districts

திருச்சி விரைவு செய்திகள்

யோகா தின முன்னோட்ட நிகழ்ச்சி  

தஞ்சாவூர், மே 14- எட்டாவது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்திய  அரசு தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின், தஞ்சாவூர் மண்டல  மக்கள் தொடர்பு கள அலுவலகம் சார்பில் முன்னோட்ட நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது. சர்வதேச யோகா தினம் ஜூன் 21 ஆம் தேதி கொண்டா டப்படவுள்ளது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் முன்னோட்ட நிகழ்ச்சிகள் ஒன்றிய அரசால் நடத்தப்பட்டு வரு கின்றன. இதனொரு பகுதியாக தகவல் ஒலிபரப்பு அமைச்ச கத்தின் கீழ் இயங்கும், தஞ்சாவூர் மண்டல மக்கள் தொடர்பு  கள அலுவலகம் சார்பில், புதுப்பட்டி கிராமத்தில் தனியார் பாலி டெக்னிக் கல்லூரியில் முன்னோட்ட நிகழ்ச்சி நடத்தப்பட்டது.  நிகழ்ச்சிக்கு முன்பாக யோகா தின விழிப்புணர்வு பேரணி  நடைபெற்றது. கல்லூரி முதல்வர் குமரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். யோகாவின் பயன்கள் குறித்து துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்பட்டது. யோகா பயிற்சி ஆசிரியை சாகப்ஸாதி பேகம் மாணவர்களுக்கு யோகா சிறப்பு பயிற்சி  வழங்கினார். 


ரூ.1 லட்சம் பணம் திருட்டு ஊழியர் உட்பட 3 பேர் கைது

திருச்சிராப்பள்ளி, மே 14 - திருச்சி அருணாநகர் காவேரி கார்டன் பகுதியை சேர்ந்தவர்  கார்த்திக் (36). இவர் 14வது குறுக்கு சாலை பகுதியில் உளுந்து,  பருப்பு உள்ளிட்ட மொத்த வியாபார கடை வைத்து நடத்தி  வருகிறார். சம்பவத்தன்று கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு  சென்றுவிட்டார். இந்நிலையில் மர்ம நபர்கள் 3 பேர் கடையின்  பூட்டை உடைத்து கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.1 லட்சத்து  13 ஆயிரம் பணத்தை திருடிவிட்டு ஓடிவிட்டனர்.  இது தொடர்பாக கடையின் உரிமையாளர் கார்த்திக் கொடுத்த புகாரின் பேரில் தில்லைநகர் போலீசார் வழக்குப்  பதிந்து விசாரணை நடத்திய போது, அவரது கடையில் வேலை  பார்த்த திருச்சி கருமண்டபம் பகுதியை சேர்ந்த அஜித்குமார் (22), தனது நண்பர்கள் விஜய் சூர்யா (32),  சத்தியசீலன் (22) ஆகியோருடன் சேர்ந்து கடையில் இருந்த  பணத்தை திருடியது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார்  3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


அனுமதியின்றி கனிமங்கள்  வெட்டி எடுத்தால் நடவடிக்கை கரூர் ஆட்சியர் எச்சரிக்கை

கரூர், மே 14 - சாதாரணக் கற்கள், மண், கிராவல், களிமண், சரளைமண்,  மணல், கிரானைட், சுண்ணாம்புக்கல் மற்றும் குவாட்ஸ் ரூ பெல்ஸ்பர் போன்ற கனிமங்களை அரசு அனுமதியின்றி வெட்டி  எடுப்பது, அனுமதியின்றி வாகனங்களில் எடுத்துச் செல்வது மற்றும் ஒரே நடைச்சீட்டை பலமுறை பயன்படுத்துவது, குத்தகை உரிமம் முடிவுற்ற பின்னரும் தொடர்ந்து குவாரி செய்வது ஆகியவை இந்திய தண்டனை சட்டத்தின்படி குற்ற மாகும். எனவே, அனுமதியின்றி கனிமங்கள் வெட்டி எடுத்துச் செல்வதால் அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை தடுத்திட வும், அனுமதியின்றி கனிமங்கள் எடுத்துச் செல்லும் போது,  கைப்பற்றப்படும் வாகனங்கள், கனிமங்கள், கனிமங்களை வெட்ட பயன்படுத்தப்படும் கனரக இயந்திரம், வாகனங்கள், கருவிகள் ஆகியவை குறித்தும், இத்தகைய குற்றச் செயலில் ஈடுபடும் நபர்கள் மற்றும் உடந்தையாக உள்ள நபர்கள் மீது கைப்பற்றுகை அலுவலரால் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நீதிமன்றத்தின் மூலம் உரிய நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் டாக்டர் த.பிரபுசங்கர்  தெரிவித்துள்ளார்.


மே 17 மாற்றுத்திறனாளிகளுக்கான உறுப்பினர் சேர்க்கை முகாம்  

அரியலூர், மே 14 - அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திற னாளிகளுக்கும் NHFDC திட்டத்தின் மூலம் கடன் வழங்கி,  அவர்களின் பொருளாதார நிலையினை உயர்த்திட ஏதுவாக அரியலூர் கூட்டுறவுத்துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இணைந்து அனைத்து கூட்டுறவு சங்கங்கள் மற்றும்  கூட்டுறவு வங்கிகளில் மே 17 (செவ்வாய்க்கிழமை) மாற்றுத்  திறனாளிகளுக்கான உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடை பெறவுள்ளது.  கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் உறுப்பினராக இல்லாத அனைத்து மாற்றுத்திறனாளிகளும் தங்கள் வசிப்பிடத்திற்கு அருகாமையில் உள்ள கூட்டுறவு நிறு வனங்களில் நடைபெறும் முகாமில் பங்கேற்று தங்களது ஆதார் அட்டை, குடும்ப அட்டை, இரண்டு புகைப்படம் சமர்ப்பித்து  ரூ.100/- பங்குதொகை மற்றும் ரூ.10/-நுழைவுக் கட்டணம் செலுத்தி உறுப்பினராக சேர்ந்து NHFDC திட்டத்தின் மூலம்  கடன் பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் பெ.ரமண  சரஸ்வதி தெரிவித்துள்ளார்.