districts

சென்னை முக்கிய செய்திகள்

மக்களை தேடி மருத்துவம்: 63,531 பேருக்கு சிகிச்சை
திருப்பத்தூர், ஜன.25 - திருப்பத்தூர் மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் 63,531 பேருக்கு சிகிச்சையும், 3 லட்சம் பேருக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை  அளவு பரிசோதனைகளும் செய்யப்பட்டுள்ளன என ஆட்சியர் அமர் குஷ்வாஹா தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின்  மூலம் தொற்றா பிரிவு நோயாளிகளுக்கு என் இயன்முறை சிகிச்சைகள்,  வீடு சார்ந்த மருத்துவ சிகிச்சை, பெரிடோனியல் டயாலிசிஸ் போன்ற சிகிச்சைகள் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் இதுநாள் வரை திருப்பத்தூர் ஊராட்சி  ஒன்றியத்தில் 2,185 பேரும், கந்திலி ஊராட்சி ஒன்றியத்தில் 9,837 பேரும்,  ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 12,450 பேரும், நாட்றம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் 7,160 பேரும், ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியத்தில் 8,065 பேரும், மாதனூர் ஊராட்சி ஒன்றியத்தில் 19,441 பேரும், திருப்பத்தூர்  நகராட்சியில் 645 பேரும், வாணியம்பாடி நகராட்சியில் 1,265 பேரும், ஆம்பூர் நகராட்சியில் 2,484 பேரும் என மொத்தம் 63,531 பேர் பயனடைந் துள்ளனர். மேலும், 3 லட்சம் பேருக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு  பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயனடைய அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளையும், ஆரம்ப சுகாதார நிலையங் களையும் அணுகி பயன் பெறலாம் என்றும் ஆட்சியர் அமர் குஷ்வாஹா  தெரிவித்துள்ளார்.

காளை முட்டிய முதியவர் பலி
வேலூர், ஜன. 25- வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த மேல்மாயில் கிராமத்தில்  கடந்த 21ஆம் தேதி மாடு விடும் விழா நடைபெற்றது. அணைக்கட்டு அடுத்த மருதவல்லி பாளையத்தை சேர்ந்த வெங்கடேசன் (62) என்பவர்  வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது சீறிப்பாய்ந்து வந்த ஒரு  காளை பார்வையாளர்கள் பகுதிக்குள் பாய்ந்து வெங்கடேசனை முட்டித் தள்ளியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த அவரை பொதுமக்கள் மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காம அனுமதித்த னர். அங்கு சிகிச்சை பலனின்றி செவ்வாயன்று (ஜன. 25) அதிகாலை  வெங்கடேசன் இறந்தார். இதுதொடர்பாக கே.வி.குப்பம் காவல் துறையி னர் விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு மாடு விடும் விழாவில் பலியானவர்களின் எண்ணிக்கை 4ஆக  உயர்ந்துள்ளது.

;