districts

திருச்சி விரைவு செய்திகள்

சீர்காழி தாலுகாவில் 1-முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

மயிலாடுதுறை, நவ.17- தொடர் மழை-வெள்ளம் காரணமாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா கடுமையாகப் பாதிக்கப பட்டுள்ளது. மெல்ல... மெல்ல... இயல்பு நிலை திரும்பி  வருவதாக அமைச்சர் மெய்யநாதன் வியாழனன்று தெரி வித்திருந்தார். இந்த நிலையில் சீர்காழி தாலுகாவில்  1-ஆம் வகுப்பு முதல்  8-ஆம் வகுப்பு வரை செயல்படும் பள்ளிகளுக்கு மட்டும் வெள்ளியன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் லலிதா உத்தரவிட்டுள்ளார்.


காலாவதியான விதைகளை விற்பனை செய்தால் நடவடிக்கை

திருச்சிராப்பள்ளி, நவ,17- திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தற்போது கார்த்திகை பட்ட நிலக்கடலை சாகுபடி தொடங்கி உள்ளது. விளைச்சல் அதிகரித்து  அதிக வருமானம் தருவதில் விதைகளின் பங்கு முக்கியம்.  விவசாயிகள் நிலக்கடலை விதைகளை வாங்கும் போது, தமிழ்நாடு அரசால் விதை விற்பனை உரிமம் பெற்ற  விதை விற்பனை நிலையங்களில் மட்டுமே நிலக் கடலை விதைகளை வாங்க வேண்டும். விவசாயிகள் உயர் விளைச்சல் ரகவிதைகளை வாங்கும் போது, விதைக்கான  விற்பனை ரசீதை கேட்டுப்பெற வேண்டும். வாங்கிய விற்பனை ரசீதை அறுவடை முடியும் வரை பத்திரமாக வைத்திருக்க வேண்டும். வியாபாரிகள் நிலக்கடலை விதைகளை விற்பனை செய்யும் போது உரிய ரசீது வழங்க வேண்டும். விதை விற்பனை செய்யும் வியாபாரிகள்  விதை இருப்புப் பதிவேடு, விதை கொள்முதல் பட்டியல் ஆகியவற்றை முறையாகப் பராமரிக்க வேண்டும். விதை விற்பனை உரிமம் இன்றி விதைகளை விற்பனை செய்தாலோ, காலாவதியான விதைகளை விற்பனை செய்தாலோ, ரசீது வழங்காமல் விற்பனை செய்தாலோ, சட்டப்படி விற்பனையாளர்கள் மீது  நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விதைகள் தொடர்  பான ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் 0431 – 2420587 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம் என திருச்சிராப்பள்ளி விதை ஆய்வு துணை இயக்குநர் கோவிந்தராசு தெரிவித்துள்ளார். 


பாரதிதாசன் பல்கலை. தரவரிசை தேர்வுகள் நவ. 20-க்கு மாற்றம்

திருச்சிராப்பள்ளி, நவ.17- திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகம் நடத்தவிருந்த இளநிலை மற்றும் முதுநிலைப் பாடங்க ளுக்கான தரவரிசைத் தோ்வுகள் நவ. 20-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளன. இதுகுறித்த  பாரதிதாசன் பல்கலைக்கழகப் பதிவாளர் அலுவலக செய்திக்குறிப்பு: பாரதிதாசன் பல்கலைக்கழக ஏப்ரல் 2022-க்கான  இளநிலை பாடங்களுக்கான தர வரிசைத் தேர்வுகள் நவ. 19- ஆம் தேதியும் (சனிக்கிழமை), முதுநிலை  பாடங்களுக்கான தேர்வு 20- ஆம் தேதியும் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டி ருந்தது.  நவ. 19- ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி-குரூப் 1 முதல்நிலைத்  தேர்வுகள் நடைபெறுவதால் பாரதிதாசன் பல்க லைக்கழக தரவரிசைத் தோ்வுகள் நவ. 20-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளன. இளநிலை தரவரிசைத் தோ்வுகள் 20- ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 முதல் பகல் 1 மணி வரையிலும், முதுநிலை தரவரிசைத் தேர்வுகள் பிற்பகல் 2.30 முதல் மாலை 5.30 வரையும் நடைபெறும்.


