districts

img

மாணவர்களுக்கு இலவச மல்யுத்தப் பயிற்சி: திருவண்ணாமலை மல்யுத்த கழகம் கோரிக்கை

திருவண்ணாமலை, ஏப். 20- திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொது மக்களுக்கு கோடைக் கால இலவச மல்யுத்தப் பயிற்சி முகாம் நடத்துவதென மாவட்ட மல்யுத்தக் கழக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருவண்ணாமலை மாவட்ட மல்யுத்தக் கழகத்தின் பொதுக்குழுக் கூட்டம் திருவண்ணாமலையில் நடை பெற்றது. மாவட்ட சேர்மன் ஏ.ஏ.ஆறு முகம் தலைமை வகித்தார். செயலாள ரும், மல்யுத்தப் பயிற்சியாளருமான ஏ.அருண்குமார் வரவேற்றார். பள்ளித் தாளாளரும், திருவண்ணாமலை மாவட்ட மல்யுத்த கழகத்தின் தலை வருமான சீனி.கார்த்திகேயன் பங்கேற்று விளையாட்டுப் பொருட்களை வழங்கிப் பேசினார்.தமிழ்நாடு மல்யுத்த சங்கத்தின் முன்னாள் துணைச் செயலாளர் என்.சுரேஷ்குமார் விளையாட்டு வீரர்களை வாழ்த்திப் பேசினார்.  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி மாவட்ட அளவிலான மல்யுத்தப் போட்டி நடத்துவது. திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாண வர்கள், மல்யுத்தத்தில் ஆர்வமுள்ள பொதுமக்களுக்கு கோடைக் கால சிறப்பு மல்யுத்தப் பயிற்சி முகாமை இலவசமாக நடத்துவது. மாநில அளவிலான மல்யுத்த சாம்பி யன்ஷிப் போட்டியை விரைவில் திருவண்ணாமலையில் நடத்துவது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், மாவட்ட எரிபந்து சங்கத்தின் அமைப்புச் செயலாளர் பி.உதயமுருகன், மாவட்ட மூத்தோர் தடகள சங்கத்தின் இணைச் செய லாளர் டி.விஜய் ஆனந்த், மாவட்ட கேரம் சங்கத்தின் செயலாளர் பி.ராஜா, மாவட்ட மல்யுத்த கழக துணைத் தலைவர் பி.விஜய்குமார், துணைச் செயலாளர் பி.சுரேஷ், சட்ட ஆலொசகர் டி.கிஷோர்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

;