தஞ்சாவூர், டிச.7 - தஞ்சாவூர் மாவட்டத்தில் சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கரின் 65வது நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது உருவச் சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமு எகச, தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆகிய வற்றின் சார்பில் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தப்பட்டது. தஞ்சாவூரில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட நிர்வாகி என்.சிவகுரு தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், மாதர் சங்க மாவட்டச் செயலா ளர் எஸ்.தமிழ்ச்செல்வி, தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி. கண்ணன், மாவட்டத் தலைவர் பி.செந்தில் குமார், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட நிர்வாகி பி.சத்தியநாதன், மாநகர நிர்வாகி வடி வேலன், தமுஎகச மாநில துணைத் தலைவர் களப்பிரன், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலை வர் கோதண்டபாணி மற்றும் பலர் கலந்து கொண்டனர். தஞ்சாவூர், நாஞ்சிக்கோட்டை சாலை யில் மறியல் என்ற இடத்தில் உள்ள அம்பேத் கர் சிலைக்கு வாலிபர் சங்கம் சார்பில் மாவட்டச் செயலாளர் கே.அருளரசன், மாவட்டத் தலைவர் ஆம்பல் துரை.ஏசுராஜா, மாநகரச் செயலாளர் யு.காதர் உசேன், ஒரத்தநாடு ஒன்றி யச் செயலாளர் செ.பெர்னாட்ஷா, ஒன்றியத் தலைவர் கோ.மாஸ்கோ ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பேராவூரணி பேருந்து நிலையத்தில் அம்பேத்கர் சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் மாவட்டக்குழு உறுப்பினர் வீ.கருப்பையா, ஒன்றியச் செயலாளர்கள் எம். இந்துமதி (பேராவூரணி), ஆர்.எம்.வீரப்பெரு மாள் (சேதுபாவாசத்திரம்), ஒன்றிய நிர்வாகி கள், நகரக்குழு உறுப்பினர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பட்டுக்கோட்டையில் தலைமை தபால் நிலையம் அருகில் உள்ள அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு தமுஎகச கிளைச் செய லாளர் முருக.சரவணன் தலைமையில் எஸ்.பாலகிருஷ்ணன் மாலை அணிவித்தார். அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளை யொட்டி, ஒரத்தநாட்டில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஒன்றியச் செயலாளர் கு.பாஸ்கர் தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது. அம்மாபேட்டையில், வாலிபர் சங்க ஒன்றியச் செயலாளர் உ.சரவணன் அம்பேத்கர் உரு வப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். திருக்காட்டுப்பள்ளியில் தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட துணைச் செயலாளர் பி.எம். இளங் கோவன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தமிழ்ப் பல்கலை.
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் திங்களன்று டாக்டர் அம்பேத்கரின் நினைவு நாள் கடைப்பிடிக்கப்பட்டது. இந்நிகழ்வில் அம்பேத்கரின் உருவப் படத்திற்கு தமிழ்ப் பல்க லைக்கழக துணைவேந்தர் பொறுப்பு குழு முனைவர் சி.அமுதா, முனைவர் ரெ.நீல கண்டன், பதிவாளர்(பொ) முனைவர் மோ. கோ.கோவைமணி, நிதியலுவலர் இரா.குண சேகரன், ஆசிரியர் பேரவை பொறுப்பாளர் கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் பணி யாளர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.