பொலிவுறு நகரான தஞ்சாவூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

தஞ்சாவூர், நவ.17- தஞ்சாவூரில் பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ்  குளங்கள், பூங்காக்கள் சீரமைக்கும் பணிகள் நடை பெற்று வருகிறது. தஞ்சாவூர் கோட்டை அகழியில் உள்ள  ஆக்கிரமிக்கப்பட்ட வீடுகள் அகற்றப்பட்டு, கோட்டை அகழி தூர்வாரப்பட்டு மேம்படுத்தும் பணிகள் நடை பெற்று வருகிறது. வடக்கு அலங்கம், கீழஅலங்கம் பகுதியில் கோட்டை அகழி மேட்டுப்பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான வீடுகள் ஏற்கெனவே இடித்து அகற்றப்பட்டது. கீழவாசல் வண்டிப்பேட்டை பகுதியில் சுமார் 60 ஆண்டு களுக்கும் மேலாக அகழியின் கீழ்க்கரையில் வீடுகள், கடைகள் ஆகியவை ஆக்கிரமித்து கட்டப்படிருந்தது. இந்த கட்டடங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டி டங்களாகக் கருதி, மாநகராட்சி நிர்வாகம் கடந்த மூன்று  மாதங்களுக்கு முன் அந்தக் கட்டடங்களில் நோட்டீஸ் ஓட்டியது. மேலும் ஆக்கிரமிப்பாளர்கள் உடனடியாக வெளியேறுமாறு அறிவுத்தப்பட்டது. இந்த நிலையில் வண்டிப்பேட்டை பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 19 கட்டடங்களையும் பொக்லின் மூலம் இடித்து அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது.


தூண்டில் வளைவை  எப்போது தான் அமைக்கும் அரசு?

தஞ்சாவூர், நவ.17- கஜா புயலால் தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டி னம், சேதுபாவாசத்திரம் துறைமுகத்திலும், 32 மீனவ கிரா மங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 250 படகு கள், 2 ஆயிரம் நாட்டுப்படகுகள் தூக்கி வீசப்பட்டும், ஒன்றோடு ஒன்று மோதியும் சேதமானது. நான்கு ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது 150 விசைப்படகுகளும், 1,500 நாட்டுப்படகுகள் மட்டுமே மீன்பிடித் தொழிலுக்குச் சென்று வருகின்றன.  தூண்டில் வளைவு இல்லாததால் அழிவு மல்லிப்பட்டினத்தில் தூண்டில் வளைவு அமைத்துத் தர மீனவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இது வரை கோரிக்கை நிறைவேறவில்லை. தமிழக அரசு ஆய்வுப் பணிக்கு ரூ.50 லட்சம்  ஒதுக்கி உள்ள நிலை யில் பணிகளை விரைந்து தொடங்க வேண்டும்.


மணல் ஏற்றி வந்த  வண்டிகள் பறிமுதல்

பாபநாசம், நவ. 18-     பாபநாசம் அருகே உள்ள கோவில் தேவராயன்  பேட்டை பகுதியில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த  இரண்டு மாட்டு வண்டிகளை  பாபநாசம் காவல்துறை யினர் பறிமுதல் செய்தனர்.


காரைக்கால், நாகை, புதுக்கோட்டை மீனவர்கள் 14 பேரை கைது செய்தது இலங்கை

திருச்சிராப்பள்ளி, நவ.17- காரைக்கால் துறைமுகத்தில் இருந்து  கோட்டுச்சேரிமேட்டைச் சேர்ந்த செல்வமணி  என்பவருக்குச் சொந்தமான இயந்திரப் படகில் புதன்கிழமை காலை மீனவர்கள் கட லுக்குச் சென்றுள்ளனர். அவர்கள் நெடுந்தீவு  அருகில் உள்ள சர்வதேச கடல் எல்லைக் கோட்டிற்கு  அருகே மீன்பிடித்துக் கொண்டி ருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கைக் கடற்  படையினர் மீனவர்கள், இலங்கைக் கடற் பரப்பிற்குள் நுழைந்ததாக குற்றம்சாட்டி 14 மீனவர்களை கைது செய்ததோடு அவர்கள் சென்ற படகையும் பறிமுதல் செய்தது. கைது செய்யப்பட்ட மீனவர்களில் சிவக் குமார், தினேஷ்குமார், கிஷோர், சதீஷ், தென்றல் குமார், கடம்பன், மணிகண்டன், தர்மன் ஆகியோர் காரைக்காலைச் சேர்ந்த வர்கள். அசோக், அருள், அழகர் ஆகியோர்  புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டி னத்தைச் சேர்ந்தவர்கள்  மற்றவர்கள் நாகப் பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.


