districts

மாற்றுத்திறனாளிகளுக்கு ஏப்.20 இல் விளையாட்டுப் போட்டிகள்

திருவாரூர், ஏப்.6 - தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திருவாரூர் மாவட்டப் பிரிவால் 20.4.2022 காலை 9 மணிக்கு திருவாரூர் மாவட்ட விளையாட்டரங்கில் மாவட்ட அளவி லான மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளம் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள் நான்கு பிரிவுகளாக நடத்தப்பட உள்ளன. இப்போட்டிகளில் திருவாரூர் மாவட் டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் ஆண், பெண் இருபாலரும் பங்கு பெறலாம். பங்கேற் பாளர்களுக்கு வயது வரம்பு கிடையாது. கை, கால் ஊனமுற்றோருக்கு தடகள போட்டிகளில் 50மீ ஓட்டம் மற்றும் குண்டு எறிதல் (கால் ஊனமுற்றோர்), 100 மீ ஓட்டம் (கை ஊனமுற்றோர்), 50 மீ ஓட்டம் (குள்ள மானோர்), 100 மீ சக்கர நாற்காலி போட்டி (இரண்டு கால்களும் ஊனமுற்றோர்) குழு போட்டிகளில் இறகுப்பந்து போட்டி மற்றும் மேசைப்பந்து போட்டிகள் நடைபெறும். பார்வையற்றோருக்கு தடகள போட்டி களில் 50 மீ ஓட்டம் மற்றும் குண்டு எறிதல்  (முற்றிலும் பார்வையற்றோர்), 100 மீ ஓட்டம், நின்ற நிலையில் தாண்டுதல் மற்றும்  சாப்ட் பந்து எறிதல் (மிகக் குறைந்த பார்வை யற்றோர்) குழு போட்டிகளில் சிறப்பு வாலி பால் நடைபெறும். மனநலம் பாதிக்கப்பட்ட வர்களுக்கு தடகள போட்டிகளில் 50மீ, 100மீ  ஓட்டம், சாப்ட் பந்து எறிதல், நின்ற நிலையில்  தாண்டுதல், குழு போட்டிகளில் எறிபந்து  போட்டிகள் நடைபெறும்.

காது கேளாதோ ருக்கு தடகள போட்டிகளில் 100 மீ, 200 மீ ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் மற்றும் 400 மீ ஓட்டம், குழு போட்டிகளில் கபாடி போட்டிகள் நடத்தப்படும். போட்டிகளில் கலந்துகொள்ளும் போட்டி யாளர்கள் நேரடியாக போட்டி நாளன்று போட்டியில் கலந்து கொள்ளலாம். முன் பதிவு கள் ஏதுமில்லை. போட்டிகளில் கலந்து கொள்ள அங்கீகரிக்கப்பட்ட மருத்துவரால் வழங்கப்பட்ட மருத்துவச்சான்று மற்றும் மாவட்ட மறுவாழ்வு அலுவலரால் வழங்கப் பட்ட சான்றுகளை மாவட்ட விளையாட்டு அலு வலரின் பார்வைக்கு காண்பித்திடல் வேண்டும். தடகள போட்டிகளில் ஒவ்வொரு பிரிவி லும் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறு பவர்களுக்கும் குழு போட்டிகளில் முதல்  இரண்டு இடங்களில் வெற்றி பெறுபவர்க ளுக்கும் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும். தடகளம் மற்றும் குழு விளை யாட்டில் மாவட்டப் போட்டிகளில் முதல் இடங்களைப் பெறுபவர்கள், அரசு செலவில்  மாநிலப் போட்டியில் கலந்து கொள்ள அழைத்துச் செல்லப்படுவர். மேற்கொண்டு தகவல்பெற விரும்பு வோர் திருவாரூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் கைப் பேசி எண் 7401703500-ல் தொடர்புகொண்டு விபரங்கள் பெற்றிடலாம் என மாவட்ட ஆட்சி யர் ப.காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

;