districts

விவசாயிகளுக்கு தென்னங்கன்று விசைத்தெளிப்பான்கள்

திருப்பத்தூர்,மே 22 திருப்பத்தூர் மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட 51, கிராம பஞ்சாயத்துகளில் விசைத் தெளிப்பான்கள் விதைகள் தென்னை கன்றுகள், உள்ளிட்ட பொருட்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து இணை இயக்குநர் ராஜசேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருப்பத்தூர் மாவட்டத்தில் தமிழக அரசின் வேளாண்மை ஊழவர் நலத்துறை கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.  இத்திட்டத்திற்காக 51, கிராம ஊராட்சிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தை முதலமைச்சர்  ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதனை கிராம பஞ்சாயத்துகளில் திங்கட்கிழமை அந்தந்த கிராம பஞ்சாயத்துகளில் விவசாயிகள் ஒருங்கிணைந்து தொலைக்காட்சி மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யபட்டு திட்ட பயனாளிகளுக்கு விசைத் தெளிப்பான்கள், தென்னங் கன்றுகள் பயிறு வகைகள் கைத் தெளிப்பான், காய்கறி விதைகள் மற்றும் உளுந்து விதைகள், உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில் உழவர்நலத்துறை, தோட்டக்கலை துறை, வேளாண்மை பொறியியல் துறை, வேளாண்விற்பனைத்துறை அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

;