districts

img

திருச்சி மாவட்டம் 5 ஆம் இடம்; அரசுப் பள்ளிகள் அசத்தல்

வழிகாட்டி கையேடே முதலிடத்திற்கு காரணம்

திருச்சிராப்பள்ளி, மே 10- தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 26 அன்று  பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு துவங்கி, ஏப்ரல் 8 அன்று நிறைவடைந்தன. இத் தேர்வுக்கான முடிவுகள் வெள்ளியன்று வெளியிடப்பட்ட நிலையில், மாநில அள வில் அரியலூர் மாவட்டம் முதலிடம் பெற் றுள்ளது. திருச்சி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் குறித்து திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கிருஷ்ண பிரியா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:  பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை திருச்சி மாவட்டத்தில் 16,648 மாண வர்களும், 16,528 மாணவிகளும் என  மொத்தம் 33,176 மாணவ, மாணவிகள் எழுதினர். இதில் 15,500 மாணவர்களும், 16,094 மாணவிகளும் என மொத்தம் 31, 594 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற் றுள்ளனர்.  மொத்த தேர்ச்சி 95.23 சதவீதம் ஆகும். மாநில அளவில் திருச்சி மாவட்டம் 91.55 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. மாநில அளவிலான தர வரிசை பட்டிய லில், திருச்சி மாவட்டம் 5 ஆவது இடத்தை  பிடித்துள்ளது. அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்வு எழு தியதில், மாணவர்கள் 91.88 சதவீதமும், மாணவிகள் 95.87 சதவீதமும் என மொத்தம் 93.85 சதவீதம் பேர் தேர்ச்சி  பெற்றுள்ளனர். அரசுப் பள்ளி மாண வர்கள் 87.90 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ள னர். கடந்த ஆண்டு 8 ஆம் இடத்தில் இருந்த திருச்சி மாவட்டம், இந்தாண்டு மாநில அளவில் 5 ஆம் இடத்தைப் பிடித் துள்ளது. கடந்த ஆண்டு 94.28 சத வீதம் தேர்ச்சி பெற்ற நிலையில், இந்தாண்டு  95.23 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. தமிழ் பாடத்தில் 98.59 சதவீதமும், ஆங்கிலத்தில் 99.44 சதவீதமும், கணி தத்தில் 98.39 சதவீதமும் அறிவியலில் 98.17 சதவீதமும், சமூக அறிவியலில் 97. 63 சதவீதமும் மாணவர்கள் தேர்ச்சி பெற் றுள்ளனர். நூறு சதவீத தேர்ச்சியில் 55 அரசுப் பள்ளிகள், ஆதிதிராவிட நலப் பள்ளிகள் 10, பழங்குடியினர் நலப் பள்ளிகள் 1, நிதி உதவிபெறும் பள்ளிகள் 8, பகுதி நிதி உதவிபெறும் பள்ளிகள் 12, ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் 1, சுயநிதி மற்றும் மெட்ரிக் பள்ளிகள் 73 என மொத்தம் 446 பள்ளிகளில் 160 பள்ளிகள் 100 சத வீதம் தேர்ச்சி பெற்றுள்ளன என்றார்.

தஞ்சாவூர்:  93.40 சதவீதம் தேர்ச்சி

தஞ்சாவூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 93.40 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ள னர். தஞ்சாவூர் மாவட்டம் கடந்த ஆண்டு  மாநில அளவில் 17 ஆம் இடத்தை பிடித்தி ருந்த நிலையில், இந்த ஆண்டு 15 ஆம்  இடத்துக்கு முன்னேறி உள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை மாணவர்கள் 14,402 பேர் எழுதினர். மாணவிகள் 14,513  பேர் எழுதினர். மொத்தம் 28,915 மாண வர்கள் தேர்வு எழுதியிருந்தனர். மாவட்டத் தில் 13,032 மாணவர்களும், 13,974 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் 27,006 பேர் தேர்ச்சி அடைந் துள்ளனர். இதில் மாணவர்கள் தேர்ச்சி 90. 49 சதவீதம், மாணவிகள் தேர்ச்சி 96.29  சதவீதம். மொத்தம் தேர்ச்சி சதவீதம் 93. 40.  தஞ்சாவூர் மாவட்டம் பத்தாம் வகுப்பு  தேர்வில் கடந்த ஆண்டு 92.16 சதவீதத்து டன் மாநில அளவில் 17 ஆம் இடத்தை பிடித் திருந்தது. இந்தாண்டு 15 ஆம் இடத்தை பிடித்துள்ளது. மாவட்டத்தில் 228 அரசு பள்ளிகளில்  6,019 மாணவர்களும், 6,380 மாணவி களும் தேர்வு எழுதியிருந்தனர். மொத்தம் 12,399 பேர் தேர்வு எழுதியதில், 5,261 மாணவர்களும், 6,006 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 87.41, மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 94.14 ஆகும். மொத்த தேர்ச்சி விகிதம் 90.87 சதவீதம். 67 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன. 

