districts

விஷ்ணுவாக்கத்தில் சாதிய பாகுபாடு: முதலமைச்சருக்கு சிபிஎம் கடிதம்

திருவள்ளூர், மே16- திருவள்ளூர் அருகில் உள்ள விஷ்ணு வாக்கம் பேருந்து நிறுத்த நிழற் குடை அமைப்பதில் சாதியப் பாகுபாடு கடை பிடிக்கப்படுவதால், தமிழக முதலமைச்சர் இந்த பிரச்சனையில் தலையிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ். கோபால் கேட்டுக் கொண் டுள்ளார். தமிழக முதலமைச்ச ருக்கு  திங்களன்று (மே-16)  கட்சியின் மாவட்ட செயலா ளர் எஸ்.கோபால் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ள விவரம் வருமாறு,  திருவள்ளூர் ஒன்றியம் விஷ்ணுவாக்கத்தில்,   பேருந்து நிழற்குடை அமைக்க வேண்டும் என கடந்த ஓராண்டு காலமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். இதனை தொடர்ந்து  கோட்டாட்சியர் முன்னிலையில் நடை பெற்ற அமைதி பேச்சுவார்த் தையின் போது ஒப்புக் கொண்ட இடத்தில் நிழற் குடை அமைக்காமல், திருவள்ளூர் பிடிஒ அதிகாரி சாதிய பாகுபாட்டுடன் , ஆதிதிராவிட மக்களுக்கு விரோதமாக, நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக வேறு ஒரு இடத்தில் நிழற்குடை கட்டுவதற்கான  பணிகளை திங்களன்று (மே 16) முதல்  மேற்கொண்டு வருகிறார். இச்செயலை  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மை யாக கண்டிக்கிறது. ஏற்கனவே தீர்மானித்த இடத்தில் பேருந்து நிறுத்த நிழற்குடை கட்டவும், தனி நபர் ஆக்கிரமித்து கட்டப் பட்டுள்ள கான்கிரீட் மதில் சுவரை அப்புறப்படுத்தி, அரசு நிலத்தை மீட்க வேண் டும் எனவும் வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருவள் ளூர் மாவட்ட செயலாளர் எஸ்.கோபால் தமிழக முதல மைச்சருக்கு எழுதியுள்ள  கடிதத்தில் குறிப்பிட் டுள்ளார்.

;