districts

திருப்பூர் முக்கிய செய்திகள்

ரூ.8 கோடி மோசடி திருச்சி நிறுவனத்தின் மீது புகார்

திருப்பூர், ஜூன் 16- அதிக லாபம், இரட்டிப்பு பணம் தருவதாக கூறி சுமார் ரூ.8  கோடி வசூலித்த திருச்சி எல்பின் நிறுவன உரிமையா ளர்கள் மீது நடவடிக்கை எடுத்து தங்கள் பணத்தை மீட்டு  தர கோரி திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத் தில் பாதிக்கப்பட்டோர் புகார் மனு அளித்துள்ளனர். திருச்சி, மன்னார்புரத்தில் எல்பின் என்ற நிறுவனம், செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளர்களாக ராஜா  (50), ரமேஷ் (45) ஆகியோர் இருந்தனர். இவர்கள், தங்கள்  நிறுவனத்தில் பணம் டெபாசிட் செய்தால், அதிக வட்டி,  குறைந்த காலத்தில் இரட்டிப்பு பணம் என பல கவர்ச்சிகர மான திட்டங்களை அறிவித்தனர். திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களைச் சேர்ந்தவர் கள், 1,000 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், அவர்கள் கூறியபடி, டெபாசிட் முதிர்ச்சி அடைந்தும், பணத்தை திருப்பித் தரவில்லை. இதுகுறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசில்  பலர் புகார் அளித்துள்ளனர். இந்த நிலையில், திருப்பூரை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் வியாழனன்று புகார் மனு அளித் தனர்.  அதில், எல்பின் நிர்வாகிகள் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உரிமையாளர்களான ராஜாவும், ரமேஷும் தலைமறைவாகி விட்டனர். எங்களது பணம்  மட்டுமே ரூ.8 கோடிக்கு மேல் இருக்கும். எனவே போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து எங்களது பணத்தை மீட்டு தர  வேண்டும் என தெரிவித்துள்ளனர்.


வளர்ச்சி திட்டப்பணிகள் ஆய்வு

 திருப்பூர் ஜூன் 16- கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் காங்க யம் நகராட்சிக்கு உள்பட்ட அண்ணா நகரில் பதுமன் குளத்தை தூர்வாரும் பணிகள், வாரச் சந்தை வளாகத்தில்  கடைகள் கட்டும் பணி, நமக்கு நாமே திட்டத்தில் அய்யாசாமி  நகரில் மழைநீர் வடிகால் கட்டும் பணி உள்ளிட்ட பணிகள்  நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை நகராட்சி, நிர்வாக  இயக்குநர் பா.பொன்னையா ஆய்வு மேற்கொண்டார். நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் கி.ராஜன், நகராட்சி  நிர்வாக மண்டல பொறியாளர் பாலச்சந்திரன், காங்கயம் நகர்மன்றத் தலைவர் ந.சூரியபிரகாஷ், நகராட்சி ஆணையர்  எஸ்.வெங்கடேஷ்வரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


மாணவிக்கு பாலியல் சீண்டல் ஆசிரியர் பணியிடை நீக்கம்

திருப்பூர், ஜூன் 16- பல்லடம் அருகே உயர்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு  மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர் பணி யிடை நீக்கம் செய்யப்பட்டார். திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த சேகாம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக பணி யாற்றி வந்தவர் செந்தாமரைக் கண்ணன் (45). இவர் பள்ளி யில் 9ஆம் வகுப்பு பயிலும் மாணவியிடம் பாலியல் சீண்ட லில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இந்த புகாரை அடுத்து மாவட்ட கல்வி அலுவலர் ஆனந்தி மற்றும் போலீசார் பள்ளி யில் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் ஆசிரியர்  செந்தாமரை கண்ணனை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்  திருவளர்செல்வி உத்தர விட்டார்.


நீரில் மூழ்கி சிறுவன் பலி

அவிநாசி, ஜூன் 16-  அவிநாசி தபால் அலுவலகம் வீதி பங்களா தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜ் (40). இவரது மனைவி  சத்தியா (35). இவர்களது மகன் ரகுநந்தன் (4). அங்கன்வாடி மையத்தில் பயின்றுவருகிறார். இந்நிலையில்,புதனன்று சத் தியா அவிநாசியில் தான் பணிபுரியும் புத்தகக் கடைக்கு மகன்  ரகுநந்தனை அழைத்துச் சென்றுள்ளார், அருகில் விளை யாடிக் கொண்டிருந்த சிறுவன் சிறிது நேரம் கழித்துக் காண வில்லை. அருகாமையில் தேடியபோது, சிறுவன் தண்ணீர்த்  தொட்டிக்குள் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. இச்சம் பவம் குறித்து அவிநாசி காவல்துறைடினர் விசாரணை செய்து வருகின்றனர்.