பாபநாசம்

பாபநாசம் அரசு மகளிர் மேல்நிலைப்  பள்ளியில் 10 ஆம் வகுப்பு அரசு பொதுத்  தேர்வை 169 மாணவிகள் எழுதினர். இதில்  148 பேர் தேர்ச்சிப் பெற்றனர். 475 மதிப் பெண் பெற்று மாணவி வர்ஷினி முதலிட மும், 470 மதிப்பெண் பெற்று வைஷ்ணவி  இரண்டாமிடமும், 467 மதிப்பெண் பெற்று  சுவாதி மூன்றாமிடமும் பிடித்துள்ளனர்.  அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி யில் 407 மதிப்பெண் பெற்று பாலமுருகன் முதலிடமும், 367 மதிப்பெண்களுடன் வினோதன் இரண்டாமிடமும், 344 மதிப்பெண்களுடன் புருஷோத்தமன் மூன் றாமிடமும் பெற்றனர்.  பட்டுக்கோட்டை அழகிரி மேல் நிலைப்  பள்ளியில் 55 மாணவர்கள் தேர்வெழு தியதில் 54 பேர் தேர்ச்சிப் பெற்றனர். 479  மதிப்பெண் பெற்று பிரசன்னா, சமிகா ஆகிய இருவர் முதலிடத்திலும், 469 மதிப்பெண் பெற்று முகமது முவாத் இரண்டாமிடத்திலும், 458 மதிப்பெண் பெற்று தர்ஷினி மூன்றாமிடத்திலும் உள்ளனர். இதில் மாணவர் பிரசன்னா கணிதத்தில் நூற்றுக்கு நூறு எடுத்துள் ளார்.  திருக்கருக்காவூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 80 பேர் தேர்வெழுதியதில், 64  பேர் தேர்ச்சிப் பெற்றனர். 471 மதிப்பெண்  பெற்று தரணியா முதலிடத்திலும், 470  மதிப்பெண் பெற்று நர்மதா இரண்டாமிடத் திலும், 458 மதிப்பெண் பெற்று பிரிய தர்ஷினி மூன்றாமிடமும் பிடித்தனர். மெலட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளியில்  78 பேர் தேர்வெழுதியதில், 60 பேர் தேர்ச்சிப் பெற்றனர். 450 மதிப்பெண் பெற்று ரித்திகா முதலிடமும், 442 மதிப் பெண் பெற்று கீர்த்தனா இரண்டாமிட மும், 439 மதிப்பெண் பெற்று புகழ்விழி மூன்றாமிடமும் பிடித்தனர்.  அய்யம்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் 168 பேர் தேர்வெழுதியதில், 156  பேர் தேர்ச்சிப் பெற்றனர். பசுபதி கோயில் புனித கபிரியேல் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 266 பேர் தேர்வெழுதியதில், 264 பேர் தேர்ச்சிப் பெற்றனர். அபி மித்ரா, சவுமித்ரா ஆகிய இரண்டு மாண விகள் 490 மதிப்பெண்களுடன் முதலிட மும், 487 மதிப்பெண்களுடன் பத்மஸ்ரீ  இரண்டாமிடமும், 482 மதிப்பெண்களு டன் ஸ்ரீவித்யா மூன்றாமிடமும் பெற்ற னர். 5 மாணவிகள் கணிதத்தில் முழு மதிப் பெண் பெற்றுள்ளனர்.

