையேற்றார். மாநில தலைவர் கா.செல்லக் கண்ணு, துணை பொது செயலாளர் சின்னை.பாண்டியன், மாநிலக்குழு  உறுப்பினர்கள் என்.சிவகுரு, கலைச்செல்வி, மாவட்ட செயலா ளர்கள் பி.சுபாஷ் சந்திர போஸ் (நாகை), ஜி.ஸ்டாலின் (மயிலாடுதுறை), வே.நிலவழகன் (காரைக்கால்), மாவட்ட தலைவர் வழக்கறிஞர் அரசு.தாயுமானவன், மாவட்ட பொருளாளர் கே. பிச்சைக்கண்ணு, மாணவர் சங்க மாநில துணை தலைவர் ஆறு.பிரகாஷ், மாவட்ட செயலாளர் இரா.ஹரி சுர்ஜித் உட்பட நூற்றுக் கணக்கானோர் கலந்து கொண்ட னர்.