districts

img

தீப விழா: அடிப்படை வசதிகளை ஏற்படுத்த பொதுமக்கள் கோரிக்கை

திருவண்ணாமலை, நவ. 16- திருவண்ணாமலை நகருக்கு ஒவ்வொரு மாத பௌர்ணமி தோறும் லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். கார்த்திகை மாத தீப விழாவின்போது 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்கின்றனர். திருவண்ணாமலை நகரில் அமைந்துள்ள 14 கிலோமீட்டர் சுற்றளவு உள்ள மலை சுற்றும் சாலையில் ஏராளமான மக்கள் பயணம் செய்கின்றனர். இந்த சாலையில உள்ள கழிவறைகள் பூட்டி வைக்கப் பட்டுள்ளது. குடிநீர் மையங்களிலும் குடிநீர் வழங்கப்படு வதில்லை. இதனால் மலையை சுற்றி வரும் ஏராளமான மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். தீப விழா நடைபெற உள்ள சூழ்நிலையில், குடிநீர் வழங்கும் மையங்களில் தினசரி குடிநீர் வழங்கவும், கழி வறைகளை திறந்து தினசரி பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;