நாகர்கோவில், செப்.30- கன்னியாகுமரி மாவட்ட பிற்படுத் தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை யினர் நலத்துறையின் சார்பில் பய னாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் என்.ஸ்ரீதர் தலைமையில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான், பால்வளத் துறை அமைச்சர் த.மனோதங்கராஜ் ஆகி யோர் கலந்து கொண்டு, பயனாளி களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர். விழாவில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் கூறியதாவது: இன்றைய தினம் கன்னியாகுமரி மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் வாயிலாக 160 பயனாளி களுக்கு ரூ.16 இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப் பட்டுள்ளது. அரசின் சார்பில் இரண்டு மடங்கும் மக்களுடைய பங்களிப்பாக ஒரு மடங்கும் ரூ.10 இலட்சம் சங்கத்தின் சார்பிலும் அரசின் இணை மானியமாக ரூ.20 இலட்சம் என மொத்தம் ரூ.30 இலட்சம் நிதியினை அந்த பகுதியில் உள்ள ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் உயர கல்விகடன், தையல் தொழில் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்கு வழங்கப்படுகிறது. சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் கடந்த ஆண்டு பள்ளிவாசல்கள் மற்றும் தேவாலயங்களை புனர மைப்பதற்காக ரூபாய் 6 கோடி மானியமாக வழங்கப்பட்டது. அந்த மானியம் இந்த ஆண்டு ரூ.10 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் தர்காக்கள் பராமரிப்பிற்கும், தேவாலயங்கள் பராமரிப்பிற்கும் ரூ. 6 கோடி தரப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் அடக்கஸ்தலத்திற்கு போதிய இட வசதி இல்லை என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதன்படி மாட்ட ஆட்சித்தலைவர் மூலமாக அரசு நிலங்களை தேர்வு செய்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது . அரசு சிறுபான்மையினர் நலன் காக்கின்ற அரசு என்பதால் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறது.
அதற்கு முன்மாதிரியாக இன்றைய தினம் கன்னியாகுமரி மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது தொடர்ந்து மூன்று முறை வழங்கப்பட்டுள்ள நலத்திட்டங்களில இதுவரை ஆயிரம் பயனாளிகள் பயனடைந்துள்ளனர் என்றார். பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் கூறுகையில், தமிழ் நாட்டிலுள்ள அனைத்து கிறித்துவ பிரிவினரையும் உள்ளடக்கிய கிறித்துவர்களின் புனிதத் தலமான ஜெருசேலம் சென்று வர நிதி உதவி அளிக்கும் திட்டத்தின் கீழ் அருட் சகோதரிகள் மற்றும் கன்னியாஸ்திரிக ளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் நிதியுதவித் தொகை 37,000/-லிருந்து ரூ.60,000/- ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. மேற்படி, ஜெருசேலம் புனித பயணம் மேற்கொள்ள www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதள முகவரி யில் விண்ணப்ப படிவங்களை பதி விறக்கம் செய்து படிவத்தினை இயக்கு நர், சிறுபான்மையினர் நல இயக்ககம், கலசமஹால், பாரம்பரிய கட்டிடம்( முதல்தளம்), சேப்பாக்கம், சென்னை- 600 005 என்ற முகவரிக்கு கிடைக்கும் வகையில் அனுப்பி பயனடையலாம். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பி னர்கள் பிரின்ஸ் (குளச்சல்), ராஜேஷ் குமார் (கிள்ளியூர்), மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சுப்பையா, நாகர்கோவில் வருவாய் கோட்டாசியர் க.சேதுராமலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.