மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர் கோரிக்கை மற்றும் போராட்டத்தின் விளைவாக மனமகிழ் மன்றம் கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது.
உடுமலை அரசு மருத்துவமனைக்கு எதிரே நகராட்சிக்கு சொந்தமான 97 சென்ட் இடம் உள்ளது. இந்த இடத்தில் பல வருடகாலமாக சில உள்ளூர் வசதி படைத்த நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து, மனமகிழ் மன்றம் என்ற பெயரிலும், வணிக நோக்கில் கடைகளையும் கட்டி வாடகை வசூல் செய்து வருகின்றனர். இது நகாரட்சி சட்ட விதிகளுக்கு புறம்பாக உள்ளது என கடந்த 2017 ஆம் வருடம் நகராட்சி ஆணையர் சரவணக்குமார் 11.04.2017ஆம் தேதி விதி முறைகள் மீறிய கட்டிடங்கள் என மூன்று அறைகளுக்கு சீல் வைத்தார். பின்னர் ஆய்வின்படி 16.05.2017 ஆம் தேதி நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் வியாபார நோக்கில் கட்டபட்ட கடைகளுக்கும் 17 ஆம் தேதி முன் பகுதி கட்டிடத்திற்கும் சீல் வைத்து, மனமகிழ் மன்றம் உள்ள அனைத்து பகுதிகளும் உடுமலை நகாரட்சிக்கு சொந்தம் எனவும், விரைவில் இடம் பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என தெரிவித்தார்கள். ஆனால் மக்கள் பயன்பாட்டுக்கு வராமல் இருந்தது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பல போராட்டம் நடத்தியதன் விளைவாக கடந்த 2021 ஆம் ஜீலை மாதம் ஆண்டு பேரிடர் மேலாண்மை சட்டத்தின் படி மனமகிழ் மன்ற கட்டிடம் மற்றும் இந்த இடத்தில் கொரானா பரிசோதனை மையத்தையும், மருத்துவமனை ஊழியர்கள் ஓய்வுக்கும் மற்றம் அரசு வாகனங்கள் என அரசு மருத்துவமனை பயன்பாட்டிற்கு வருவாய்துறை நிர்வாகம் கொண்டுவந்தது. சிறப்பாக செயல்பட்டு வந்த சிறப்பு பிரிவுகள் எந்த காரணமும் இல்லாமல் சில மாதங்களாக மீண்டும் மனமகிழ் மன்றமாக செயல்பட்டு வந்தது.
அரசு இந்த இடத்தில் நிரந்தரமாக கொரானா சிறப்பு சிகிச்சை மையமாக மாற்ற வருவாய் துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தமிழக அரசு தாமதம் செய்யாமல் அரசு மருத்துவனையின் விரிவாக்க பணிகளுக்கு இந்த இடத்தை பயன்படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில், மார்க்சிஸ்ட் கட்சியின் தொடர் கோரிக்கை மற்றும் போராட்டத்தின் விளைவாக தற்போது மனமகிழ் மன்றம் கொரோனா சிறப்பு சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது.