districts

திருச்சி முக்கிய செய்திகள்

மருத்துவ முகாம்
பொன்னமராவதி, அக்.1 - புதுக்கோட்டை மாவட் டம் பொன்னமராவதி தாலுகா வேகுபட்டியில் மருத்துவ அலுவலர் அருண் தலைமையில் மழைக்கால காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் பொன்னமராவதி சுகா தார ஆய்வாளர் தியாக ராஜன், செவிலியர் ரேகா  மருந்தாளுநர் அசோகன் மற்றும் டெங்கு ஒழிப்புப் பணியாளர்கள் கலந்து கொண்டனர். இதில், பொதுமக்களுக்கு மருத்துவ ஆலோசனை மற்றும் நிலவேம்பு குடி நீர் வழங்கப்பட்டது. 

விழிப்புணர்வு நடைபயணம் 

தஞ்சாவூர், அக்.1 -  உலக இதய தினத்தை முன்னிட்டு நடைபயிற்சி யின் முக்கியத்துவத்தை அனைவருக்கும் விளக் கும் வகையில், பேரா வூரணி அருகே உள்ள புனல்வாசல் புனித ஆரோக்கிய அன்னை மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள், பேராவூரணி லயன்ஸ் சங்கம், பேராவூரணி ழ  பவுண்டேஷன் ஆகி யோர் இணைந்து விழிப்பு ணர்வு நடைபயணத்தை நடத்தினர்.  புனித ஆரோக்கிய  அன்னை மேல்நிலைப் பள்ளி தாளாளர் மற்றும் பங்குச்சந்தை எஸ்.ஜான்சன் எட்வர்ட், மருத் துவர் துரை.நீலகண்டன்,  வருமான வரித்துறை கூடுதல் ஆணையர் வி. ஜஸ்டின், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்  ஆர்.வி.நெப்போலியன் ஆகியோர் நடைபய ணத்தை தொடங்கி வைத் தனர். இந்த நடைபயணம் புனல்வாசல் பள்ளியில் இருந்து, ஆனைக்காடு ரயில்வே கேட் வரை வந்து, மீண்டும் ஒட்டங் காட்டில் நிறைவடைந்தது. 

மீலாது நபி விழா

பாபநாசம், அக்.1 - இராஜகிரி ஹனபி பெரியபள்ளி பரிபாலன சபை சார்பில் 8வது ஆண்டாக மீலாது நபி விழா, பேரணி நடந்தது. விழாவிற்கு பெரியபள்ளி தலைவர் யூசுப் அலி தலைமை வகித்தார். பெரிய பள்ளி இமாம் முகமது இஸ்மாயில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். சென்னை அபூபக்கர் உஸ்மானி சிறப்புரையாற்றினார். பெரிய பள்ளி உறுப்பி னர்கள், அப்துல் ஹமீது கல்வி மைய தலைவர் பாரூக், கீழப்பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் ஜமாத்தினர் கலந்து கொண்டனர்.

குப்பைகள் அகற்றம்

தஞ்சாவூர், அக்.1 -  எல்.ஐ.சி தஞ்சாவூர் கோட்டத்தின் சார்பாக  தூய்மை பாரத திட்டத் தின்கீழ், ஞாயிறன்று தஞ்சாவூர் டான் பாஸ்கோ பள்ளி அருகில் இருந்த குப்பைகள் எல்ஐசி சார்பாக அகற்றப்பட்டது. இதில், எல்ஐசி முதல்நிலை கோட்ட மேலாளர் கே.கே.  சுஜித் தலைமை வகித் தார். கோட்ட அலுவலக அதிகாரிகள், ஊழியர்கள், எல்ஐசி முகவர்கள் குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றினர்.

