பெருமழையால் தேங்கிய வெள் ளம் வடிந்து நெல்லையில் போக்கு வரத்து சீரடைந்துள்ளது.
திருநெல்வேலியில் இருந்து அம்பா சமுத்திரம் சேரன்மகாதேவி போன்ற பகு திகளுக்கு பேருந்து சேவை செவ்வா யன்று (டிச.19) காலையில் துவங்கியது.
பாளையங்கோட்டை வண்ணா ரப்பேட்டை பகுதியில் நீர் முழுமையாக வடிந்து சாலை வழக்கம் போல் காட்சி யளிக்கிறது. மின்சாரமும் உள்ளது. கொக் கரகுளம் பகுதியில் மின்சாரம் வழங்கப் படாமல் இருட்டாகவே உள்ளது. தாமிர பரணியில் வரும் நீர் வரத்து கணிசமான அளவு குறைந்துள்ளதால் ஜங்ஷனில் உள்ள பேருந்து நிலைய பகுதியில் நீர் வடிந்துள்ளது. ஆனால் ரயில் நிலையம் பகுதியில் வெள்ளம் முழுமையாக வடி யாத நிலையில் வாகனங்கள் செல்ல முடியவில்லை.
டவுன் ஸ்ரீபுரம் மற்றும் மாநகராட்சி அலுவலகம் ஆர்ச் நிலை பெயர் சாலை பகுதிகளில் நீர் முற்றிலுமாக வடிந்து இரு சக்கர வாகன ஓட்டிகள் வழக்கமாக தங் கள் பணிகளை செய்ய தொடங்கி இருக் கின்றனர். கோவிலை சுற்றியுள்ள வடக்கு ரத வீதி, மேற்கு ரத வீதி, மற்றும் கிழக்கு ரத வீதியில் சாலையில் நீர் வடிந்துள்ளது. தெற்கு ரத வீதியில் மட்டும் சிறிதளவு நீர் உள்ளது.
நெல்லை சந்திப்பு பெரியார் பேருந்து நிலையத்தில் தேங்கியிருந்த மழை வெள்ள நீர் முழுமையாக அகற்றப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படத்தை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.