புதுக்கோட்டை, ஏப்.17 - இந்தியா கூட்டணி வேட்பாளர் களை ஆதரித்து புதுக்கோட்டை மாவட் டம் முழுவதும் திமுக தலைமையிலான கூட்டணியின் இறுதிக்கட்டப் பிரச்சாரம் புதன்கிழமை எழுச்சியுடன் நிறை வடைந்தது. திருச்சி தொகுதி மதிமுக வேட்பா ளர் துரை.வைகோவை ஆதரித்து புதுக்கோட்டை நகரம், புதுக்கோட்டை, கறம்பக்குடி, கந்தர்வகோட்டை, குன்றா ண்டார்கோவில், அன்னவாசல் ஆகிய ஒன்றியங்களில் இருசக்கர வாகனப் பிரச்சாரம் நடைபெற்றது. இப்பிரச்சாரத்தில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, வேட்பாளர் துரை.வைகோ, திமுக மாவட்டச் செய லாளர் கே.கே.செல்லப்பாண்டியன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கவி வர்மன், சிபிஐ மாவட்டச் செயலாளர் த. செங்கோடன். மதிமுக மாவட்டச் செய லாளர் எஸ்.கே.கலியமூர்த்தி, விசிக மாவட்டச் செயலாளர் இளமதி அசோ கன், திமுக நகரச் செயலளார் ஆ. செந்தில், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.நாகராஜன், எஸ்.ஜனார்த்தனன், நகரச் செயலாளர் ஆர்.சோலையப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கந்தர்வகோட்டை தொகுதிக் குட்பட்ட கறம்பக்குடி, கந்தர்வகோட்டை, குன்றாண்டார்கோவில், அண்டக்குளம், கல்லாக்கோட்டை உள்ளிட்ட பகுதி களில் நடைபெற்ற இருச்சக்சர வாகனப் பிரச்சாரத்தில் கந்தர்வகோட்டை தொ குதி சட்டப்பேரவை உறுப்பினர் எம். சின்னதுரை, திமுக மாவட்டச் செயலா ளர் கே.கே.செல்லப்பாண்டியன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ். கவிவர்மன், சிபிஐ மாவட்டச் செயலா ளர் த.செங்கோடன், விசிக மாவட்டச் செயலாளர் இளமதி அசோகன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.ராமையன், ஏ.ஸ்ரீதர், த.அன்பழகன், ஒன்றியச் செயலாளர்கள் வி.ரெத்தின வேல், ஜி.பன்னீர்செல்வம், பி.வீரமுத்து, எஸ்.கலைச்செல்வன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் கே.தங்கவேல், துரை. அரிபாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை ஒன்றியக்குழு சார்பில் ஆதனக்கோட்டையில் தொடங்கிய இருசக்கர வாகனப் பிரச்சாரத்திற்கு, ஒன்றியச் செயலாளர் டி.லட்சாதிபதி தலைமை வகித்தார். கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை தொடங்கி வைத்தார். மாவட்டக்குழு உறுப்பினர்கள் டி.சலோமி, சி.மாரிக்கண்ணு உள்ளிட்டோர் பங்கேற் றனர். வண்ணாரப்பட்டி, கல்லுக்காரன் பட்டி, ராஜாலிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இந்தப் பிரச்சாரம் நடை பெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கறம்பக்குடி தெற்கு ஒன்றியக்குழு சார்பில் நம்பன்பட்டியில் தொடங்கிய இருசக்கர வாகனப் பிரச்சாரத்திற்கு ஒன்றியச் செயலாளர் ஆர்.சக்திவேல் தலைமை வகித்தார். பிரச்சாரத்தில் கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பே ரவை உறுப்பினர் எம்.சின்னதுரை, மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், செயற்குழு உறுப்பினர் சி.அன்புமண வாளன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.பாலசுந்தரமூர்த்தி, கி.ஜெயபாலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாங் கோட்டை, தீத்தானிப்பட்டி, மழையூர், புதுப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் பிரச்சாரம் நடைபெற்றது. கரூர் தொகுதி காங்கிரஸ் வேட்பா ளர் செ.ஜோதிமணியை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் விராலிமலை தொகுதி முழுவ தும் இருசக்கர வாகனப் பிரச்சாரம் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப் பினர் கே.சண்முகம் தலைமை வகித் தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.சங்கர், அன்னவாசல் ஒன்றியச் செயலாளர் எம்.ஆர்.சுப்பையா, விராலி மலை ஒன்றியச் செயலாளர் மகா லிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சிவகங்கை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக் ப.சிதம்பரத்தை ஆதரித்து நடைபெற்ற பிரச்சாரத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் துரை.நாராயணன், பொன்ன மராவதி ஒன்றியச் செயலாளர் என். பக்ருதீன், அரிமளம் ஒன்றியச் செயலா ளர் ஆர்.வி.ராமையா, திருவரங்குளம் மேற்கு ஒன்றியச் செயலாளர் எல்.வடி வேல், திருவரங்குளம் கிழக்கு ஒன்றியச் செயலாளர் எஸ்.மணிவண்ணன், மாவட்டக்குழு உறுப்பினர் சி.ஜீவானந் தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இராமநாதபுரம் முஸ்லீம் லீக் வேட் பாளர் நவாஸ்கனியை ஆதரித்து நடை பெற்ற பிரச்சாரத்தில் மாவட்டக்குழு உறுப்பினர்கள் சி.சுப்பிரமணியன், தென்றல் கருப்பையா, அறந்தாங்கி ஒன்றியச் செயலாளர் நாராயண மூர்த்தி, ஆவுடையார்கோவில் ஒன்றி யச் செயலாளர் நெருப்பு முருகேஷ், மணமேல்குடி ஒன்றியச் செயலாளர் காளிதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.