குடவாசல், ஜன.12 - தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை, மாவட்ட சமூக நல அலுவலகம் சார்பாக குடவா சல் ஒன்றியத்தில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவி மற்றும் முதியோர் ஓய்வூதி யம் நிதி உதவி, இலவச பட்டா வழங்கும் நிகழ்ச்சி குட வாசலில் உள்ள தனியார் திரு மண மண்டபத்தில் நடை பெற்றது. மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் கார்த்திகா தலைமை வகித்தார். மாவட்ட சமூக நல துணை ஆட்சியர் கண்மணி, 10, 12 ஆம வகுப்பு வரை படித்த பெண்களுக்கு 25 ஆயிரம் ரூபாய், பட்டப்ப டிப்பு, பட்டயப்படிப்பு முடித்த பெண்ணின் திருமணத்திற்கு நிதி உதவியாக ரூ.50 ஆயி ரத்தை வங்கி கணக்கில் செலுத்தியும், 8 கிராம் தங்கத்தை திருமணத் திட்ட பயனாளிகளுக்கு நேரில் வழங்கி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இதில், திருமண உதவி திட்டம் 153 பேருக்கும், முதி யோர் ஓய்வூதியம் 50 பேருக் கும், இலவச பட்டா 17 பேருக் கும் வழங்கப்பட்டது. ஒன்றிய பெருந்தலைவர் கிளாரா செந்தில், துணைத் தலைவர் தென்கோவன், மாவட்ட கவுன்சிலர் கே. சுப்பிரமணியன், பாப்பா.சுப்பிரமணியன் மற்றும் குட வாசல், வடமட்டம் பெண் கள்-ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரி யர் சங்கத்தின் தலைவர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.