districts

img

ஜவ்வாது மலை பள்ளியில் காலை உணவு திட்டம் அறிமுகம்

திருவண்ணாமலை,செப்.7- தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்த காலை உணவு திட்டத்தை முதன் முதலாக திருவண்ணாமலை மாவட்டம்  ஜவ்வாது மலை யில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் செயல்படுத்துவது குறித்து மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் கூறிய தாவது:- காலை உணவு திட்டத்தின் மூலம் ஜவ்வாது ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 40 ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி களில் பயிலும் 975 மாண வர்கள், 912 மாணவிகள் என மொத்தம் 1,887 மாண வர்கள் பயன் பெறுவர் கள். வாரத்தில் 5 நாட்க ளுக்கு உணவு பட்டியலின் படி காலை உணவு வழங்கப்படும் திங்கட் கிழமை சேமியா உப்புமா, காய்கறி சாம்பார். செவ்வாய்க்கிழமை ரவா காய்கறி கிச்சடி, புதன்கிழமை வெண் பொங்கல், காய்கறி சாம்பார், வியாழக்கிழமை ரவா உப்புமா, காய்கறி சாம்பார், வெள்ளிக்கிழமை ரவா காய்கறி கிச்சடி, ரவா கேசரி என வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரி வித்தார். முன்னதாக ஜமுனா மரத்தூர் ஊராட்சி ஒன்றி யம் வதியன் கொட்டாய் தொடக்கப் பள்ளி, கோவி லூர் ஊராட்சி பெருங்காட்டூர் மற்றும் குண்டாலத்தூர், பாக்குமுடையனூர் (குறிய லூர்), கோவிலானூர் ஆகிய ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள் மற்றும் உண்டு உறை விடப் பள்ளிகளில் மாண வர்களுக்கு வழங்கப்படும் உணவு தரம், அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து பலாமரத்தூர் ஊராட்சியில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பாக அரசு தேனீ பூங்காவில் நடை பெற்று வரும் பணியை நேரில் சென்று பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டு மரக்கன்றுகளை நட்டார்.

;