தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம், புதுக்கோட்டை மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு பிரிவு சார்பில் உலக எய்ட்ஸ் தினம் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் வியாழனன்று நடைபெற்றது. இதில், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு அலுவலர் மரு.ச.ராம் கணேஷ், எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு பிரிவின் மாவட்ட திட்ட மேலாளர் (பொ) மரு.கே.இளையராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.