districts

img

பழுதடைந்த மின்கம்பம் சரி செய்யப்படுமா?

பாபநாசம் தாலுகா அலுவலக சாலையில் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே குளத்தை ஒட்டிய சந்தில் உள்ள மின் கம்பத்தின் கீழ்ப் பகுதி அரித்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் மின்கம்பம் வலுவிழந்த நிலையில் உள்ளது. இந்த கம்பத்தின் அருகே குடியிருப்புகள் உள்ளன. எனவே மின்கம்பத்தை புதிதாக மாற்ற வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.