மயிலாடுதுறை: 90.48 சதவீதம் தேர்ச்சி

மயிலாடுதுறை மாவட்டத்தில் பத்தாம்  வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் 90.48  சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ள னர். மயிலாடுதுறை அரசு மாதிரி உயர்நி லைப்பள்ளி, ஆத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளி, மேலநல்லூர் அரசு உயர்நிலைப் பள்ளி, வில்லியநல்லூர் அரசு உயர்நிலைப் பள்ளி, சந்திரபாடி அரசு உயர்நிலைப் பள்ளி, திருவாலி அரசு உயர் நிலைப் பள்ளி, வடகரை அரசு உயர்நிலைப்  பள்ளி, திட்டுபடுகை அரசு உயர்நிலைப் பள்ளி, பெருமாள்பேட்டை அரசு உயர் நிலைப் பள்ளி ஆகிய 9 அரசுப் பள்ளிகள்  100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. புதுக்கோட்டை: 91.84 சதவீதம் தேர்ச்சி 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு களில் புதுக்கோட்டை மாவட்டம் 91.84 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 332 பள்ளிகளில் இருந்து மொத்தம் 21,856  பேர் தேர்வெழுதினர். இவர்களில் 10,770  பேர் மாணவர்கள், 11,086 பேர் மாணவி கள். இதில் மொத்தம் 20,073 பேர் தேர்ச்சி  பெற்றனர். இவர்களில், 9,562 பேர் மாண வர்கள், 10,511 பேர் மாணவிகள். தேர்ச்சி  சதவீதம் 91.84. தேர்ச்சி சதவீதத்தின்படி மாநில அள வில் புதுக்கோட்டை மாவட்டம் 23 ஆவது  இடத்தைப் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு  92.31 சதவீதம் தேர்ச்சி பெற்று, மாநிலத் தில் 16 ஆவது இடத்தில் இருந்தது குறிப் பிடத்தக்கது.

35 அரசுப் பள்ளிகள் நூறு சதவீதம் தேர்ச்சி 

கீழையூர், மேற்பனைக்காடு, கரூர், எருக்கலக்கோட்டை, எஸ்.குளவாய் பட்டி, பள்ளத்திவிடுதி, பெரியாலூர் கிழக்கு,  நற்பவளசெங்கமறி, இடையாத்தி மங்கலம், ஆயிங்குடி தெற்கு, வல்ல வாரி கிழக்கு, அரசர்குளம் கிழக்கு, சூரன் விடுதி, தாளனூர், மங்களநாடு கிழக்கு,  பொன்பேத்தி, குளமங்கலம் தெற்கு,  சிலட்டூர், பொன்னகரம், பொன்னன் விடுதி, குருங்களூர், முள்ளங்குறிச்சி, பிளாவிடுதி, குளத்திரான்பட்டு, பெரம்பூர், மேலூர், குடுமியான்மலை, கிளிக்குடி, மதியநல்லூர், திருக்கோகர்ணம், முள்ளூர்,  சம்மட்டிவிடுதி, புதுநகர், பல்லவராயன் பத்தை மற்றும் மாவட்ட மாதிரிப் பள்ளி ஆகிய 35 அரசுப் பள்ளிகள் நூறு சத வீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

பெரம்பலூர்: 8 ஆவது இடம்

பெரம்பலூர் மாவட்டத்தில் 94.77 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற் றுள்ளனர். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை 4,289 மாணவர்களும், 3,576 மாணவிகளும் என மொத்தம் 7,865 மாணவ, மாணவிகள் எழுதினர். இதில் 3,985 மாணவர்களும், 3,469  மாணவிகளும் என மொத்தம் 7,454  மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ள னர். பெரம்பலூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகள், ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள்,  அரசு உதவிபெறும் தனியார் மற்றும் சுய நிதிப்பள்ளிகள், சமூக நலப்பள்ளி என  மொத்தம் 141 மேல்நிலைப் பள்ளிகள் உள்ள நிலையில், மொத்தம் 60 பள்ளி கள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது குறிப் பிடத்தக்கது. இதில் ஆதிதிராவிட நலப் பள்ளி களான இலாடபுரம். களரம்பட்டி, பசும்ப லூர், பாடாலூர் ஆகிய நான்கு பள்ளிகள்,  அரசுப் பள்ளிகளான நெற்குணம். வாலி கண்டபுரம், வெங்கலம், கல்பாடி, மேட்டுப்பாளையம், செங்குணம். தம்பி ரான்பட்டி, அரசு மலைவாழ் உண்டு உறை விடப் பள்ளியான மலையாளப்பட்டி, கூத்தூர், இலப்பைக்குடிக்காடு, மரு வத்தூர். மாதிரிப் பள்ளி கிழுமத்தூர், ஒதியம், ஜமீன் பேரையூர், காருகுடி, ஆத னூர், எழுமூர், கூடலூர், ஜமீன் ஆத்தூர், பீல்வாடி, புதுவேட்டக்குடி, கொட்டரை ஆகிய 23 அரசுப் பள்ளிகளின் மாண வர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ள னர்.  இதேபோன்று அரசு உதவி பெறும் பள்ளிகளான தந்தை ரோவர் மற்றும் மௌ லானா பள்ளிகளும், 23 மெட்ரிக் பள்ளி களும், 7 சுயநிதி பள்ளிகளும், கௌதம புத்தர் சமூக நலப் பள்ளியும் என மொத்தம் 60 பள்ளிகளின் மாணவ, மாணவிகள் பத்தாம் வகுப்பில் 100 சத வீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ரஹ்மத் மெட்ரிக் பள்ளி நூறு சதவீதம் தேர்ச்சி