மருத்துவ வசதியை  உறுதிப்படுத்த கோரிக்கை

திருச்சிராப்பள்ளி, அக்.1 - தமிழ்நாடு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கங்க ளின் கூட்டமைப்பு சார்பில்  ஞாயிறன்று சர்வதேச  ஓய்வூதியர் தினம் திருச்சி யில் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு ஓய்வூதி யர் சங்கங்களின் கூட்ட மைப்பு மாவட்ட தலைவர்  சிராஜூதீன் தலைமை வகித் தார். சங்க மாநிலச் செய லாளர் செந்தமிழ்செல்வன் தொடக்கவுரையாற்றினார். ஓய்வூதியர்களுக்கு உரிய மருத்துவ வசதி, இருப்பி டம், குடிநீர், போக்குவரத்து வசதிகளை உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத் தப்பட்டன. முன்னதாக தமிழ்நாடு அனைத்துத்துறை ஓய்வூதி யர் சங்க மாவட்டச் செயலா ளர் மதிவாணன் வரவேற் றார். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வூ தியர் நல அமைப்பு மாநில  உதவி செயலாளர் சின்ன சாமி நன்றி கூறினார்.

போலி சான்றிதழ் வழங்கி மோசடி
தனியார் வங்கி மேலாளர் மீது புகார்

தஞ்சாவூர், அக்.1- வாகன லோன் பெற்ற 17 பேரிடம் போலியாக  என்.ஓ.சி. மற்றும் ரசீதுகளை வழங்கி, ரூ.27 லட் சத்தை மோசடி செய்த கலெக்சன் மேலாளரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.   தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா பொன்னாப்பூர் கிழக்கு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (35). இவர் சொந்தமாக லாரி வைத்துள் ளார். இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டு களுக்கு முன்பு, தஞ்சாவூர் புதிய பேருந்து நிலை யம் அருகே செயல்பட்டு வரும் ஈக்விடாஸ் வங்கி யில், 7.50 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார்.   இதையடுத்து அந்த நிறுவனத்தில் அசல்  மற்றும் வட்டியுடன் கடன் தொகை முழுவதை யும் ராஜ்குமார் கட்டியுள்ளார். பின்னர் கடன்  முழுவதும் கட்டியதற்கான என்.ஓ.சி., சான்றி தழை, ஈக்விடாஸ் வங்கியிடம் ராஜ்குமார் கேட்டுள் ளார். அப்போது, கலெக்சன் மேலாளராக இருந்த  சந்தோஷ், என்.ஓ.சி., சான்றிதழை ராஜ்குமா ரின் வாட்ஸ் அப்பிற்கு அனுப்பியுள்ளார்.  அந்த சான்றிதழை தஞ்சாவூர் வட்டாரப்  போக்குவரத்து அலுவலகத்தில், ராஜ்குமார் கொண்டு சென்று கொடுத்த போது, போலியா னது என தெரிய வந்தது. இதனால், அதிர்ச்சி யடைந்த ராஜ்குமார் சம்பந்தப்பட்ட வங்கி நிறுவ னத்திடம் தனக்கு வழங்கப்பட்ட சான்றிதழ் களை காண்பித்து கேட்ட போது, வங்கி அதிகாரி களும் அந்த சான்றிதழை பரிசோதித்துப் பார்த்து விட்டு, சான்றிதழ் போலியாக வழங்கப்பட்டு உள்ளது என தெரிவித்தனர். இதையடுத்து வங்கி நிர்வாகம் நடத்திய விசாரணையில், வாகன லோன் வாங்கிய 17  பேரிடம், அவர்கள் செலுத்திய கடன் தொகை ரூ.27 லட்சத்தை வங்கிக் கணக்கில் வரவு வைக் காமல், கலெக்சன் மேலாளராக பணியாற்றிய சந்தோஷ், போலி என்.ஓ.சி. மற்றும் ரசீதுகளை வழங்கி மோசடி செய்தது தெரிய வந்தது.     இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் வங்கியின் முதன்மை மேலாள ராக பணியாற்றி வரும் புஷ்பராஜ் அளித்த புகாரின் பேரில், வழக்குப் பதிந்து தலைமறைவாக உள்ள சந்தோஷை தேடி வருகின்றனர்.

