பெரம்பலூர்/திருச்சிராப்பள்ளி, நவ.21 - ‘இந்திய மக்கள் வாழ மோடி அரசு வீழ’ என்ற முழக்கத்துடன் 27 அம்ச கோரிக்கைகள் அடங்கிய சாசனத்துடன் நவம்பர் 26, 27, 28 தேதி களில் ஆளுநர் மாளிகை முன் ஐக்கிய விவசாயிகள் முன்னணி மற்றும் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் பெருந்திரள் போராட்டம் நடைபெற உள்ளது. இப்போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு பெரம்பலூர் முழுவதும் நவ.21, 22 ஆகிய 2 நாட்கள் விழிப்புணர்வு பிரச்சார பயணம் நடைபெறுகிறது. ஐக்கிய விவசாய முன்னணி பெரம்ப லூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என். செல்லத்துரை, சிஐடியு மாவட்டச் செய லாளர் எஸ்.அகஸ்டின் தலைமையில், காந்தி சிலை முன்பு பெரம்பலூர் சட்ட மன்ற உறுப்பினர் பிரபாகரன் பெரம்ப லூர் துவக்கி வைத்தார். பிரச்சார பயணத்தில் விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.கே.ராஜேந் திரன், சின்னசாமி, தமிழக விவசாயி கள் சங்கத்தினர், தொமுச மாவட்ட கவுன்சில் செயலாளர் ரெங்கசாமி, மாவட்ட கவுன்சில் தலைவர் குமார், விசிக ஐயாகண்ணு, சிஐடியு சார்பாக மாவட்ட துணை தலைவர் எம்.கரு ணாநிதி, மாவட்ட பொருளாளர் ரங்க ராஜ் உள்பட பலர் கலந்து கொண்ட னர். பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலையில் இப்பிரச்சா ரம் துவங்கி குரும்பலூர், அம்மாபாளை யம், நக்கசேலம், செட்டிகுளம், பாடா லூர், கொளக்காநத்தம், சிறுவாச்சூர், குன்னம், வேப்பூர், அகரம் சீகூர், லெப்பைகுடிக்காடு, எறையூர் ஆகிய ஊர்களில் முடித்து பெரம்பலூர் வந்த டைகிறது. திருச்சிராப்பள்ளி திருச்சியில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை பங்கேற்க செய்ய அனைத்துச் சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்தப்பட்டு வரு கிறது. இதனொரு பகுதியாக திங்களன்று மாலை உறையூரில் தொடங்கிய பிரச்சா ரம் உறையூர் குறத்தெரு, பீமநகர், ஜங்ஷன் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது. சிஐடியு மாவட்டச் செய லாளர் ரெங்கராஜன், எல்.பி.எப். ஜோசப் நெல்சன், ஏஐடியுசி சுரேஷ், ஐஎன்டியுசி வெங்கட் நாராயணன், ஏஐ சிசிடியு ஞானதேசிகன், ஐக்கிய விவ சாயிகள் முன்னணி ஒருங்கிணைப்பா ளர் அயிலை.சிவசூரியன் உள்ளிட் டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். மேலும் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.