திருத்துறைப்பூண்டி, அக்.20 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட் டம் திருத்துறைப்பூண்டி நகர தோழர் வேதையன் 13 ஆம் ஆண்டு நினைவு தினம் வெள்ளியன்று கடைப் பிடிக்கப்பட்டது.
தோழர் வேதையன் நினைவேந்தல் நிகழ்விற்கு நகரச் செயலாளர் கே.கோபு தலைமை வகித்தார். ஒன்றி யச் செயலாளர் டி.வி.காரல் மார்க்ஸ் முன்னிலை வகித் தார். மாநிலக் குழு உறுப்பி னர் ஐ.வி.நாகராஜன் மலர்வளையம் வைத்து செவ்வணக்கம் செலுத்தி னார். மாவட்ட செயற்குழு, மாவட்ட குழு உறுப்பி னர்கள், நகர்மன்ற துணைத் தலைவர் ஜெயபிரகாஷ், முத்துப்பேட்டை ஒன்றி யச் செயலாளர் பழனிச்சாமி உள்ளிட்ட பலர் செவ்வணக் கம் செலுத்தினர்.