districts

திருச்சி முக்கிய செய்திகள்

அதிகரிக்கும் தெருநாய்கள் தொல்லை

பாபநாசம், ஜன.21 - பாபநாசம் சுற்று வட்டார கிராமப் பகுதிகளில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கும்பகோணம் -  தஞ்சாவூர், பாபநாசம் - கபிஸ் தலம், பாபநாசம் - சாலிய மங்கலம் உள்ளிட்ட மெயின்  சாலைகளில் நாய்கள் சண்டையிட்டுக் கொள்ளும் போது இரு சக்கர வாக னங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கிக் கொள்ள நேரிடுகிறது. தெருக்களில் நாய்கள் கூட்டம், கூட்டமாக திரிவதால் குழந்தைகளால் தெருக்களில் செல்ல முடிவ தில்லை.  மேலும் நோய்த்தொ ற்றுக்கு ஆளான நாய்கள் கோழி, ஆடு உள்ளிட்ட வாழ்வாதாரம் தரும் கால்ந டைகளை விரட்டி கடித்து  குதறுகின்றன. எனவே தெரு  நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும் என  வேண்டுகோள் விடுத்துள்ள னர்.

திறன் மேம்பாட்டுப் பயிற்சி

அரியலூர், ஜன. 21- அரியலூர் மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் உழ வர் நலத்துறையில் வேளா ண்மை தொழில்நுட்ப மேலா ண்மை முகமை திட்டத்தின் கீழ் நடைபெற்ற மாவட்ட அள விலான உழவர் உற்பத்தியா ளர் குழு நிர்வாகிகளுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி  ஜெயங்கொண்டம் வட்டா ரத்தில் நடைபெற்றது.  பயிற்சியில் அரியலூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் பழனி சாமி தலைமை வகித்தார். வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை தலைமை நிர்வாக அலுவ லர் நிலன்தருண் மற்றும் இந்துமதி ஆகியோர் கூட்டுப் பண்ணைய திட்டத்தின் உழவர் உற்பத்தியாளர் நிறு வனங்கள் குறித்து எடுத்துக்  கூறினர். கிரீடு வேளாண் அறி வியல் மைய தொழில்நுட்ப வல்லுநர் ராஜாