districts

சிபிஎம் மூத்த தோழர் பி.என்.தங்கராசு காலமானார்

திருவாரூர், டிச.26- திருத்துறைப்பூண்டி ஒன்றியம், மங்களநாயகி புரத்தைச் சேர்ந்த மூத்த தோழர் பி.என்.தங்கராசு (75) செவ்வாய்க்கிழமை அதிகாலை காலமானார்.

தோழர் பி.என்.தங்கராசு 1977 ஆம் ஆண்டு தோழர் ஏ.பாலசுப்பிரமணியம் முன்னிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை உறுப்பினராக இணைத்துக் கொண்டு செயல்படத் தொடங்கினார். தனது இளமை காலங்க ளில் தீண்டாமைக் கொடு மைகளுக்கு எதிராகப் போராடி வெற்றி பெற்றவர். 

கட்சியின் திருத்துறைப் பூண்டி வட்டச் செயலாளர் மாவட்ட செயற்குழு உறுப்பினர், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத் தின் மாவட்டச் செயலாளர்,  மாநிலக் குழு உறுப்பினர் என பல்வேறு பொறுப்பு களில் திறம்பட பணியாற்றிய வர். 

1996 ஆம் ஆண்டு நடை பெற்ற திருத்துறைப்பூண்டி சட்டமன்றத் தேர்தலில், கட்சியின் சார்பில் வேட்பாளராக போட்டியிட்டு பெருவாரியான வாக்கு களைப் பெற்றார். கிராமப்புற  உழைப்பாளி மக்களை கட்சிக்குள் அணி திரட்டுவ தில் பெரும் பங்காற்றியவர். தனது இறுதி மூச்சுவரை கட்சி பணியாற்றி, தனது 75 ஆவது வயதில் காலமா னார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ்ணன் ஆகியோர், மறைந்த தோழர் தங்கராசு வின் துணைவியாரிடம் கைப்பேசி வழியாக இரங்கல் தெரிவித்து ஆறு தல் கூறினர்.

மேலும் தஞ்சை மாவட்ட  மூத்த தோழர் என்.சீனிவாசன், திருவாரூர் மூத்த தோழர் கே.ரெங்கசாமி ஆகியோரும் அலைபேசி வாயிலாக இரங்கல் தெரிவித்தனர்.

அவரது உடல் கட்சியின் திருத்துறைப்பூண்டி அலுவலகத்தில் பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு மத்தியக் குழு உறுப்பினர் பெ.சண்முகம், தோழர் தங்கராசுவின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, சிபிஐ தேசிய நிர்வாக குழு உறுப்பி னர் கோ.பழனிசாமி, சட்ட மன்ற உறுப்பினர் க.மாரி முத்து, முன்னாள் சட்டமன்ற  உறுப்பினர் வை.சிவபுண்ணி யம், மாவட்டச் செயலாளர் வை.செல்வராஜ், சிபிஎம் நாகை மாவட்டச் செயலா ளர் வி.மாரிமுத்து மற்றும் சிபிஎம் செயற்குழு உறுப்பினர் சி.ஜோதிபாசு, திருத்துறைப்பூண்டி ஒன்றியச் செயலாளர் டி.வி.காரல்மார்க்ஸ், நகரச் செயலாளர் எம்.கோபு, திருவாரூர் மாவட்ட  செயற்குழு, மாவட்ட, ஒன்றியக் குழு உறுப்பினர் கள், அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள், பொது மக்கள் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். 

பின்னர் நடைபெற்ற இரங்கல் நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார். மத்தியக் குழு  உறுப்பினர் பெ.சண்முகம், மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் மற்றும்  அ.பாஸ்கர் (சிபிஐ), வீ. அமிர்தலிங்கம் (சிபிஎம்), எம்.சேகர், பி.கந்தசாமி மற்றும் சிபிஐ தலைவர்கள், வர்க்க வெகுஜன அமைப்பினர் தோழர் பி.என்.தங்கராசுவை நினைவு கூர்ந்து உரை யாற்றினர்.

சிபிஎம் மாநிலக்குழு இரங்கல்
திருத்துறைப்பூண்டி வட்டம், நெடும்பலத்தை சார்ந்த தோழர் பி.என்.தங்கராசு மறைவிற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநிலக் குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள் ளது. இது குறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் விடுத்திருக்கும் அறிக்கை வருமாறு:- 

கட்சியின் மாநில செயலாளராக இருந்த தோழர் ஏ.பாலசுப்பிரமணியம் முன்னிலையில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியில் தன்னை உறுப்பினராக  இணைத்துக் கொண்டு செயல்பட துவங்கிய அவர், தனது இளமை காலங் களில் தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராக நேரடி களம் கண்டு போராடிய வர். 

கட்சியில் தீவிரமாக பணியாற்றிய அவர், கிராமப்புற உழைப்பாளி மக்களை கட்சிக்குள் அணி திரட்டுவதில் பெரும் பங்காற்றியவர். கட்சியின் திருத்துறைப் பூண்டி தாலுகாவின் வட்ட செயலாளராக மூன்று முறையும், மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளராகவும் பல்வேறு பொறுப்புகளில் திறம்பட பணியாற்றியவர். 

1996 ஆம் ஆண்டு நடைபெற்ற திருத் துறைப்பூண்டி சட்டமன்றத் தேர்தலில் கட்சியின் சார்பில் போட்டியிட்டு மக்க ளின் அபிமானத்தோடு பெருவாரியான வாக்குகள் பெற்றார்.அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கும், தோழர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபத்தை யும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.