வெறிநாய் கடித்து 13 பேர் காயம்
தெருநாய்களை அப்புறப்படுத்த வேண்டுகோள்

கும்பகோணம், அக்.1- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகில் உள்ள நாச்சியார் கிராமத்தில் அதிகப்படியான தெருநாய்கள் நடமாட்டம் இருக்கிறது. நாய்களைப் பிடிக்க வேண்டுமென தன்னார்வலர்கள் பலமுறை கோரிக்கை வைத்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  இந்நிலையில் நாச்சியார் கோவில் பகுதியில் சுற்றித்திரியும் வெறிநாய் ஒன்று, சுமார் 13-க்கும் மேற்பட்டவர்களை கடித்துள்ளது. அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பொன்னியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் அகல்யா மற்றும் பாரதிநகர் சுதன் உள்ளிட்டோர் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பாரதிநகர் வேப்பங்குளம் தெருவைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்டோர் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  நாச்சியார்கோயில் கிராமத்தில் தெருத் தெருவாக சுற்றித் திரியும் அந்த வெறிநாயை பிடிக்க முடியவில்லை. தற்போது அந்த நாய் எங்கோ ஓடி ஒளிந்து விட்ட நிலையில், குழந்தைகளை வைத்துக் கொண்டு கிராம மக்கள் மிகுந்த அச்சத்துடன் இருந்து வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் அதிகமாக சுற்றித் திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊர் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சிஐடியு நிர்மல் பள்ளிக்கு நிதி திரட்ட முடிவு: அக்.10-இல் பொதுக்கூட்டம்

கரூர், அக்.1 - சென்னை அயனா வரத்தில் சிஐடியு மாநிலக் குழு சார்பில், அரசு உதவி பெறும் நிர்மல் பள்ளி செயல் பட்டு வருகிறது.  இந்தப் பள்ளியில் 250  ஏழை குழந்தைகள் படித்து  வருகின்றனர். அவர்களுக் கான இலவச கல்வி, தர மான சிற்றுண்டி, சீருடை உள் ளிட்டவற்றை சிஐடியு மாநில  குழு அளித்து வருகிறது.  அந்தப் பள்ளிக்கு, ஆண்டுதோறும் சிஐடியு கரூர் மாவட்டக் குழு சார்பில்  நிதி வசூல் செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த ஆண்டு ரூ.2.88 லட்சம் நிதியுதவி வழங்கப் பட்டது. இந்நிலையில், சிஐடியு கரூர் மாவட்டக் குழு கூட்டம்  சனிக்கிழமை நடைபெற்றது.  கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜி.ஜீவா னந்தம் தலைமை வகித்தார். சிஐடியு மாநிலத் துணைத் தலைவர் சிங்காரவேலு, மாவட்டச் செயலாளர் சி.முரு கேசன், மாவட்ட துணைத்  தலைவர்கள் மற்றும் மாவட் டக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.  சிஐடியு கரூர் மாவட்டக் குழு சார்பில், கரூரில் அக்.10  அன்று, நிர்மல் பள்ளி நிதி யளிப்பு பொதுக்கூட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் சிஐடியு மாநி லத் தலைவர்  அ.சவுந்தர ராசன் சிறப்புரையாற்றுகிறார். சிஐடியு இணைப்பு சங்கங் கள் மற்றும் மத்திய தர  தொழிற்சங்கங்கள் ரூ.3 லட்சம் நிதி திரட்டி, நிர்மல் பள்ளிக்கு வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.

மாமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகள் பதிவு செய்யப்படுமா?

