districts

img

எம்ஜிஆர் அரசுக் கல்லூரிக்கான கட்டடத்தை நன்னிலம் தொகுதியில் கட்ட வேண்டும் மாணவர் சங்கம் கோரிக்கை மனு

குடவாசல், செப்.22 - திருவாரூர் மாவட்டம் குடவாசல் அரசு  ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்படும் எம்ஜிஆர் அரசு கலைக் கல்லூ ரிக்கு புதிய கல்லூரி கட்டிடம், நன்னிலம் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் கட்ட  வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து இந்திய மாணவர் சங்கத் தின் சார்பாக குடவாசல் வட்டாட்சியர் அலுவ லகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடை பெற்றது. கடந்த 8 ஆண்டுகளாக குடவாசல் அரசு  ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத் தில் செயல்படும் எம்ஜிஆர் கலைக் கல்லூரிக் கான கட்டடத்தை, தற்போது திருவாரூர் தொகுதிக்கு உட்பட்ட செல்லூர் பகுதியில் கட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக  தெரிகிறது. இதை கைவிட்டு, நன்னிலம் தொகுதியிலேயே கல்லூரிக்கான இடத்தை தேர்வு செய்து கட்ட வேண்டும் என வலி யுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. சங்கத்தின் குடவாசல் ஒன்றியத் தலைவர்  மனோஜ் தலைமையில், எம்ஜிஆர் அரசு  கல்லூரியில் இருந்து பேரணியாக புறப்பட்டு,  வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று கல்லூரி மாணவர்கள் குடவாசல் வட்டாட்சி யர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத் தில் ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்டச் செய லாளர் ஆனந்த், மாவட்ட துணைச் செயலாளர்  சூர்யா மற்றும் குடவாசல் ஒன்றிய தலைவர் சுகதேவ் உட்பட 500-க்கும் மேற்பட்ட மாண வர்கள் கலந்து கொண்டனர். பின்னர், போராட்டத்தில் ஈடுபட்ட மாண வர்களிடம் வட்டாட்சியர் குமரவேல் மற்றும்  நன்னிலம் டிஎஸ்பி இலக்கியா, குடவாசல் கல்லூரி முதல்வர் உள்ளிட்டோர் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில், தங்கள் கோரிக் கையை ஏற்றுக் கொள்கிறோம் என எழுதி  கையெழுத்திட்டு உறுதிமொழி அளித்தனர். இதன்பேரில் மாணவர்கள் முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டனர்.

;