விவசாயிகள் கவலை திருநெல்வேலி,பிப்.11- நெல்லை மாவட்டம், திருக்குறுங்குடியில் காட்டுப் பன்றிகள் புகுந்து நெல் பயிரை சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். திருக்குறுங்குடி மலை யடிவாரத்தில் உள்ள விவசா யத் தோட்டங்களில் காட்டுப் பன்றிகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவது தொ டர் கதையாக உள்ளது. தற் போது விவசாயிகள் நெல், வாழை பயிர் செய் துள்ளனர். இந்நிலையில் அந்த பகுதி யில் இரவில் நெல் வயலில் புகுந்த காட்டுப்பன்றிகள், பயிரை மிதித்து நாசம் செய்துள்ளன. இதனால் சுமார் 1 ஏக்கர் நெல் பயிர் சேதமடைந்துள்ளதாக விவ சாயிகள் தெரிவித்தனர். காட்டுப்பன்றிகள் அட்ட காசம் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் வனப்பட்டிய லில் இருந்து காட்டுப் பன்றியை நீக்கவும், தொடர் கண்காணிப்பு செய்து மலைப் பகுதியிலிருந்து காட்டுப்பன்றிகள் இடத் பெயர்ந்து வந்து பயிர்களை சேதப்படுத் தாமல் இருக்க வும் வனத்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயி கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.