முத்துப்பேட்டை, மே 10 - திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ரஹ்மத் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சியை பெற்று தொடர் சாதனையை நிகழ்த்தியுள்ளது.  2000 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து 24 ஆண்டுகளாக 100 சதவீத தேர்ச்சியைப் பெற்று  குறிப்பிடத்தக்க சாதனையையும் இப்பள்ளி எட்டியுள்ளது. பள்ளியின் மாணவி ஜி.கனிஷ்கா 492 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், எஸ்.நித்யஸ்ரீ 491 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், எஸ்.சாதனா 490 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடமும் பிடித்துள்ளனர். பத்து மாணவியர் 475 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். 8 மாணவியர் 450 மதிப்பெண்களுக்கு மேலும், 26 மாணவியர் 400-க்கு மேலும், 16 மாணவியர் 300      மதிப்பெண்களுக்கு மேலும் பெற்றுள்ளனர்.  கணிதப் பாடத்தில் 5 மாணவியரும், அறிவியல் பாடத்தில் 2 மாணவிகளும் நூற்றுக்கு நூறு  மதிப்பெண் பெற்றுள்ளனர். அதிகபட்சமாக தமிழில் 98, ஆங்கிலத்தில் 99, கணிதத்தில் 100, அறிவியல் பாடத்தில் 100,சமூக அறிவியல் பாடத்தில் 99 என மாணவியர்கள் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

ஐடியல் பள்ளி நூறு சதவீத தேர்ச்சி

அறந்தாங்கி, மே 10 - பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், அறந் தாங்கி கட்டுமாவடி சாலையில் இயங்கி வரும் ஐடியல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. பள்ளியின் சந்தோஷ்  மற்றும் ஜாசிப்முகமது ஆகிய மாணவர்கள் 494  மதிப்பெண்கள் பெற்று  பள்ளியில் முதலிடமும், 493 மதிப்பெண்கள் பெற்று ராஜ யோகேஸ் வரி 2 ஆம் இடமும், 492  மதிப்பெண்கள் பெற்று  லிங்கேஷ்வரி 3 ஆம்  இடமும் பிடித்துள்ளனர்.  கணித பாடத்தில் 11 மாணவர்கள் 100 சதவீத மதிப்பெண்களும், அறி வியல் பாடத்தில் 9 மாண வர்கள் 100 சதவீத மதிப்பெண்களும் பெற்றனர். மேலும் இப் பள்ளியின் 32 மாண வர்கள் 450-க்கு மேல்  மதிப்பெண் பெற்றுள்ள னர். சிறப்பிடம் பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் சேக்சுல்தான், பள்ளி முதல்வர் மாணிக் கம் மற்றும் ஆசிரியர் கள் இனிப்பு வழங்கி வாழ்த்தினர்.

அன்னை மீனாட்சி பள்ளி நூறு சதவீத தேர்ச்சி

அறந்தாங்கி, மே 10 - அறந்தாங்கி காரைக்குடி சாலையில் இயங்கி வரும் அன்னை மீனாட்சி நாச்சியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. மாணவர் கே.சக்திபிரகாஷ் 493 மதிப்பெண்களுடன் முதலிடமும், வி.ராகுல்காந்தி, ஆர்.எம். சந்தோஷ் ஆகிய இரு மாணவர்கள் 480 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடமும், எம்.ரிதனா, ஆர்.ஹரிஹரசுதன் 478 மதிப்பெண்களுடன் மூன்றாம் இடமும் பெற்றனர்.  மேலும் கணிதம் பாடத்தில் 12 மாணவர்களும், சமூக அறிவியலில் 18 மாணவர்களும், அறிவியலில் 11 மாணவர்களும் 100 சதவீதம் பெற்றுள்ளனர்.  சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி தாளாளர் டி.என்.எஸ். நாகராஜ், பள்ளி இயக்குநர் டி.என்.எஸ்.ராஜா, பள்ளி முதல்வர் யோகராஜா மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

 


 

;