கும்பகோணம், அக்.1- மாமன்ற உறுப்பினர் களின் கோரிக்கைகள் பதி வேடுகளில் பதிவு செய்ய  நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத் தப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநக ராட்சியின் மாமன்ற கூட்டம்  நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநகராட்சி மேயர் சர வணன் தலைமை வகித்தார்.  துணை மேயர் சுப. தமிழ ழகன் முன்னிலை வகித் தார்.  இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 34-வது வார்டு மாநகராட்சி உறுப் பினர் செல்வம் பேசிய தாவது: உறுப்பினர்கள் மாமன்றத் தில் பேசும் விவாதங்க ளையோ, கோரிக்கை களையோ பதிவு செய்வ தற்கு எந்த ஏற்பாடும் இல்லை. அவர்கள் முன்வைக்கும் கருத்துகள் குறிப்பேடு களில் பதிவு செய்யப்படு வதில்லை. அவற்றை பதி வேடுகளில் முழுமையாக பதிவு செய்து, ஆவணமாக பராமரிக்க வேண்டும். தாராசுரம் பகுதி தெருக் களில், அளவீடு இல்லாமல் அனுமதியின்றி கட்டடங்கள் கட்டப்படுகின்றன. கட்டு மான விதிமுறைகளை பின் பற்ற நடவடிக்கை எடுக்க  வேண்டும். இனிமேல் கட்டப் படும் வணிக வளாகங்களில், மாற்றுத் திறனாளிகள் செல்வதற்கு சாய்வு தளம் அமைக்க வேண்டும். குறிப் பாக மாநகராட்சி அலு வலகத்திற்கு வரும் மாற்றுத் திறனாளிகளுக்கு, சாய்வு தளம் உள்ளிட்ட லிப்ட் வசதி செய்து தர வேண்டும். தாரா சுரம் பேருந்து நிலை யத்தை சீரமைத்து, இரு சக்கர வாகனங்கள் நிறுத்து வதற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அவர் வலி யுறுத்தினார்.

சிறப்பு மருத்துவ முகாம்

தஞ்சாவூர், அக்.1- தஞ்சாவூர் தெற்கு மாவட்ட திமுக மருத்துவ அணி சார்பில், கலைஞர் நூற்றாண்டு விழா மாபெரும் சிறப்பு மருத்துவ முகாம், மதுக்கூர் ஒன்றியம் காசாங்காடு அரசு  மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினரும் தஞ்சை  தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான கா.அண்ணா துரை தலைமை வகித்தார். பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் முன்னிலை வகித்தார்.  இதில், தஞ்சாவூர் அனு மருத்துவமனை, எம்.ஆர்.  மருத்துவமனை, டாக்டர் அகர்வால் கண் மருத்துவ மனை, தஞ்சாவூர் கேன்சர் மருத்துவமனை, பட்டுக் கோட்டை கனகேசத் தேவர் நினைவு மருத்துவமனை யைச் சேர்ந்த சிறப்பு மருத்துவர்கள், பொது மக்களுக்கு  சர்க்கரை, ரத்த அழுத்தம், நுரையீரல், சிறுநீரகம் பரிசோத னைகளை செய்தனர். மேலும், குழந்தை நலம், மகப்பேறு,  கண், காது, மூக்கு, தொண்டை, புற்றுநோய், இதய நோய்,  மூளை நரம்பியல், எலும்பு மூட்டு, முதுகு தண்டுவடம், ஆயுர்வேதம், சித்த மருத்துவம், பல் மருத்துவ ஆலோச னைகளை வழங்கினர். 

வந்தே பாரத் ரயில்கள் தஞ்சை வழியாக இயக்கப்படுமா?

