districts

img

ஆசியன் மெடிக்கல் அகாடமி பட்டமளிப்பு விழா

திருவண்ணாமலை, மே 24- திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில், ஆசியன் மெடிக்கல் அகாடமியின் பட்டமளிப்பு விழாவும், விருதுகள் வழங்கும் விழாவும் முகமது இஸ்மாயில் நினைவு அறக்கட்டளைத் தலைவர் டி.எம்.பீர்முகம்மது தலைமையில் நடைபெற்றது. முன்னாள் சுகாதார நலப்பணிகள் இணை இயக்குநர் டாக்டர். குமார், செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி சிறுநீரகத் துறை பேராசிரியர் டாக்டர் சுதாகரன், மகளிர் சிறப்பு அரசு மருத்துவர் டாக்டர். முனுலட்சுமி, என்.எஸ் மருத்துவமனை டாக்டர் செல்வமுத்துகுமாரசாமி, டாக்டர் கோகுலகிருஷ்ணன் ஆகியோர் பட்டம் மற்றும் விருதுகளை வழங்கினர். நிகழ்வில் அன்னை தெரசா விருது, ப்ளாரன்ஸ் னநட்டிங்கேல் விருது, கல்பனா சாவ்லா விருது, சிராஜூல் மில்லத் விருது, காமராஜர் விருது, டாக்டர் அப்துல் கலாம் விருது, அன்னிபெசன்ட் அம்மையார் விருது என 12 விருதுகள் வழங்கப்பட்டன. 60 மாணவர்கள் பட்டங்களை பெற்றனர். முன்னதாக நிறுவனர் ரகமத்துல்லா வரவேற்றார். அகாடமி தாளாளர் ஆசியாபர்வீன் நன்றி கூறினார்.

;