districts

குடிநீர் கட்டண உயர்வை கைவிடுக! மாநகராட்சி முன்பு சிபிஎம் ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி ,டிச .26- டிசம்பர் 28 அன்று நடக்க இருக்கும் மாமன்ற கூட்டத்தில், குடிநீர் கட்டணத்தையும் அதற்கான டெபாசிட் தொகையையும் பன்மடங்கு உயர்த்த திருநெல்வேலி மாநகராட்சிதீர்மானம் கொண்டுவர உள்ளது. இதை கண்டித்து அன்று காலை 10 மணிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும். இது சம்பந்தமாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி  நெல்லை மாவட்டச் செய லாளர் கே.ஸ்ரீராம் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: நெல்லை மாநகராட்சியில் தற்போது ஒரு வீட்டிற்கு குடிநீருக்கான கட்டணம் ரூ.100 என்றும் டெபாசிட் தொகை ரூ.6,500 எனவும் உள்ளது. அதில் குடிநீர் இணைப்புக்கான வைப்புத்தொகையை அதிகபட்சமாக ரூ.15 ஆயிரமாக உயர்த்த முடிவு செய் யப்பட்டுள்ளது. மேலும், குடிநீர் கட்ட ணத்தை தற்போது குறைந்தபட்ச கட்ட ணம் ரூ.150 , அதிகபட்சமாக நாம்  உபயோகிப்பதற்கு தக்கபடி பன் மடங்கு உயரும் அபாயம் உள்ளது. சாதாரணமாக ரூ.150-க்கு 10 ஆயிரம் லிட்டர் தண்ணீர் மட்டுமே ஒரு குடும்பத்திற்கு வழங்கப்படும். தினசரி  ஒரு குடும்பத்திற்கு குறைந்தபட்சம் 330 லிட்டர் தண்ணீர் மட்டுமே கிடைக்கும். அதற்கு மேல் பயன் படுத்தினால் ஒவ்வொரு 1000 லிட்ட ருக்கும் ரூ.10 வசூலிக்கப்படும் என்றும், இதனை ஒவ்வொரு குழாயிலும் மீட்டர் பொருத்தி கண்காணிப்பது என்றும் முடிவு செய்யப்பட உள்ளது.

குடிநீர் என்பது மக்களின் அடிப்ப டை உரிமை. அதை மக்களுக்கு வழங்க வேண்டியது அரசின் பொறுப்பு. மக்க ளின் அத்தியாவசிய தேவைகளை வியாபாரமாக்குவது சாதாரண ஏழை எளிய மக்களை பெரிதும் பாதிக்கும். ஜெர்மன் வங்கியிடம் ரூ.295 கோடி கடன் வாங்கி, அதை மக்கள் தலையில் சுமத்துவதை ஏற்க முடியாது. ஒரு தனியார் நிறுவனம் போல் மக்களுக்கு தண்ணீரை  விற்பது மக்களால் தேர்வு  செய்யப்பட்ட மாநகராட்சியின்  பொறுப் பிலிருந்து விலகுவது சரியான நடவ டிக்கை ஆகாது. அனைத்துப்பகுதி மக்களுக்கும் தேவைப்படும் நீரை தட்டுப்பாடு இல்லாமல் வழங்குவதே மாநகராட்சியின் கடமை. ஏற்கனவே சமையல் கியாஸ், பெட்ரோல், டீசல், சொத்துவரி, மின் கட்டண உயர்வு என பல்வேறு விலை உயர்வால் அல்லல்படும் மக்கள் மீது இந்த குடிநீர் கட்டண உயர்வு  பெரும் தாக்குதலை தொடுக்கும் நெல்லை மாநகராட்சியை கண்டிக்கிறோம்.  இந்த கட்டண உயர்வை உடனே திரும்ப பெற வேண்டுமென வலியு றுத்தி டிசம்பர் 28 காலை 10 மணிக்கு நெல்லை மாநகராட்சி முன்பு மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் பொதுமக்கள் திரளாக பங்கெடுக்க வேண்டுமெனவும் கூறியுள்ளார்.

;