districts

தொழிற்பயிற்சி நிலையங்களுக்கான விளையாட்டு போட்டி: மூவலூர் ஏழுமலையான் ஐடிஐ சாம்பியன்

திருவாரூர், நவ.30-  மயிலாடுதுறை மாவட்ட தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களுக்கு இடை யேயான விளையாட்டுப் போட்டிகள், மயி லாடுதுறை சாய் விளையாட்டு மைதா னத்தில் நடைபெற்றது.  இதில், மூவலூர் ஏழுமலையான் ஐடிஐ  மாணவர்கள் தடகளம் மற்றும் குழு விளை யாட்டுப் போட்டிகளில் 74 புள்ளிகள் பெற்று  ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளனர்.  போட்டிகளில் வெற்றி பெற்ற மாண வர்களை ஏழுமலையான் ஐடிஐ-யின் தலை வர் ரவி, தாளாளர் தேவகி, இயக்குநர்கள் காவிய பிரியா, மதுமதி, தொழில் பயிற்சி  நிலைய துணை சேர்மன் ராகவ் தினேஷ், முதல்வர் முருகானந்தம், மேலாளர் துரை  சரவணன், தனலட்சுமி சாய் ஆகியோர் சான்  றிதழ்கள், பதக்கங்கள் மற்றும் கோப்பை களை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

;