திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஒன்றியம் பூந்தாலங்குடி பகுதியைச் சேர்ந்தவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் லட்சுமணன். இவருடைய தந்தை வலியூரான் காலமானார். அவருடைய இறுதி நிகழ்ச்சியில், கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், வி.தொ.ச மாவட்ட பொருளாளர் பிரகாஷ், கட்சியின் மூத்த நிர்வாகி பூந்தாலங்குடி மணி மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தினர்.