விருதுநகர்: காங்கிரஸ் வேட்பாளர் ப.மாணிக்கம் தாகூர் வேட்பு மனுத் தாக்கல்
விருதுநகர், மார்ச் 25- திமுக தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி சார்பில் விருதுநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ப.மாணிக்கம்தாகூர் திங்க ளன்று மாவட்டத் தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியரு மான ஜெயசீலனிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவருடன் சட்டமன்ற உறுப்பினர்கள் சீனிவாசன், ரகு ராமன், திமுக மதுரை மேற்கு மாவட்டச் செயலாளர் மணி மாறன் ஆகியோர் உடனிருந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் மாணிக்கம்தாகூர் கூறுகையில், ‘‘இந்தத் தேர்தல் மிக முக்கியமான தேர்தல். இது இந்தியாவின் ஜனநாயகத்தைக் காப்பாற்றும் தேர்தல். இந்தியா ஒரு பாசிச சக்தியின் கைகளில் சிக்கா மல் தடுத்து நிறுத்துவதற்கான கடைசி வாய்ப்பாக இத்தேர்தல் உள்ளது. கடந்த 50 நாட்களுக்குள் 2 மாநில முதல்வர்களை ஒன்றிய பாஜக அரசு அதன் அமைப்புகள் மூலம் கைது செய்துள்ளது. இந்த அரசை இப்போது வீழ்த்தா விட்டால். இங்கே சர்வாதிகார ஆட்சி முறை வந்துவிடும். பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசானது, இந்தியா முழுவதும் அமலாக்கத் துறையை ஏவி விட்டு சட்டவிரோத கைது நடவடிக்கைகளை தொடர்ந்து செய்து வருகிறது. மேலும், பிரதான எதிர்க்கட்சியான காங்கிரசின் அனைத்து நிதி ஆதாரங்களையும் வருமான வரித் துறை மூலம் முடக்கி வைத்துள்ளது. மத்திய அமைப்புகளை தனக்கு ஆதாயம் தரும் வகையில் மாற்றியுள்ளது பாஜக அரசு. எனவே, இதை உடனடியாக வீழ்த்திட வேண்டும்’’ என தெரிவித்தார்.
தேனி மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் உட்பட 5 பேர் மனுத் தாக்கல்
தேனி, மார்ச் 25- தேனி மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் நாராயணசாமி உட்பட 5 பேர் மனுத்தாக்கல் செய்த னர். தேனி மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் வி.டி.நாராயணசாமி திங்களன்று தேர்தல் நடத்தும் அலு வலரும், மாவட்ட ஆட்சியருமான ஷஜீவனாவிடம் மனுத் தாக்கல் செய்தார்.அதிமுக மாற்று வேட்பாளராக அவரது மகன் சூர்யபிரகாஷ் மனுத்தாக்கல் செய்தார். வேட்பாளருடன் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதய குமார், மாவட்டச் செயலாளர்கள் ஜக்கையன், ராமர், அமைப்பு செயலாளர் மகேந்திரன் உள்ளிட்டோர் உடனி ருந்தனர். நாம் தமிழர் கட்சியின் சார்பில் மதன், சுயேட்சை வேட்பாளர்கள் ஆதி முத்துகுமார், மணிகண்டன் ஆகி யோர் மனுத்தாக்கல் செய்தனர்.
வெடிகுண்டு புரளி; ஒருவர் கைது
பழனி, மார்ச் 25- பழனியில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்று வரும்நிலையில், பழனி ரயில் நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக போலியான செய்தியை அனுப்பிய நபரை திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், பழனி ரயில் நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக கடந்த மார்ச் 23 அன்று இமெயில் ஒன்று வந்துள்ளது. இதைத்தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் அ.பிரதீப் உத்தரவின்பேரில் பழனி ரயில் நிலை யத்தில் ரயில்வே, சட்டம்-ஒழுங்கு காவல்துறையினர் இணைந்து சோதனை மேற்கொண்டதில் வெடிகுண்டு இல்லை என்பதை கண்டறிந்தனர். இதைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டனர். இதில், போலியான செய்தியை அனுப்பியது கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த முருகேஷ் (45) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி னர்.
