districts

img

மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.3000 வழங்கிடுக பாப்பாகுடி ஒன்றிய மாநாடு கோரிக்கை

திருநெல்வேலி,  ஏப். 8 - தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரி மைகளுக்கான சங்கம் சார்பாக சேரை பாப்பாக்குடி ஒன்றிய 2 ஆவது மாநாடு  பத்தமடையில் ரவி தலை மையில் நடைபெற்றது. மாநாட்டை மாவட்டச்செய லாளர் குமாரசாமி் துவக்கி வைத்து பேசினார். ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் கற்ப கம். பீடிசங்க மாவட்ட பொரு ளாளர் மாரிச்செல்வம்  மாற்றுத் திறனாளிகள் சங்க மாநிலக் குழு உறுப்பினர் சுமா  மாற்றுத்திறனாளிகள் சங்க   மாவட்டநிர்வாகிகள் காசி மற்றும் அகஸ்தியராஜன் மற்றும்  பத்தமடை சிறு பான்மை நலக்குழு மற்றும் மக்கள்நலச்சங்கம் சார்பாக பக்கீர்மைதீன் முத்துராஜ்,  மார்க்சிஸ்ட்கட்சி ஒன்றியச் செயலாளர் பாலு , சிபிஐ  சார்பாக ஷேக்,  மதிமுக சார்பாக மல்காமலி உள்பட பலர் வாழ்த்தி பேசினர். மாநாட்டை நிறைவு செய்து மாவட்டதலைவர் தியாகராஜன் பேசினார். 17 பேர் கொண்ட ஒன்றியக்குழு தேர்வு செய்யப்பட்டது. தலைவராக பழனி, செயலா ளராக இசக்கிமுத்து, பொரு ளாளராக ரவி, துணைத் தலை வராக மாலதி,துணை செய லாளராக மாரிச்செல்வம் தேர்வு செய்யப்பட்டனர். மாற்றுத்திறனாளிகளின் சமூக பாதுகாப்பு  மற்றும் பொருளாதாரம் மேம்படவும்  வாழ்வாதாரத்தை பாதுகாக் கவும் மாதம் ரூ.3000 வழங்கிட வும் கடும் பாதிப்புள்ள  மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ 5000வழங்கிடவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

;