districts

img

சமையல் எரிவாயு விலையை கட்டுப்படுத்திடுக! திருவாரூரில் மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

குடவாசல், ஆக.11-  திருவாரூர் மாவட்டம் நன்னி லம் ஒன்றியம், பேரளம் கடைவீதி யில் ஒன்றிய அரசு சமையல் எரி வாயு விலை உயர்வை கட்டுப் படுத்தக் கோரி இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் வியாழனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியத் தலைவர் எம்.பரிமளா மேரி தலைமை வகித்தார். ஒன்றியப் பொருளாளர் ஆர்.சந்திரா முன்னிலை வைத்தார். மாநில துணைத்தலைவர் ஜி.கலை செல்வி, மாவட்ட பொருளாளர் ஆர்.சுமதி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.  போராட்டத்தில் ஒன்றியக் குழு  உறுப்பினர் கே.சரஸ்வதி, டி.அம் சம், ஆர்.ராஜலட்சுமி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், சமையல் எரி வாயு விலை உயர்வை கட்டுப்  படுத்த வேண்டும், அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும்,  நுண் கடன்களை அரசு வங்கி வாயி லாக மகளிர் சுய உதவி குழுவிற்கு வழங்கிட வேண்டும், தமிழக அரசு உயர்த்தியுள்ள மின்சார கட்ட ணத்தை ரத்து செய்ய வேண்டும்,  100 நாள் வேலையில் அரசு அறி வித்த சம்பளம் ரூ.281 குறைக்காமல் வழங்கிட வேண்டும், 100 நாள்  வேலை 150 நாளாக வழங்கிட வேண் டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை கள் வலியுறுத்தப்பட்டன.

;