districts

img

திருச்சி ரயில் நிலையத்தில் வாகனக் கட்டணம் உயர்வு

திருச்சிராப்பள்ளி, ஜூன் 4-

      திருச்சிராப்பள்ளி ரயில் நிலையத் தில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் கட்டணம் உயர்த்தப்பட்டதால், ரயிலில்  தினம் தோறும் பயணம் செய்பவர்கள் தங்களது வாகனங்களை பாதுகாப்ப தற்கு அதிக பணம் கொடுத்து வரு கின்றனர்.

    குறிப்பாக திருச்சிராப்பள்ளி சந்திப்பு மற்றும் மத்திய பேருந்து நிலையத்தை ஒட்டியுள்ள வாகனக் காப்பகங்கள் தன்னிச்சையாக கட்ட ணத்தை அதிகரித்துள்ளதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

    “பல ஆண்டுகளாக நாளாக ரயில்  நிலையத்தில் உள்ள வாகனக் காப்பகத் தில் இரு சக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு ரயிலில் பயணம் செய்யும் பயணி  மணிகண்டன் கூறுகையில், “12 மணி  நேரத்துக்கு ரூ.20 வசூலித்து வந்தனர்.   தற்போது ரூ.30 வேண்டுமென்கின்றனர். அரை மணி நேரம் தாமதம் ஏற்பட்டால் 12 மணிநேரத்திற்கான கட்டணம் ரூ.30   வசூலிக்கப்படுகிறது எனவே நான் திரு வெறும்பூரில் உள்ள எனது வீட்டி லிருந்து ரயில் நிலையத்திற்கு பேருந்தில் வரத் தொடங்கிவிட்டேன். வாகனக் காப்பகக் கட்டணத்தை விட  பேருந்து கட்டணம் குறைவாக உள்ளது.  ஏனெனில் நான்கு சக்கர வாகனங்களுக் கான கட்டணம் ரூ110 ஆக உயர்த்தப் பட்டுள்ளது.

   கட்டணங்களை உயர்த்து கின்றனரே தவிர, போதுமான வசதிகள்  செய்துதரப்படவில்லை. வாகனக் காப்பகங்களில் மேற்கூரை இல்லை. பாதுகாப்புக் கேமிராக்கள் போதுமான அளவிற்கு இல்லை. வளாகத்தில் கழிப்பறைகள் இல்லை என்கின்றனர் வாகன ஓட்டிகள்.

    ரயில்வே போன்ற முக்கியமான பொதுப் போக்குவரத்தோடு தொடர் புடைய சேவைகளை வணிகமயமாக்கு வது வாகன ஓட்டிகளின் மேல் கூடுதல் சுமை ஏற்றப்பட்டுள்ளது.  மேலும் இரு  சக்கர வாகனங்கள் மற்றும் கார்கள்  பயணிகளை ஸ்டேஷனில் இறங்குவ தற்கு இடவசதி இல்லை. பிரதான நுழைவு வாயில் முன்பு சிறிது நேரம் வாக னங்களை நிறுத்தினால், வாகன ஓட்டி கள் அப்புறப்படு த்தப்படுகின்றனர் அல்லது அபராதம் விதிக்கப்படுகின்ற னர். இது போன்ற நடவடிக்கைகள் கண் டிக்கத்தக்கது என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சிராப்பள்ளி  மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா.  

    புதிய பார்க்கிங் கட்டணங்கள் ஒவ் வொருவரின் தினச்செலவில் கூடுதல் செலவாகும். ரயில்வே நிர்வாகம் வாகனக் காப்பகங்களை இலவசமாக வழங்க வேண்டும். இதுபோன்ற சேவை களை உள்ளாட்சித்துறை  தனியார் ஒப் பந்ததாரர்களுக்கு வழங்கும்போது, கட்டணங்கள் அதிகரிக்கிறது. இந்தக் கட்டண உயர்வு திருச்சிராப்பள்ளிக்கு அருகில் உள்ள ஊர்களுக்குச் செல் லும் தொழிலாளர்களை கடுமையாகப் பாதிக்கிறது என்றார் என்.ஜமாலுதீன்.

;