districts

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

புதுக்கோட்டை, ஜூலை 20-  

     புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சிறிய அளவி லான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணி முதல் நடைபெற உள்ளது.

      இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ,  டிப்ளமோ போன்ற கல்வித்தகுதியுடைய 18 முதல் 35 வயதிற்குட்பட்ட வேலைநாடும் இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி இளைஞர்கள் தங்களது சுயவிவர குறிப்பு, ஆதார் அட்டை மற்றும் கல்விச்சான்று நகல்களு டன் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சி யர் ஐ.சா.மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.