தஞ்சாவூர், அக்.1-  வந்தே பாரத் ரயில்களை தஞ்சாவூர் வழியாக இயக்க  வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. காவிரி டெல்டா ரயில் பயணிகள் சங்கத்தின் ஆலோ சனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை தஞ்சாவூரில் நடை பெற்றது. கோரிக்கைகள் குறித்து சங்கத்தின் செயலாளர்  வழக்கறிஞர் வெ.ஜீவக்குமார் விளக்கவுரையாற்றினார். தஞ்சாவூர் - விழுப்புரம் இடையே அனுமதிக்கப்பட்டு உள்ள, இரட்டை அகல ரயில்பாதை பணிகளை உடனடி யாக தொடங்க வேண்டும். பட்டுக்கோட்டை- தஞ்சாவூர்-  அரியலூர் புதிய ரயில் பாதை திட்டத்தை விரைந்து செயல் படுத்த வேண்டும். நவக்கிரக தலங்கள், சுற்றுலா தலங்கள் அதிகம்  உள்ள தஞ்சாவூர், கும்பகோணம் வழியாக சென்னையி லிருந்து தென் மாவட்டங்களை இணைக்கும் வகையில்  புதிய வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்க வேண்டும்.  சென்னையை போல், தஞ்சாவூர் ரயில் நிலையங்களில் முதியோர்களை அழைத்துச் செல்லும் பேட்டரி காருக்கான  கட்டணத்தை ரூ.30-லிருந்து ரூ.10 ஆக குறைக்க வேண்டும். விரைவு ரயில் என்ற பெயரில் கட்டணங்களை உயர்த்தி யுள்ள ரயில்வே நிர்வாகம், கொரோனாவுக்கு முன்பு இயக்கப்பட்டது போல், பயணிகள் ரயில் என்ற பெயரில்  இயக்கி உயர்த்தப்பட்ட கட்டணங்களை குறைக்க வேண்டும். தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் நடைபெறும் மேம்பாட்டு  பணிகள் தரமானதாக உள்ளதா என  ரயில்வே நிர்வா கம் உறுதி செய்ய வேண்டும். இப்பணிகள் குறித்து அறிவிப்பு பலகை அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.

சூதாட்ட கும்பலிடமிருந்து பணத்தை அள்ளிய 4 போலீசார் பணியிட மாற்றம்

தஞ்சாவூர், அக்.1 - பேராவூரணி அருகே சூதாட்ட கும்பலை விரட்டி பணத்தை அள்ளி வந்ததாக காவல்துறை உதவி ஆய்வா ளர் உள்ளிட்ட 4 பேர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி, சேதுபாவா சத்திரம், திருச்சிற்றம்பலம் காவல் சரக பகுதிகளில் இரவு நேரங்களில் சூதாட்டம் நடக்கும் இடங்களில் புகுந்து, காவல்துறையினர் எனக்கூறி சூதாட்டக்காரர்களை விரட்டி விட்டு, ஒரு கும்பல் பணத்தை அள்ளிச் செல்வதாக  கடந்த சில மாதங்களாக செய்தி உலவி வந்தது.  இந்நிலையில், கடந்த வாரம் திருச்சிற்றம்பலம் காவல்  சரகம், ஏனாதிக்கரம்பை கிராமத்தில் உள்ள ஒரு தோட்டத் தில், இளைஞர்கள் பலர் சூதாட்டத்தில் ஈடுபட்டு இருந்த தாகவும், அப்போது சூதாட்டம் நடைபெறும் இடத்தில் புகுந்த சிலர் சிறப்புப் படை காவல் உதவி ஆய்வாளர் எனக் கூறி, அங்கிருந்த சூதாட்ட கும்பலை விரட்டி விட்டு  செல்போன்கள் மற்றும் சுமார் 1.50 லட்சம் ரூபாய் பணத்தை  அள்ளிக் கொண்டு சென்றதாக கூறப்பட்டது. இதேபோல் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சேது பாவாசத்திரம் பகுதியில், சூதாட்டம் விளையாடியவர்களி டம் இருந்து, காவல்துறை எனக் கூறி பல லட்சம் ரூபாயை  அள்ளிச் சென்ற சம்பவமும் நடந்ததாக கூறப்படுகிறது.  இது தொடர்பாக சமூக வலைதளங்களில் செய்தி  வெளியானது. இதுகுறித்து பட்டுக்கோட்டை காவல்  துணை கண்காணிப்பாளர் பிரித்திவிராஜ் சவுக்கானுக்கு  புகார் வந்த நிலையில், விசாரணை நடத்தப்பட்டது.  அதில், பேராவூரணி காவல் உதவி ஆய்வாளர் ராம்குமாரு டன், பட்டுக்கோட்டை சிறப்பு தனிப்படை காவலர்கள் சுரேந்திரன், ராகவன், சிம்ரான் ஆகியோர் சூதாட்ட கும்பலை  விரட்டி விட்டு பணத்தை அள்ளிச் சென்றது தெரிய வந்தது. இதில் காவல் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 4 பேரும்  தஞ்சை ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ள னர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

