districts

img

வேட்டைக்காரன் இன மக்களை பழங்குடியினர் பட்டியல் சேர்த்திடுக பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்க மாநாடு கோரிக்கை

திருவள்ளூர், ஏப்.17 - வேட்டைக்காரன் இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டு மென்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வேட்டைக்காரன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட 2ஆவது மாநாடு ஞாயிறன்று (ஏப்.17)  திருவள்ளூரில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், வேட்டைக்காரன் இன மக்களை பழங்குடி பட்டியலில் சேர்க்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை தமிழ்நாடு முதலமைச்சர் நிறைவேற்ற வேண்டும், வேளகாபுரம், எல்லம்பேட்டை, தொளவேடு,  வடமதுரை,செவ்வாய்பேட்டை ஆகிய கிராமங்களில் வாழும் வேட்டைக்காரன் இன மக்களுக்கு குடிமனைப் பட்டா மற்றும் தொகுப்பு வீடுகள் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. மாநாட்டிற்கு, மாவட்ட துணைத் தலைவர்  ஏ.ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாநிலத் தலைவர் என்.எம்.சேட்டு தொடக்க உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் ஜி.ராஜா வேலை அறிக்கையை வாசித்தார். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் ஏ.வி.சண்முகம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜி.சம்பத், மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.தமிழரசன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.டில்லிபாபு மாநாட்டை நிறைவு செய்து பேசினார்.

நிர்வாகிகள்
மாவட்டத் தலைவராக டி.டில்லி, செயலாளராக ஜி.ராஜா, பொருளா ளராக எம்.சுரேஷ்ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

;