districts

img

கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த 9 குழந்தைகளுக்கு ரூ.45 லட்சம் நிதியுதவி

திருப்பூர், செப்.3–

கொரோனா தொற்றில் பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகள் 9 பேருக்கு தலா ரூ.5 லட்சம் வீதம் மொத்தம் ரூ.45 லட்சத்தை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் வியாழ னன்று வழங்கினார்.

கொரோனா பெருந்தொற்றில் பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம், தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.3 லட்சம் உதவி நிதி தமிழக முதல்வர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என்று  முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.அத்துடன் பெற்றோரை இழந்து உறவினர் அல்லது பாதுகாவலர் வசம் வாழும் குழந் தைகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் வீதம் 18 வயது நிறைவடை யும் வரை பராமரிப்புத் தொகை வழங்கவும், அரசு இல்லங்க ளில் முன்னுரிமை, கல்வி மற்றும் விடுதி செலவுகள், பட்டப்ப டிப்பு முடியும் வரை அனைத்து செலவுகளையும் அரசு ஏற்கும் என்றும் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் ஏற்கெனவே அமைச்சர் கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் பெற் றோரை இழந்த மூன்று குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம்  வீதம் ரூ.15 லட்சம் நிவாரண நிதி வழங்கி இருந்தனர். அத்து டன் பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகள் 4 பேருக்கு ரூ.3 லட்சம் வீதம் ரூ.12 லட்சம் அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. 9 குழந்தைகளுக்கு ரூ.45 லட்சம் உதவி நிதி  வழங்கிய நிகழ்வில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவ லர் ம.செல்வம், நன்னடத்தை அலுவலர் து.நித்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.

;