தாராபுரம் அமராவதி ஆற்றுப்படுகையில் அதிகாரிகளின் ஆய்விற்கு பின்னரும் மாயமான மணல்
தாராபுரம், ஜுலை 8 - தாராபுரம் அமராவதி ஆற்றுப்படுகையில் சேர்த்து வைக்கப்பட்ட கடத்தல் மணல் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து சென்ற நிலையிலும், அம்மணல் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. தாராபுரம் அலங்கியம் ரோடு, ஏரண மேடு பகுதியில் அமராவதி ஆற்றுப்படு கையில் இருந்து பாதை அமைத்து மணல் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இரவு நேரங்களில் நடைபெறும் இந்த மணல் திருட்டு குறித்து ஏரணமேடு பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் சார் ஆட்சியரிடம் தொலைபேசி முலம் புகார் அளித்தார். இதையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகளும், காவல்துறை அதிகாரி களும் சம்பவ இடத்திற்குச் சென்றனர். ஆனால், அதற்குள் மணல் கடத்தலில் ஈடுபட்ட வாகனங்கள் அவசரமாக வெளி யேற்றப்பட்டு விட்டது.
திருப்பூரில் இன்று மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு
திருப்பூர், ஜூலை 8 - திருப்பூரில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கில் பங்கேற்க தொழில் நிறுவனங்கள், பொதுமக்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் க.சிவகுமார் அழைப்பு விடுத்துள்ளார். மத்திய அரசின் “ஜல் சக்தி அபியான்” திட்டத்தில் மழை நீர் சேகரிப்பது தொடர் பான விழிப்புணர்வு கருத்தரங்கு கல்லூரி சாலையில் உள்ள சமுத்திரா கிராண்ட் மஹாலில் வரும் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி அளவில் நடைபெறுகிறது. இதில், குடிநீர் பற்றாக்குறையைத் தீர்ப்பது குறித்தும், மழைநீரை சேமிப்பது குறித்தும் ஸ்காட்லாந்து நாட்டின் மழை நீர் விழிப்புணர்வு மையத்தின் வல்லு நர் கே.சிவகுமார் பங்கேற்று சிறப்புரை யாற்றுகிறார். ஆகவே, திருப்பூர் மாநக ரில் உள்ள தொழில்நிறுவனங்கள் மற் றும் மக்கள் இக்கருத்தரங்கில் பங்கேற்று பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட் டுள்ளது.
பொறியியல் நுழைவு இணையதள பக்கம் திறக்காததால் மாணவர்கள் பதற்றம்
திருப்பூர், ஜூலை 8 - தமிழகத்தில் பொறியியல் படிப்பில் சேர்வதற்கு விருப்பமான கல்லூரியை தேர்வு செய்வதற்கான இணையதள பக்கம் திங்களன்று காலை பல மணி நேரம் திறக்காததால் மாணவர்கள் பதற்றமடைந்து அவதிப்பட்டனர். தமிழகத்தில் பி.இ., பி.டெக் படிப்புக ளுக்கு மாணவர் சேர்க்கைக்கான இணை யவழி கலந்தாய்வை (ஆன்லைன் கவுன் சிலிங்) தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் நடத்துகிறது. இதில் மாண வர்கள் பெறக்கூடிய மதிப்பெண் அடிப் படையில் மொத்தம் நான்கு சுற்றுகளாக கலந்தாய்வுக்கான இணையவழி பதிவு நடைபெறுகிறது. பொறியியல் நுழைவுக்கு, 200 முதல் 178 வரை தகுதி மதிப்பெண்கள் பெற்றவர்கள், முதல் மாணவரில் இருந்து 9872 பேருக்கு முதல் சுற்று இணைய வழி கலந்தாய்வு ஜூலை 8ஆம் தேதி முதல் 10ஆம் தேதி முடிய மூன்று நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக ஜூலை 3ஆம் தேதி முதல் முதல்கட்ட தொகையைச் செலுத்திய மாணவர்கள் இதில் தங்களுக்கு விருப்பமான கல்லூரியை தேர்வு செய்து வைக்க வேண்டும். தோராயமான தேர்வு பட்டியல் ஜூலை 11ஆம் தேதி வெளியி டப்படும். 11ஆம் தேதியும், 12ஆம் தேதியும் ஒதுக்கீடு செய்யப்பட்ட கல்லூரி விப ரத்தை மாணவர்கள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அதன் அடிப்படையில் 13ஆம் தேதி இறுதி ஒதுக்கீடு விபரம் வெளியிடப்படும். இதற்காக பொறியியல் கல்லூரியில் சேர தகுதி மதிப்பெண் பெற்றிருந்த மாண வர்கள் இணையவழி முதல் சுற்றில் தங்கள் விருப்பக் கல்லூரியை தேர்வு செய்வதற்கு திங்களன்று முயற்சி செய்தனர். ஆனால் பல பகுதிகளில் கணினியில் இணையவழி கலந்தாய்வுக்கான பக்கம் திறக்கவில்லை. பல மணி நேரம் இந்த நிலை நீடித்ததால் மாணவர்கள் பதற்றமடைந்தனர். பல்வேறு பகுதிகளிலும் இதுபோல் கணினியில் இணையப் பக்கம் திறக்காததால் மாண வர்கள் அதிருப்தி அடைந்தனர். மாணவர் கள் முக்கியமான தங்கள் எதிர்காலக் கல் விக்கான கல்லூரியைத் தேர்வு செய்யும் நிலையில் இதுபோன்ற குளறுபடிகளை தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தவிர்த் திருக்க வேண்டும் என்று மாணவர்களும், பெற்றோரும் கூறினர்.
தாராபுரம் நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு கூட்டம்
தாராபுரம், ஜுலை 8 - தாராபுரம் நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் 1986 பிரிவுகள் 3, 6, 25 அடிப்படையில் மத்திய அரசு திடக்கழிவு மேலாண்மை பணிகளை முறைப்படுத்த திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016 ஐ இயற்றியுள்ளது. இச்சூழ லில் தாராபுரம் நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் திடக்கழிவு மேலாண்மை விழிப் புணர்வு கூட்டம் ஆணையாளர் லட்சு மணன் தலைமையில் நடைபெற்றது. இதில் தாராபுரம் நகராட்சிக்குட்பட்ட உண வகங்கள் உரிமையாளர்கள், மொத்த கழிவு உருவாக்குபவர்கள் மற்றும் குடியிருப் போர் நலச்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதில் தாராபுரம் நகராட்சி எல்லைக் குட்பட்ட பகுதிகளில் கழிவுகளை உரு வாக்குபவர்கள் நகராட்சி நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து கழிவுகளை கண்ட இடங்களில் கொட்டாமல் தவிர்க்கவும், நகரின் சுகாதாரத்தை மேம்படுத்தவும் கழிவுகளை தரம் பிரித்து நகராட்சியின் வழிகாட்டுதலின்படி அப்புறப்படுத்துவது உள்பட பல்வேறு விதிமுறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.