திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எம்ஆர்ஐ ஸ்கேன் வசதி எப்போது அமைக்கப்படும்?
திருவாரூர், அக்.3 - திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எம்ஆர்ஐ ஸ்கேன் உள்ளிட்ட நவீன பரிசோத னைக் கருவிகளை அமைக்க தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம், ஆதிச்சபுரம் ஆர்.சி. அருகே திங்களன்று மாலை தனியார் பேருந் தும் அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 40-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த னர். இதில் படுகாயமடைந்தோர், திரு வாரூர் மற்றும் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வரு கின்றனர். இந்நிலையில், படுகாயமடைந்து திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், சிபிஎம் மன்னார்குடி ஒன்றியக் குழு உறுப்பினர் ஏ.தர்மலிங்கம் உட்பட சிகிச்சை பெறும் அனைவரையும், சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி. சுந்தரமூர்த்தி நேரில் சந்தித்து நலம் விசா ரித்தார். மன்னார்குடி ஒன்றியச் செயலா ளர் ஜெயபால், ஒன்றியக் குழு உறுப்பி னர் அன்புச் செல்வம் உள்ளிட்டோர் உட னிருந்தனர். பின்னர் மாவட்டச் செயலாளர் ஜி. சுந்தரமூர்த்தி கூறுகையில், “திரு வாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எம்ஆர்ஐ ஸ்கேன் வசதி இல்லாததால், விபத்தில் காய மடைந்தவர்களுக்கு உடனே சிகிச்சை அளிக்க முடிவதில்லை. இதனால் அவர்கள் அருகில் உள்ள தனியார் ஸ்கேன் சென்டருக்கு பரிந்துரைக்கப் படுகின்றனர். பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையான அரசு மருத்துவ மனையில் எம்ஆர்ஐ ஸ்கேன் வசதி அமைக்க வேண்டும். மருத்துவக் கல்லூ ரிக்கு தேவையான அனைத்து தொடர் நவீன வசதிகளையும் உரிய முறையில் அமைத்து நோயாளிகளை காக்க வேண்டு மென, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் திருவாரூர் மாவட்டக் குழு சார்பாக, தமிழ்நாடு அரசு மற்றும் சுகாதாரத் துறை அமைச்சரிடம் வலியுறுத்தியும், பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. எம்ஆர்ஐ ஸ்கேன் வசதி இல்லாத தால், அவசர சிகிச்சைக்கு வரும் நோ யாளிகள் தனியார் ஸ்கேன் சென்டர் களுக்கு அனுப்பப்படுகின்றனர். இது ஏழை-எளிய மக்களுக்கு பெரும் நிதிச் சுமையை ஏற்படுத்தும். திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு எம்ஆர்ஐ ஸ்கேன் மற்றும் ஆஞ்சியோ பரிசோதனை கருவி உள்ளிட்ட நவீன பரிசோதனை கருவி களை உடனடியாக அமைக்க தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் நடவ டிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
விவசாயிகளுக்கு அங்கக வேளாண் சாகுபடி பயிற்சி
தஞ்சாவூர், அக்.3 - தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள அலிவலம் கிராமத்தில், 20 விவசாயிகள் கொண்ட குழு விற்கு, அங்கக வேளாண் சாகுபடி குறித்த பயிற்சி நடை பெற்றது. இப்பயிற்சியில், அங்கக சான்று பெறுவதற்கு கடைப்பிடிக்க வேண்டிய தொழில்நுட்பங்கள், பராமரிக்கப் பட வேண்டிய பதிவேடுகள், சமர்ப்பிக்க வேண்டிய ஆவ ணங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டன. திரவ இயற்கை உரங்கள், பூச்சி விரட்டி தயாரித்தல் குறித்த விளக்கங்கள் செய்து காண்பிக்கப்பட்டன. திருச்சிற்றம்பலம், செருவாவிடுதி, ஒட்டங்காடு, பாலத் தளி, குறிச்சி கிராமங்களைச் சார்ந்த 20 விவசாயிகளுக்கு இப்பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியில், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் அலிவலம் அ. மூர்த்தி, அலிவலம் ஊராட்சி மன்ற தலைவர் ஆசைதம்பி, வேளாண்மை உதவி அலுவலர்கள், வட்டார தொழில்நுட்ப மேலாளர்கள் மற்றும் பயிர் அறுவடை பரிசோதனை களப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை துவக்குக! போக்குவரத்து ஊழியர் சங்க வாயிற்கூட்டம்
