districts

img

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி பள்ளி மாணவர்களுக்கு மினி மாரத்தான், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

திருவாரூர்/புதுக்கோட்டை/கரூர், ஜூலை 22 - சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடை பெறவுள்ள 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை யொட்டி தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வரு கின்றன.  பள்ளி மாணவர் பங்கேற்ற மினி மாரத்தான்  ஓட்டத்தையும், திருவாரூர் நியூ பாரத் மெட்ரிக் பள்ளி யில் வட்டார அளவிலான பள்ளி மாணவர்களுக் கான செஸ் போட்டியினையும் மாவட்ட வருவாய் அலு வலர் ப.சிதம்பரம் கொடியசைத்து தொடங்கி வைத் தார்.  புதன்கிழமை திருவாரூர் வி.எஸ். ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, வேலுடையார் மேல்நி லைப்பள்ளி, குளிக்கரை அரசு உயர்நிலைப்பள்ளி, புலி வலம் அரசு மேல்நிலைப்பள்ளி, காட்டூர் அரசு மேல் நிலைப்பள்ளி, ஜி.ஆர்.எம். பெண்கள் மேல்நிலைப் பள்ளி, நியூ பாரத் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட  பள்ளிகளை சேர்ந்த 350-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற மினி மாரத்தான் ஓட்டமா னது மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கி, மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நிறைவ டைந்தது. அதனை தொடர்ந்து, நியூ பாரத் மெட்ரிக்  மேல்நிலைப் பள்ளியில் திருவாரூர் வட்டாரத்திற் குட்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் களுக்கிடையேயான செஸ் போட்டியும் நடைபெற்றது.

 புதுக்கோட்டை புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டரங்கத்தில், 44  ஆவது சதுரங்க ஒலிம்பியாட் விழிப்புணர்வு குறித்து,  நீச்சல் குளத்தில் மிதவை செஸ் போட்டி நடைபெற்றது.  இந்நிகழ்வில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் எஸ்.எம்.குமரன் உடனிருந்தார். புதுக்கோட்டை மாவட்டம் முள்ளூர் அரசு உயர் நிலைப் பள்ளியில் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு, சதுரங்க பலகை மற்றும் சதுரங்க காயின் மாதிரி வடிவங்களை வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத் தினர். நிகழ்வுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் நா.ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட  முதன்மைக் கல்வி அலுவலர் சே.மணி வண்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இந்நிகழ்வில் மாவட்ட உடற்கல்வி ஆய்வா ளர் ஆர்.தங்கராஜு, பள்ளி பெற்றோர் ஆசிரியர்  கழகத் தலைவர் எஸ்.நாகராஜன், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் சத்யா ஆகியோர்  சதுரங்க  போட்டி விழிப்புணர்வு குறித்து பேசினர்.  பின்னர் புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டரங்கத்தில் இருந்து நீதிமன்ற வளாகம் வரை செவ்வாய்க்கிழமை விழிப்புணர்வு நடை பேரணி நடைபெற்றது.

கரூர்: 800 மாணவர்கள் பங்கேற்பு
கரூர் மாவட்டத்திலுள்ள அரசு பள்ளிக் கூடங்களில்  சதுரங்க போட்டி (ஜூலை 14, 15,16) ஆகிய நாட்களில் பள்ளிகளில் 6,7 மற்றும் 8 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கும், 9 மற்றும் 10 ஆம் வகுப்பு களில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கும், 11 மற்றும்  12 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவி களுக்கும் மூன்று பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன.  அதனை தொடர்ந்து பள்ளி அளவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு வட்டார அளவிலான போட்டிகள் புதனன்று கரூர் மற்றும் தாந்தோன்றிமலை வட்டாரத்திற்கு கரூர் வெண்ணைமலை சேரன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும், கிருஷ்ணராயபுரம் மற்றும் கடவூர் வட்டா ரத்திற்கு புலியூர் இராமசாமி செட்டியார் அரசு உயர் நிலைப் பள்ளியிலும், க.பரமத்தி மற்றும் அரவக் குறிச்சி வட்டாரத்திற்கு அரவக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், குளித்தலை மற்றும் தோகைமலை வட்டாரத்திற்கு மௌண்ட கீரிஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெற்ற போட்டி களில் 800 மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். வட்டார அளவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவி களுக்கு 25.7.2022 அன்று நடைபெறும் மாவட்ட அள விலான போட்டிகள் நடத்தப்படும். இதில் முதலிடத்தை  பெரும் மாணவ, மாணவிகள் மாநில அளவில் நடை பெறும் போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர்.

;