districts

img

வைப்பு தொகைக்கு உண்டியல் வசூல் செய்த சிபிஎம் வேட்பாளர்!

திருவண்ணாமலை, பிப். 3- திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகராட்சி தேர்தலில் சிபிஎம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ந.ராதாகிருஷ்ணன் கட்சி நிர்வாகிகளுடன் சென்று பொது மக்களிடம் உண்டியல் மூலம் நிதி திரட்டி தேர்தல் வைப்பு தொகையை செலுத்தினார். அவ ருக்கு பொதுமக்கள் உற்சாகமாக நிதி வழங்கினர்.   திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, வந்தவாசி, ஆரணி, திருவத்திபுரம் ஆகிய நகராட்சிகள் உள்ளன. இதில் வந்தவாசி நகராட்சி, வந்தவாசி சட்டமன்றத் தொகுதிக்கும், ஆரணி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். வந்தவாசி நகராட்சி 1942 ஆம் ஆண்டு தேர்வு நிலை பேரூ ராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. 1986ஆம் ஆண்டு வரை சிறப்பு நிலை பேரூராட்சியாக செயல்பட்டது. 1994ஆம் ஆண்டு மூன்றாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. 1998ஆம் ஆண்டு இரண்டாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. ஆங்கிலேயர்கள் சுமார் 200 ஆண்டுகள் இந்தியாவை ஆளு வதற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்த, பிரெஞ்சுப் படைகளும், ஆங்கிலப்படைகளும் மோதிக்  கொண்ட வரலாற்று சிறப்பு மிக்க வந்த வாசி போர் கி.பி.1760இல் நடை பெற்றது. இந்த நகராட்சியில் மொத்தம் 24 வார்டுகள் உள்ளன. வந்தவாசி நகராட்சியை அடுத்துள்ள அதியங்குப்பம், கீழ்குவளைவேடு, காரம் உள்ளிட்ட பகுதிகளில் தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கின்றனர்.

இவர்களுக்கு குடிமனைப் பட்டா வழங்க வேண்டும், குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதி களை ஏற்படுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடந்த காலங்களில் பலகட்ட போராட்டங்களை நடத்தியுள்ளது. ஏழை, எளிய மக்களின் வாழ்வா தாரத்தை செங்கொடி இயக்கம் மேம்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் வந்தவாசி நகராட்சி 21ஆவது வார்டில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ந.ராதாகிருண்ணன் வியாழனன்று (பிப். 3) வேட்புமனு தாக்கல் செய்தார். முன்னதாக மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் பொதுமக்களிடம் உண்டியல் வசூல் இயக்கம் நடைபெற்றது. பொது மக்கள் மனமுவந்து செங்கொடி இயக்க வேட்பாளருக்கு நிதி வழங்கி னர். இதில் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார், வட்டார செயலாளர் அப்துல்காதர், செயற்குழு உறுப்பினர்கள் எம்.வீரபத்திரன், பாரி, மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சரவணன், மாவட்டச் செயலாளர் மாரிமுத்து, மாவட்டக் குழு உறுப்பினர் சிவ ராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

பெரணமல்லூர் பேரூராட்சி
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டத்தில் ஆரணி வந்த வாசி நெடுஞ்சாலையை ஒட்டி பெரண மல்லூர் 2ஆம் நிலை பேரூராட்சி உள்ளது. மொத்தம் 12 வார்டுகள் உள்ளன. இந்த பேரூராட்சியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. நெல், கரும்பு உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த 2011ஆம் ஆண்டு வரை பெரணமல்லூர் சட்டமன்ற தொகுதி யாக இருந்தது. தொகுதி மறு சீரமைப்பினால், பெரணமல்லூர் தொகுதி வந்தவாசி, ஆரணி, போளூர் உள்ளிட்ட தொகுதிகளில் இணைக்கப்பட்டு, தற்போது பெரணமல்லூர் பேரூராட்சி வந்தவாசி தனித் தொகுதியில் உள்ளது. பெரணமல்லூர் பேரூ ராட்சிக்கு போதிய பேருந்து வசதி, நிலையான பேருந்து நிலை யம் இல்லாததால் மக்கள் அவதிப்படுகின்றனர். பெரண மல்லூர் பகுதி மக்களின் கோரிக்கை களுக்காக கருத்தாலும், கள இயக்கங்களினாலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடி வருகிறது. இந்நிலையில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் வார்டு 1-இல் போட்டியிடும் மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மா.கௌதம் போட்டியிகிறார். மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் எம்.வீரபத்திரன், ப.செல்வன் ஆகியோர் தோழமைக் கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு கோரினர்.

;