திருவண்ணாமலை, மார்ச் 26- திருவண்ணாமலை போளூர் சாலையில் ஈசானிய மைதானத்தில் நகராட்சிக்கான குப்பை கிடங்கு உள்ளது. நகராட்சி பகுதியில் சேகரி க்கப்படும் குப்பைகள், வாகனங்க ளில் கொண்டு வரப்பட்டு இங்கு கொட்டப்படுகிறது. இந்த இடத்தில் பல வருடங்களாக குப்பை கிடங்கு செயல்பட்டு வருவதால் இங்கு மலை போல் குப்பைகள் குவிந்துள்ளன. இந்த குப்பை கிடங்கை தொழில் நுட்ப ரீதியாக மேம்படுத்தாததால், சுற்றுச்சூழலை பாதிக்கும் நிலை உருவாகியுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி குற்றச்சாட்டு தெரி வித்துள்ளது. இது குறித்து கட்சி யின் திருவண்ணாமலை நகர செய லாளர் எம்.பிரகலநாதன், நகர குழு நிர்வாகிகள் இலியாஸ்சர்க்கார், நீதிமாணிக்கம், பழனி, வெங்க டேசன், பஞ்சமூர்த்தி உள்ளிட்டோர் ஈசானிய மைதானத்தில் ஆய்வு மேற் கொண்டனர். பின்னர், நகராட்சி அலு வலகத்தில் சுகாதார ஆய்வாளர் மால்முருகனை சந்தித்து, நகராட்சி குப்பை கிடங்கை மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்த னர். அப்போது, அவர்கள் கூறிய போது, ஈசானிய மயானம் பகுதி யிலேயே குப்பைகள் கொட்டப்பட் டுள்ளது. அதை அகற்ற வேண்டும், குப்பைகளை தரம் பிரிப்பதில் தொழில்நுட்பரீதியாக மேம்படுத்தி, துர்நாற்றம் வீசுவதை தடுக்க வேண் டும், மேலும், அடிக்கடி குப்பை கிடங்கு தீப்பிடிப்பதை தடுக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.