தஞ்சாவூர், அக்.3- ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே துவக்க வலியுறுத்தி, கும்பகோ ணம் கோட்ட, தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக் கழகம் (சிஐடியு) சார்பில் கோரிக்கை விளக்க வாயிற்கூட்டம் அரசுப் போக்கு வரத்துக் கழக பணிமனைகள் முன்பு நடை பெற்றது. திங்கட்கிழமை இரவு திருவையாறு கிளை, செவ்வாய்க்கிழமை தஞ்சாவூர் புற நகர் கிளை, பேராவூரணி கிளை, பட்டுக் கோட்டை பேருந்து நிலையம், தஞ்சாவூர் விரைவுப் போக்குவரத்து கிளை உள்ளிட்ட இடங்களில், சிஐடியு போக்குவரத்துக் கழக தலைவர் டி.காரல் மார்க்ஸ் தலை மையில் நடந்த கூட்டங்களில், பொதுச் செய லாளர் ஜி.மணிமாறன், பொருளாளர் எஸ். ராமசாமி, துணைச் செயலாளர்கள் டி.முருகா னந்தம், என்.நவநீதன், விரைவுப் போக்கு வரத்து கழக சங்க மாநில துணைத்தலைவர் செங்குட்டுவன் ஆகியோர் பங்கேற்றனர். பேராவூரணி போக்குவரத்துக் கழக பணி மனை முன்பு நடைபெற்ற வாயில் கூட்டத் திற்கு, கிளை தலைவர் ரகு தலைமை வகித் தார். இதில், 15 ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை உடனே துவக்க வேண்டும். 2023-க்கு பின் பணியில் சேர்ந்த அனைத்து தொழிலாளர்களுக்கும் பழைய ஓய்வூதி யத்தை அமல்படுத்த வேண்டும். ஓய்வு பெற்ற அனைவருக்கும் அனைத்து பணப் பலன்களையும், அகவிலைப்படியையும் வழங்க வேண்டும். பொது நிலையா ணையை அமல்படுத்த வேண்டும். இரட்டிப்பு பணி செய்ய வற்புறுத்தக் கூடாது என வலி யுறுத்தப்பட்டது. தொடர்ந்து கும்பகோணம், நாகை மண்டலம் போர்முரசு கலைக்குழுவின், ‘பென் சனைத் தேடி திறவுகோல்’ என்ற நாடகம் நடைபெற்றது.
வேகத்தடை அமைக்க கோரிக்கை
மயிலாடுதுறை, அக்.3 - மயிலாடுதுறை மாவட் டம், தரங்கம்பாடி வட்டம், திருக்களாச்சேரி மெயின்ரோட்டில் உள்ள அய்யாஸ் மெட்ரிக்கு லேசன் தனியார் பள்ளி அருகே வேகத்தடை அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக சமூக செயற்பாட்டாளர் ஆயப்பாடி முஜிபூர் ரஹ் மான் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினரிடம் அளித் துள்ள கோரிக்கை மனுவில், ‘திருக்களாச் சேரி முக்கிய சாலை, ஐஓபி வங்கியின் அருகே அய்யாஸ் மெட்ரிக்கு லேசன் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளிக்கு ஏராள மான மாணவர்கள் வந்து செல்லும் போதும், பொதுமக்கள் இந்த இடத்தை கடக்கும் போதும், அதிவேகமாக வரும் வாகனங்களால் விபத்து நிகழ்கிறது. உட னடியாக இப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டுமென’ கோரி யுள்ளார்.
கிராம சபை கூட்டம்
மயிலாடுதுறை, அக்.3 - மயிலாடுதுறை மாவட் டம் முழுவதுமுள்ள ஊராட்சிகளில் திங்க ளன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. செம்பனார்கோவில் ஒன்றியத்துக்குட்பட்ட எடுத்துக்கட்டி சாத்தனூர் ஊராட்சியில் ஊராட்சி மன்றத் தலைவர் பைலட் தலைமையிலும், திருவி டைக்கழியில் ஊராட்சி மன்றத் தலைவர் சங்கீதா நாகராஜன் தலை மையிலும், தில்லை யாடியில் ஊராட்சி மன்ற தலைவர் ரெங்கராஜன் தலைமையிலும், டி. மணல்மேட்டில் ஊராட்சி மன்றத் தலைவர் திலக வதி துரைராஜ் தலை மையிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
கட்டுமானத் தொழிலாளர்கள் சங்க கிளை அமைப்பு கூட்டம்
தஞ்சாவூர், அக்.3 - தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் கட்டு மானத் தொழிலாளர்கள் சங்கம் (சிஐடியு) கிளை அமைப்பு கூட்டம் ரமேஷ் தலைமையில் நடைபெற்றது. கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் இ.டி.எஸ். மூர்த்தி, சிஐடியு கௌரவ தலைவர் ஆர்.மனோகரன், தென்னை விவ சாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ்.வேலு சாமி, தமிழ்நாடு விவசாயி கள் சங்க ஒன்றியச் செய லாளர் வி.ஆர்.கே. செந்தில் ஆகியோர் கலந்து கொண்ட னர். அனைத்து கட்டுமானத் தொழிலாளர்களையும் நலவாரியத்தில் இணைப் பது, உறுப்பினர் பதிவு, நல வாரிய உறுப்பினர் பதிவு மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டது. இதில், தலைவராக ரமேஷ், செயலாளராக சிவ னேசன், பொருளாளராக நீல கண்டன் மற்றும் துணைச் செயலாளர், துணைத் தலை வர், செயற்குழு உறுப்பி னர்கள் தேர்வு செய்யப்பட்ட னர்.
