districts

img

வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிபிஎம் தலைவர்கள் ஆறுதல்

பெருமழையாலும் தாமிர பரணி ஆற்று வெள்ளநீர் புகுந்ததாலும் பாதிக்கப் பட்ட நெல்லை மாநகர பகுதிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலை வர்கள் நேரில் பார்வையிட்டு மக்க ளுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

செவ்வாயன்று (டிச.19) கட்சி யின் மாநில செயற்குழு உறுப்பினர் க. கனகராஜ், மாநிலக்குழு உறுப்பினர் கே.ஜி.பாஸ்கரன், மாவட்ட செயலா ளர் க.ஸ்ரீராம் உள்ளிட்டோர் நகரின் பல்வெறு பகுதிகளில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு மக்களி டம் கேட்டறிந்தனர். இதுகுறித்து, மாவட்ட செயலாளர் ஸ்ரீராம் கூறுகை யில், இடிந்தகரை, கூடங்குளம், கூந்  தன்குழி போன்ற கடலோர பகுதிகளில்  குளங்கள் உடைந்து ஊருக்குள் வெள்  ளம் புகுந்து கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும், விளைநிலங்களில் வெள்ளம் புகுந்த தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து  முறையாக மதிப்பீடு செய்து உரிய  இழப்பீடு வழங்க வேண்டும் என் றார். 

கே.ஜி.பாஸ்கரன் கூறுகையில், “சிந்துபூந்துறை, குறுக்குத்துறை, உடையார்புரம், மகாலிங்கபுரம், சேந்  திய மங்கலம் போன்ற பகுதிகளை வெள்ளம் சூழ்ந்து மக்கள் படகுகளில்  மீட்கப்பட்டுள்ளனர். தாமிரபரணி ஆறும் சிற்றாறும் மறுபுறம் மருதூர்  அணையாலும் சீவலப்பேரி வெள் ளத்தால் சூழப்பட்டு தனித் தீவாக மாறி யுள்ளது. மக்கள் பாதுகாப்பாக உள்ள னர். அவர்களுக்கான அத்தியாவசிய  பொருட்கள், மருத்துவ தேவை களுக்கு உரிய ஏற்பாடு செய்யப்பட வேண்டும்” என்றார். 

க.கனகராஜ் கூறுகையில், “மக் கள் எதிர்பாராத நேரத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. சிறுக சிறுக  சேகரித்த அத்தியாவசியப் பொருட்  கள், துணிமணிகள், மின்னணு சாத னங்கள், சான்றுகள், ஆவணங்கள் உட்பட வெள்ளத்தால் பாதிக்கப்பட் டுள்ளன. பல இடங்களில் வெள்ளம் வடியத் தொடங்கியுள்ளது. வீடுகளை  சுத்தம் செய்து வருகிறார்கள். என் னென்ன இழப்புகள் ஏற்பட்டுள்ளன என்பதை அவர்களால் உடனடியாக மதிப்பீடு செய்ய முடியவில்லை.

முழுமையாக கணக்கெடுத்து பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய  இழப்பீடுகளை வழங்க வேண்டும். முகாம்களுக்கு வராத மக்களுக்கும் உணவுப் பொருட்கள் கிடைப்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும். மின்சாரமும், தொலைத் தொடர்பும் பல இடங்களில் துண்டிக்  கப்பட்டுள்ளதால் தொடர்பு கொள்ள  முடியாத நிலை உள்ளது. அத்தகைய  பகுதிகளை இயல்பு நிலைக்கு கொண்டு வர வேண்டும்” என்றார்.