திருவாரூர் ஆட்சியரிடம் மனுக்களை குவித்த மக்கள்

குடவாசல், நவ.17- குடவாசல் அருகே உள்ள சேங்காலிபுரம், அன்னவாசல், பெருமங்கலம் ஆகிய கிராமங்களுக்கான மக்கள் தொடர்பு முகாம் சேங்காலிபுரத்தில் நடைபெற்றது. திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன்  106 பயனாளிகளுக்கு  ரூ.5 லட்சத்து 28 ஆயிரத்து 52 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கியதோடு மக்கள் அளித்த 210 மனுக்களைப் பெற்றுக்கொண்டார். மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், உதவி ஆட்சியர் சங்கீதா, குடவாசல் வட்டாட்சியர் குருநாதன்,  மண்டல துணை வட்டாச்சியர் சிவராமன்ஊராட்சிகள் உதவி இயக்குநர் பொன்னியின் செல்வன், வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கர், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பாப்பா சுப்பிரமணியன், ஒன்றியக்குழு உறுப்பினர் பிரபாவதி, ஊராட்சித் தலைவர்கள் கண்ணன், சங்கர்  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


மீன் மார்க்கெட்டை ஆய்வு செய்த தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர்

தஞ்சாவூர், நவ.17-  தஞ்சாவூர் கீழவாசலில் உள்ள மீன் மார்க்கெட்டை நவீன முறையில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக, தற்காலிகமாக வெள்ளைப்பிள்ளையார் கோவில் அருகே மீன்மார்க்கெட் இயங்கி வருகிறது. இந்த மார்க்கெட்டில் மொத்தம்  மற்றும் சில்லறை விற்பனை நடைபெறுவ தால், மீன்களை வாங்க வரும் பொதுமக்கள் தங்களது இரு சக்கர வாகனங்களை சாலை யோரத்திலேயே நிறுத்தி விட்டுச் செல்வ தால், அடிக்கடி அப்பகுதியில் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து, வியாழனன்று தஞ்சை  மாநகராட்சி ஆணையர் க.சரவணக்குமார், போக்குவரத்து காவல் ஆய்வாளர் எம்.ஜி. ரவிச்சந்திரன் ஆகியோர் தற்காலிக மீன் மார்க்கெட்டில் ஆய்வு செய்தனர். அப்போது, தற்போது உள்ள மீன்  கடைகளை 20 அடி தூரத்துக்கு உள்பகு திக்குள் அமைத்துக் கொள்ளுமாறும், இரு சக்கர வாகனங்களை சாலையில் நிறுத்தா மல், அகழி பிளாட்பாரத்தில் நிறுத்தவும் ஏற்பாடுகள் செய்ய ஆணையர் உத்தர விட்டார். அப்போது மீன் வியாபாரிகள், வியா பாரம் செய்யும் இடத்தை சமப்படுத்தி தர வேண்டும், இங்கு சேரும் குப்பைகளை தினம்தோறும் அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றப்படும் என ஆணையர் உறுதியளித்தார்.


தனித்திறமைகளை வெளிப்படுத்திய குழந்தைகள்

புதுக்கோட்டை, நவ.17-  புதுக்கோட்டை மாவட்டம் வயலோ கம் அரசு மேல்நிலைப்பள்ளயில் மாண வர்கள் தங்களின் தனித் திறமைகளை வெளிப்படுத்தி குழந்தைகள் தினவிழா வைக் கொண்டாடினர். வயலோகம் அரசு மேல்நிலைப்பள்ளி யில் நடைபெற்ற குழந்தைகள் தின விழா விற்கு தலைமை ஆசிரியர் ஜெயராஜ் தலைமை வகித்தார். ஆசிரியர்கள் புகழ்வா ணன், மில்டன்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக திரை யிசைப் பாடகரும் குரல் இசை பயிற்று நருமான ராகராஜன் வெங்கடராமன் கலந்து கொண்டு மாணவர்களிடம் உரையாடி னார். மாணவர்கள் பாட்டரங்கம், நடனம், நாடகம், சொற்பொழிவு, சிலம்பம் உள் ளிட்ட தங்களின் தனித்திறமைகளை வெளிப்  படுத்தினர். தனித்திறமைகளை வெளிப்படுத் திய அனைவருக்கும் பரிசு வழங்கப்பட்டது. முன்னதாக ஆசிரியர் சசிகலா வர வேற்க, ஆசிரியர் உமா நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை தமிழ் ஆசிரியர் ராமதிலகம் தொகுத்து வழங்கினார்.


 

;