இருசக்கர வாகனத்தை ஏற்றிக் கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை
புதுக்கோட்டை, அக்.3 - பெண்ணிடமிருந்து நகையைப் பறித்துக் கொண்டு, இருசக்கர வாகனத்தில் தப்பிச் செல்லும்போது, வழியை மறித்தவர் மீது வாகனத்தை ஏற்றிக் கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றம் ஆயுள் சிறை தண்டனை விதித்து செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது. புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் வட்டம் ராப்பூசல் கீழக்குளத்தைச் சேர்ந்தவர் முருகேசனின் மனைவி ரேகா (33). இவர் கடந்த 2022 ஜூன் 27 அன்று பிற்பகலில் இரு சக்கர வாகனத்தில் கீரனூர் சென்றுவிட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். துலுக்கம்பட்டி பிரிவு சாலையில் மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த, சேதுராப்பட்டி யைச் சேர்ந்த சின்னராசு (24) என்பவர், ரேகாவின் கழுத்தில் இருந்த 8 பவுன் தாலிச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பியோடினார். கழுத்தில் காயத்துடன் ரேகாவும், அவரை தனது இரு சக்கர வாகனத்தில் விரட்டிக் கொண்டு சென்றார். எஸ். நாங்குப்பட்டி பகுதியில் அந்த ஊரைச் சேர்ந்த சிலர் சின்னராசுவை மடக்கிப் பிடிக்க முயற்சித்தனர். அப்போது, நாங்குப்பட்டியைச் சேர்ந்த ஆனந்த முத்துக்குமார் (48) என்பவர் மீது இருசக்கர வாகனத்தை ஏற்றியுள்ளார் சின்ன ராசு. இதில் படுகாயமடைந்த அவர், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பல னின்றி உயிரிழந்தார். அப்பகுதி மக்கள் சின்னராசுவைப் பிடித்து அன்னவாசல் காவல்துறையினரிடம் ஒப்படைத் தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதி மன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பூரண ஜெயஆனந்த் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தார். குற்றவாளி சின்ன ராசுவுக்கு கொலைக் குற்றத்துக்காக ஆயுள் சிறைத் தண்ட னையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், நகையைப் பறித்து காயம் ஏற்படுத்திய குற்றத்துக்காக 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
கால்நடை மருத்துவ முகாம் குமரப்பா பள்ளி நடத்தியது
ரணி அருகே நாடியம் கிராமத்தில் டாக்டர் ஜே.ஸி.குமரப்பா செண்டினரி வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப் பணித் திட்டம் சார்பில் கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் சிவ.மதிவாணன் தலைமை வகித்தார். நாட்டு நலப்பணித் திட்ட திட்ட அலுவலர் பவன்குமார் வரவேற் றார். ஊராட்சி மன்றத் தலைவர் பிரேம்செல்வன், குமரப்பா அறக்கட்டளை பொருளாளர் அஸ்வின்கணபதி ஆகியோர் முகாமை தொடங்கி வைத்தனர். கால்நடை உதவி மருத்துவர் மலையப்பன், 100-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தார்.
ஓய்வூதியர் கருத்தரங்கம்
கும்பகோணம், அக்.3- உலக முதியோர் தினத்தையொட்டி, அரசு அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அல்-அமீன் மெட்ரிக் பள்ளியில் கருத்த ரங்கம் நடைபெற்றது. வட்ட ஒருங்கிணைப்பாளர் இராஜ கோபாலன் தலைமை வகித்தார். பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கம் இதயராஜா, பொருளாதார நிபுணர் பேராசிரி யர் வி.பி.ஆத்ரேயா ஆகியோர் உரையாற்றினர். இதில் பல்வேறு சங்கங்களின் ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர்.
திருவாரூர்: ஆலயங்களில் தூய்மைப் பணி
திருவாரூர், அக்.3 - கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் நிகழ்ச்சிகளை யும் செயல்படுத்தி வருகிறது. அதனொரு பகுதியாக, திருவாரூர் மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில் திருவா ரூர் மாவட்டத்தின் பல்வேறு சுற்றுலாத் தலங் களில் தூய்மை விழிப்புணர்வு முகாம் நடத்தப் பட்டு வருகிறது. இந்நிலையில் சுற்றுலா அலு வலர் ம.ஜெயந்தி தலைமையில், தியாக ராஜர் ஆலய வளாகம் மற்றும் புலிவலம் வெங்கடாஜலபதி பெருமாள் கோயில் வளா கத்தில், பணியாளர்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். இதில் சுற்றுலாத்துறை அலுவ லர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.