ஒப்பந்தப் பணியாளர்களுக்கு  மீண்டும் வேலை கோரி போராட்டம்

அரியலூர், அக்.1- ஆட்குறைப்பு நடவடிக்கையை எதிர்த்து ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடு பட்டனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சியில் உள்ள துப்புரவு பணியாளர்களில் 85 சதவீதம் பேர் ஒப்பந்த  பணியாளர்கள். இவர்கள் 10 முதல் 20 ஆண்டுகளுக்கு மேல்,  மிகக் குறைவான ஊதியத்தில் பணியாற்றுகின்றனர்.  துப்புரவுப் பணிக்கு கூடுதலாக ஆட்கள் தேவைப்படும் நிலையில், வேலை செய்து கொண்டிருந்தவர்களில் 25 பெண்கள், 5 ஆண்கள் என 30 ஒப்பந்த தூய்மைப் பணியா ளர்களை, ‘ஆட்குறைப்பு’ என்ற பெயரில் சனிக்கிழமை நக ராட்சி நிர்வாகமும், ஒப்பந்ததாரரும் பணி நீக்கம் செய்துள்ளனர். இதை எதிர்த்தும், ‘ஆட்குறைப்பை கைவிட்டு பணி நீக்கம் செய் யப்பட்டவர்களை மீண்டும் வேலையில் அமர்த்தும் வரை  தூய்மைப் பணிக்கு செல்ல மாட்டோம்’ எனக் கூறி ஒப்பந்தப்  பணியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆட்குறைப்பை கண்டித்து நடந்த போராட்டத்திற்கு தலைவர் சிலம்புசெல்வி தலைமை வகித்தார். ஏஐடியுசி சம்மே ளன மாநிலச் செயலாளர் தண்டாயுதபாணி, சிபிஐ மாவட்டச்  செயலாளர் ராமநாதன், நகரச் செயலாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் உரையாற்றினர்.

