districts

திருவாரூரில் 108 ஆம்புலன்ஸ் பணிக்கு ஆட்கள் தேர்வு

தஞ்சாவூர், நவ.17- திருவாரூர், தஞ்சாவூர் நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஒருங்கிணைந்த 108 ஆம்பு லன்ஸ் சேவைத் திட்ட மேலாளர் மோகன் வெளியிட்டு உள்ள அறிக்கை:- தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் செயல்படுகிறது. இதில் பணிபுரிய ஓட்டு நர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் பணிக்கான ஆள் சேர்ப்பு முகாம் வரும் 19-ஆம் தேதி சனிக்கிழமை, திருவாரூர் மாவட்டம் விளமல் பகுதியில் உள்ள கஸ்தூரிபாய் பள்ளி வளாகத்தில் நவ. 19-ஆம் தேதி  நடைபெறுகிறது. ஓட்டுநருக்கான கல்வித் தகுதி, பத்தாம்  வகுப்பு தேர்ச்சி. அறிவியல் சார்ந்த பட்டம் பெற்றவருக்கு முன்னுரிமை அளிக்கப் படும். தேர்வன்று 24 வயதுக்கு மேலும் 35 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும். உயரம் 162.5 சென்டிமீட்டருக்கு குறையா மல் இருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் மூன்று ஆண்டு கள் மற்றும் பேட்ஜ் வாகன உரிமம் எடுத்து குறைந்தபட்சம் ஓர் ஆண்டுகள் நிறைவு  பெற்றிருக்க வேண்டும். தேர்வு பெற்றவர் களுக்கு மாத ஊதியமாக ரூபாய் 15,235 (மொத்த ஊதியம்) வழங்கப்படும். தேர்வு  முறையானது, எழுத்துத் தேர்வு, தொழில் நுட்பத் தேர்வு, மனிதவளத்துறை நேர்கா ணல், கண் பார்வைத் திறன்  மற்றும் மருத்து வம் சம்பந்தப்பட்ட தேர்வு, சாலை விதி களுக்கான தேர்வு அனைத்திலும் தேர்ச்சி  பெற்றவர்கள் பத்து நாட்களுக்கு முறை யான வகுப்பறை பயிற்சி வழங்கப்படும். பயிற்சிக் காலத்தில் தங்கும் வசதி செய்து தரப்படும். மருத்துவ உதவியாளருக்கான தகுதி கள் BSc Nursing, GNM, ANM, DMLT (பன்னி ரண்டாம் வகுப்பிற்கு பிறகு இரண்டு ஆண்டு கள் படித்திருக்க வேண்டும்) அல்லது life  science BSc Zoology , Botany, Bio-  Chemistry, Micro biology, Bio technology இதில் ஏதாவது ஒரு பட்டப் படிப்பு முடித்தி ருக்க வேண்டும். மாதம் ஊதியம் ரூபாய் 15,435 (மொத்த ஊதியம்) வழங்கப்படும்.  நேர்முகத் தேர்வு அன்று 19 வயதிற்கு மேலும் 30 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்   மேலும் விவரங்களுக்கு 044- 2888 8060/75/77 அல்லது 7397701801 என்ற எண்  ணுக்கு தொடர்பு கொள்ளலாம்”.

;