districts

img

கும்பகோணம் மாணவி அகஸ்திக்கு இளம் திரைப்பட இயக்குநர் விருது

கும்பகோணம், மே 5- கும்பகோணத்தில் 12 வயது பள்ளி  மாணவி அகஸ்திக்கு, அவர் இயக்கிய ‘குண்டான் சட்டி’ அனிமேஷன் படத்தை பாராட்டி நார்வே நாட்டில் தமிழ்த் திரைப்பட விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோ ணம், கார்த்தி வித்யாலயா பன்னாட்டு பள்ளியில் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி பி.கே.அகஸ்தி எழுதி இயக்கிய படம் குண்டான் சட்டி. இது  ஒரு அனிமேஷன் திரைப்படம்.  இந்த அனிமேஷன் திரைப்படத்தை செல்லம்மாள் மூவி மேக்கர்ஸ் என்ற நிறுவனம் தயாரித்தது. தஞ்சாவூர் மாவட்டத்திற்குட்பட்ட கும்பகோணம் அருகே கொரநாட்டு கருப்பூர் கிரா மத்தில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாண வர்களின் வாழ்க்கையில் நடக்கும் சுவா ரசியமான விஷயங்கள், குறும்புத்த னங்கள் போன்றவற்றை தொகுத்து உருவாக்கிய படமே ‘குண்டான் சட்டி’ என்ற அனிமேஷன் திரைப்படம். இத்திரைப்படம் மாணவ-மாணவி யர்களுக்கு பல்வேறு நற்கருத்துகளை வழங்குகிறது. அதாவது மாணவர்கள் தங்களின் வெளி தோற்றத்தைக் கண்டு கவலைப்படாமல் நன்றாக படிக்க  வேண்டும். யார் கேலி கிண்டல்  செய்தாலும், அதனை பொருட்படுத் தாது முன்னேற வேண்டும். பாரம்பரிய உணவுகளால் ஏற்படும் நன்மைகள், எப்பொழுதும் சுத்தமாக இருக்க வேண் டும், பெரியோர்களை மதித்து நடக்க  வேண்டும் உள்ளிட்ட பல நற்கருத்து களை வலியுறுத்தும் வகையில் இத்தி ரைப்படம் அமைந்துள்ளது.  இத்திரைப்படத்திற்காக மாணவி அகஸ்தி பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். சிறந்த சமூக சேவைக் கான விருதையும், டாக்டர் பட்டத்தை யும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.  மேலும், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் வழங்கிய சிறந்த இளம் இயக்குநர் என்ற விருதினை இவர்,  தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந் தரராஜனிடமிருந்து பெற்றுள்ளார். இந்த திரைப்படமானது ஏப்.28 அன்று நார்வே நாட்டில் நடைபெற்ற, 15  ஆவது ஆண்டு நார்வா தமிழ் திரைப் பட விருதுகள் என்ற விழாவில் தேர்வு  செய்யப்பட்டு, சிறந்த புதுமுக இளம்  இயக்குநர் மற்றும் சிறந்த அனிமே ஷன் திரைப்படமாக தேர்வு செய்யப் பட்டுள்ளது. மேலும் இந்த விருது இளம் இயக்குநர் பி.கே.அகஸ்திக்கு வழங்கப்பட்டுள்ளது. விருதினை இயக்குநர் அழகர்சாமி வழங்கி கௌர வித்தார்.  விழாவில், இத்திரைப்படம் உரு வாக உறுதுணையாக இருந்த கும்பகோ ணம் கார்த்தி வித்யாலயா பள்ளி  தாளாளர் கார்த்திகேயன், பன்னாட்டு  பள்ளி தாளாளர் பூர்ணிமா கார்த்திகே யன் ஆகியோர் பாராட்டப்பட்டனர்.  நூற்றுக்கும் மேற்பட்ட இளம்  இயக்குநர்கள் விண்ணப்பங்களில் இருந்து, ‘குண்டான் சட்டி’ திரைப்பட மானது தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.