தெருநாய்கள் கடித்து புள்ளிமான் பலி
நத்தம், மார்ச் 25- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கோபால்பட்டி -கணவாய்பட்டி பங்களா பகுதியில் மலைப்பகுதியில் இருந்து இரை தேடி புள்ளிமான் ஒன்று ஞாயிறன்று இரவு வந்தது. இந்நிலையில் அந்த பகுதியில் இருந்த புள்ளி மானை தெருநாய்கள் கடித்தது. உயிருக்கு போராடிய நிலையில் கிடந்த மான் குறித்து அப்பகுதி மக்கள், வனத்துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற நத்தம் வனச்சரக அலுவலர் ஜெயசீலன் உள்ளிட்ட வனத்துறையினர் மானிற்கு சிகிச்சை அளித்தனர். ஆனால், புள்ளி மான் சிகிச்சை பலனின்றி திங்களன்று உயிரிழந்தது. தொடர்ந்து கால்நடைத்துறையினரின் பிரேத பரிசோதனைக்கு பின் புள்ளிமான் அந்த பகுதியிலே அடக்கம் செய்யப்பட்டது.
வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு முதற்கட்ட பயிற்சி வகுப்பு
திருவில்லிபுத்தூர், மார்ச் 25- தென்காசி (தனி) நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருவில்லிபுத்தூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு ஞாயிறன்று தேர்தல் நடத்துவது குறித்து முதற்கட்ட பயிற்சி வகுப்பு நடை பெற்றது. திருவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் திருவில்லிபுத்தூர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட உதவி ஆணையர் (கலால்) கணேசன் தலை மையில், தென்காசி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவி யாளர் (தணிக்கை) மேற்பார்வையில் நடைபெற்றது.
காவல்துறையின் தடுப்புகளை மீறி உள்ளே நுழைந்த அதிமுக, தேமுதிகவினர்
விருதுநகர், மார்ச் 25- விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளா கத்திற்குள் வேட்புமனு தாக் கலின் போது காவல்துறை யினரின் எச்சரிக்கை மற்றும் தடுப்புகளை மீறி அதிமுக மற்றும் தேமுதிகவினர் உள்ளே நுழைந்தனர். விருதுநகர் மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்ட ணியில் தேமுதிக போட்டி யிடுகிறது. தேமுதிக பொதுச் செயலாளரின் பிரேமலதா வின் மகன் விஜயபிரபாகர் வேட்பாளராக நிறுத்தப்பட் டுள்ளார். இந்நிலையில், திங்க ளன்று காலை வேட்புமனு தாக்கலுக்காக அதிமுக மற்றும் தேமுதிகவினர் ஏரா ளமான வாகனங்களில் ஊர் வலமாக வந்தனர். அப்போது, அனைத்து வாகனங்களும் ஒன்று சேர்ந்தாற்போல ஹாரன் அடித்தனர். இத னால், அங்கிருந்த காவலர் கள், பொதுமக்கள் தங்களது காதுகளை பொத்திக் கொண்டு விலகி ஓடும் நிலை ஏற்பட் டது. மேலும், ஆக்ரோஷமாக கூச்சலிட்டவாரே காவல் துறையினர் வைத்திருந்த தடுப்புகளை நோக்கி வந்த னர். அப்போது, பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர் கள் 3 வாகனங்கள் மட்டும் செல்ல வேண்டும். அனுமதி பெற்ற வாகனங்கள் மட் டுமே உள்ளே செல்ல வேண்டும் என ஒலி பெருக்கி யில் அறிவித்துக் கொண்டே இருந்தனர். ஆனால், அதை அதிமுக மற்றும் தேமுதிகவினர் பொருட்படுத்தவில்லை. மாறாக தடுப்புகளை தாண்டி ஏராளமானோர் உள்ளே சென்றனர். அவர்களை காவல் துறையினரால் கட்டுப்படுத்த முடியவில்லை. மேலும், மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தின் அருகே வந்தும் தேர்தல் நடத்தை விதி முறைகளை மீறி, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் வேட்பா ளர் சைகை மூலம் முரசு சின் னத்திற்கு வாக்கு கேட்டனர். பின்பு, வேட்பாளர் விஜய பிரபாகர், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆகியோர் உள்ளே சென்றனர். அப்போதும், உடன் வந்த அனைவரும் ஆட்சியரகத்திற்குள் அத்து மீறி நுழைய முயற்சி செய்த னர். அப்போது போலீசார் அவர்களை போராடி தடுத்து நிறுத்தினர். பின்பு, கொஞ்சம் கொஞ்சமாக அங்கிருந்து நகர்த்தினர். இதனால், மாவட்ட ஆட்சியர் அலுவல கப் பகுதியில் பெரும் பர பரப்பு ஏற்பட்டது.