ரெட்டவயல் மக்களுக்கு கூட்டுக் குடிநீர் வழங்க வலியுறுத்தல்

தஞ்சாவூர், அக்.1-  சுதந்திர போராட்ட வீரர் பி.எஸ்.ஆர்  நினைவு தினம் சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. இதை யொட்டி, மக்களின் அடிப்படை வாழ்வா தார பிரச்சனைகளை தீர்க்க வலியு றுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சேதுபாவாசத்திரம் ஒன்றியக்குழு  சார்பில், பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே சனிக்கிழமை காத்திருப்பு போராட்டம் நடை பெற்றது.  ஒன்றியச் செயலாளர் ஆர்.எஸ்.வேலுச்சாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர். மனோகரன், மூத்த தோழர் வீ.கருப் பையா ஆகியோர் கோரிக்கை விளக்க  உரையாற்றினர். இதில், மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர் மேனகா உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  ஆர்ப்பாட்டத்தில், “குடிமனை பட்டா வழங்கியும் இதுவரை நில  வழங்காத பயனாளிகளுக்கு உடனடி யாக நிலங்களை ஒப்படைக்க வேண்டும். அரசு நிலங்களில் ஆக்கிர மிப்புகளை அகற்றி நிலம் இல்லாத ஏழைகளுக்கு குடிமனைப் பட்டா வழங்க வேண்டும். மணக்காடு கிராமம் வீரக்குடியில் மேய்ச்சல் நில புறம் போக்கில் தனியார் ஆக்கிரமிப்பு செய் வதை தடுத்து நிறுத்தி மக்கள் பயன் பாட்டிற்கு வழங்க வேண்டும். ராவுத்தன்வயல் ஊராட்சி, மறவன்  வயல் கிராமத்திற்கு சாலை அமைக் கும் பணி நிறுத்தப்பட்டதை உடனடி யாக தொடங்க வேண்டும். மறவன் வயல் உண்ணாவிரதப் போராட்ட அமைதிப் பேச்சு வார்த்தையில் ஒப்புக் கொண்டபடி குடிமனைப் பட்டா, குடி நீர், பெண்கள் கழிப்பறை வசதி, பேருந்து நிறுத்தம், பகுதிநேர அங்காடி உள்ளிட்ட கோரிக்கைகளை நிறை வேற்ற வேண்டும்.  நூறுநாள் வேலை திட்டத்தில் வழங் கப்படாத சம்பள நிலுவைத் தொகையை  உடனடியாக வழங்க வேண்டும். ரெட்டவயல் கூட்டுறவு சொசைட்டியில் கரும்பு கடன் தள்ளுபடி தொகை சம்பந் தமான விசாரணை நடைபெற்று, கடன்  தள்ளுபடி தொகை பெறாத விவசாயி களுக்கு உடனடியாக இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும்.  ரெட்டவயல் நடுக்குடியிருப்பு பகுதி  மக்களுக்கு, கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்க செய்ய வேண்டும்.  நடுக்குடியிருப்பு ஆக்கிரமிப்புகளை அகற்றி தார்ச்சாலை அமைத்து தர  வேண்டும்” என வலியுறுத்தி முழக்கங் கள் எழுப்பப்பட்டது.  இதனைத் தொடர்ந்து வருவாய்த் துறையினர், காவல்துறையினர் சமா தானப் பேச்சுவார்த்தை நடத்தினர்.  அதில், அக்.4 இல் வட்டாட்சியர் தலை மையில் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி, கோரிக்கைகளை நிறை வேற்றித் தருவதாக உறுதியளித்த தன்பேரில் காத்திருப்பு போராட்டம் கைவிடப்பட்டது.

சாதிப் பெயரில் உள்ள  தெருக்களின் பெயர் மாற்றப்படுமா?

திருச்சிராப்பள்ளி, அக்.1 - சாதிப் பெயர்களில் உள்ள தெருக்களின் பெயர்களை மாற்ற வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களின் ஒப்பற்ற தலை வர் பி.சீனிவாசராவ் நினைவு தினம் சனிக் கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.  இதையொட்டி சாதிப் பெயர்களில் உள்ள  தெருக்களின் பெயர்களை மாற்ற வேண்டும்.  மலக்குழி மரணங்களை தடுத்து நிறுத்த வேண்டும். கழிவுநீர் சாக்கடைகளை சுத்தம் செய்ய மனிதர்களை ஈடுபடுத்துவதை நிறுத்த  வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் திருச்சி மாநகர் மாவட்டக்குழு சார்பில் சனிக்கிழமை மேல  கல்கண்டார்கோட்டை பகுதியில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி திருச்சி மாநகர் மாவட்டத் தலை வர்  கனல்கண்ணன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி சிபிஎம் மாவட்ட செயற்குழு  உறுப்பினர் வெற்றிசெல்வன், பகுதிச் செயலாளர் விஜயேந்திரன், வாலி பர் சங்க மாவட்டத் தலைவர் லெனின், விவ சாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் கார்த்தி கேயன், சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் மணிமாறன், மாணவர் சங்க மாவட்டச் செய லாளர் மோகன் ஆகியோர் பேசினர்.