தூத்துக்குடி, ஆக. 4
தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் மற்றும் கடம்பூர் காச நோய் பிரிவின் சார்பாக கயத்தாறு சுங்கச் சாவடி பணியா ளர்களுக்கு காசநோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சுங்கச்சாவடி நிலைய மேலாளர் சிவக்குமார் தலைமை வகித்தார். காசநோய் அறிகுறிகள் பரவும் தன்மை பற்றி தூத்துக்குடி மாவட்டகாசநோய் நலக் கல்வி யாளர் முத்துக்குமார் பேசினார். மேலும் இந்த நிகழ்ச்சி யில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மாரிமுத்து பணியாளர்கள் தினசரி வாழ்வில் மேற்கொள்ளவேண்டிய பொது சுகாதார பற்றி தெளிவாக எடுத்துக் கூறினார்.
சுகாதார ஆய்வாளர் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் மூல மாக காசநோய் கண்டறியும் முறை பற்றி பேசினார். பணியா ளர்களின் சளி மாதிரிகள் கோவில்பட்டி அரசு மருத்துவ மனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கபட்டது.