95 வயது வாக்காளர்கள், மாற்றுத் திறனாளிகள் வீட்டில் இருந்தே வாக்களிக்க 12டீ படிவம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
விருதுநகர், மார்ச் 25- 95 வயது வாக்காளர்கள் மற்றும் மாற்றுத் திறனாளி கள் வீட்டில் இருந்தபடி தபால் வாக்களிக்க 12டீ படிவம் வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அருப்புக்கோட்டை வட்டம், பாலவநத்தம், விருது நகர் அருகே உள்ள கூரைக்குண்டு, செவல்பட்டி ஆகிய இடங்களில் வசிக்கும் 95 வயது மூத்த வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீடுகளுக்கு மாவட்ட ஆட்சி யர் ஜெயசீலன் நேரில் சென்றார். பின்பு, அவர்கள் வீட்டில் இருந்தபடியே தபால் வாக்களிக்க படிவம்-12டீ வழங்கப் பட்டுள்ளதா என கேட்டறிந்தார். மேலும், அதிகமுறை ஜனநாயக கடமையை ஆற்றிய 95 வயது மூத்த வாக்காளர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தார். அப்போது அவர் கூறியது: மாற்றுத்திறனாளிகள், முதி யோர்கள் உள்ளிட்ட எந்த வாக்காளரும் விடுபட்டு விடக் கூடாது. மூத்த குடிமக்களாகிய நீங்கள் முதல் வாக்கினை பதிவு செய்த போது இருந்த ஆர்வத்தோடு தற்போதும் தவ றாமல் வாக்களிக்க வேண்டும். வாக்குச் சாவடிகளில் மூத்த குடிமக்களுக்கு இருக்கைகள், சக்கர நாற்காலி வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், மாவட்டத்தில் உள்ள 85 வயது பூர்த்திய டைந்த மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தேர்தல் நாளான ஏப்ரல் 19-இல் வாக்குச்சாவடி மையங்க ளுக்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடியே 12டீ படிவம் பெற்று தபால் ஓட்டு மூலம் தங்களது வாக்கினை செலுத்த லாம்’’ என்றார். நிகழ்ச்சியில் வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்ட
பகத்சிங் நினைவு கருத்தரங்கம்
தேனி, மார்ச் 25- மாவீரர் பகத்சிங்கின் நினைவு தினத்தையொட்டி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் சார்பில் தேனி நகரில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் சி.முனீஸ்வரன் தலைமை வகித்தார். மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.வேல்பிர காஷ் வரவேற்றார். கருத்தரங்கை வாழ்த்தி முன்னாள் வாலிபர் சங்கத் தலைவர்கள் ஏ.வி.அண்ணாமலை, டி. வெங்கடேசன் பேசினர். நிறைவு செய்து வாலிபர் சங்கத்தின் முன்னாள் மாநிலக்குழு உறுப்பினர் கே.ஆர். லெனின் பேசினார். வாலிபர் சங்க தாலுகா செயலாளர் டி.நாகராஜ் நன்றி தெரிவித்தார். நிகழ்வில் வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் கே. கரண்குமார், பொருளாளர் கே.ராஜா நிர்வாகிகள் முத்துக் குமார், விக்னேஸ்வரன், ஜெகதீஸ்வரன், குமரேசன், மணி கண்டன் மாணவர் சங்க நிர்வாகிகள் சேகுவேரா, வீர பாண்டி ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
காலமானார்
தேனி, மார்ச் 25- தேனி அல்லிநகரத்தை சேர்ந்த நுகர்பொருள் வாணிப கழக ஊழியர் பி.தர்மராஜ் உடல் நலக்குறை வால் சனிக்கிழமை இரவு காலமானார். இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி மாவட்டக்குழு உறுப்பினர் டி.நாகராஜின் தந்தை ஆவார். அன்னாரது இறுதி நிகழ்ச்சி ஞாயிறன்று தேனியில் நடைபெற்றது. கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பி னர் கே.பாலபாரதி, மாவட்டச் செயலாளர் ஏ.வி.அண்ணாமலை, மூத்த தலைவர் கே.ராஜப்பன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் டி.வெங்கடேசன், சி.முருகன், டி.கண்ணன், எம்.ராமச்சந்திரன், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் சி.முனீஸ்வரன், தேனி தாலுகா செயலாளர் இ.தர்மர் உள்ளிட்ட தலைவர்கள் இறுதி மரியாதை செலுத்தினர்.
முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ்கனி இராமநாதபுரத்தில் வேட்பு மனு தாக்கல்
இராமநாதபுரம், மார்ச் 25- இராமநாதபுரம் நாடாளுமன்ற ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளர் நவாஸ்கனி திங்கள் அன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கல் செய்யும் பொழுது பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன், திமுக மாவட்ட செயலாளரும் இராமநாதபுரம் மாவட்ட சட்டமன்ற உறுப்பினருமான காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன், திருவாடனை சட்டமன்ற உறுப்பினர் கருமாணிக்கம் ஆகியோர் உடன் இருந்தனர்.