districts

img

30 நாட்களில் வீட்டுமனைப்பட்டா வழங்கப்படும்: கோட்டாட்சியர்

திருவண்ணாமலை, பிப். 24- திருவண்ணாமலை மாவட்டம், கலசப் பாக்கம் அடுத்த பட்டியந்தல் கிராமத்தில் 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வந்தனர்.  கடந்த ஆண்டு நீதிமன்ற உத்தரவுப் படி நீர்பிடிப்பு பகுதியில் இருந்த வீடுகள்  அகற்றப்பட்டன. இதில் அங்கு குடியிருந்த வர்களின் வீடுகளும் பாதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்டவர்களுக்கு வீட்டமனைப் பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் கிராம மக்கள், கலசப்பாக்கம் தாலுக்கா அலுவலக முற்றுகை உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இதையடுத்து, பாதிக்கப்பட்ட அனை வருக்கும் அரசு சார்பில் வேறு இடத்தில் மாற்று இடம் வழங்குவதாக அதிகாரிகள் கூறினர். ஆனால் இதுவரை வீடுகள் வழங்கப் படவில்லை. இதைக் கண்டித்து மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விசிக சார்பில்  பட்டியந்தல் காளியம்மன் கோவில் அருகில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவல கம் வரை 2 நாள் நடைபயண இயக்கம் தொடங் கப்பட்டது. சிபிஎம் ஒன்றியச் செயலாளர் பி.சுந்தர், விசிக ஒன்றியச் செயலாளர் சொ.ராஜா ஆகியோர் தலைமை தாங்கினர். சிபிஎம் மாவட்டச் செயலாளர் எம்.சிவக் குமார், விசிக மாவட்டச் செயலாளர் பு.செல்வம் ஆகியோர் நடைபயணத்தை தொடங்கி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஆரணி கோட்டாட்சியர் தனலட்சுமி மற்றும் கடலாடி  காவல் துறையினர் நேரில் சென்று நடை பயண இயக்கத்தினரிடம்  பேச்சுவார்த்தை நடத்தி, 30 குடும்பத்தினருக்கும் ஒரு மாதத்திற்குள் பட்டியந்தல் கிராமத்தில் இடம் தேர்வு செய்து பட்டா வழங்கப்படும் என்று கூறினர். இதையடுத்து, நடைபயண  இயக்கம் தற்காலிகமாக ஒத்திவைக்கப் பட்டது. இதில் சிபிஎம் நிர்வாகிகள் எம்.வீரபத்தி ரன், ப.செல்வன், எம்.பிரகலநாதன், ஏ.லட்சு மணன், கே.கே.வெங்கடேசன், டி.கே.வெங்கடேசன், எஸ்.குமரன் உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டனர்.

;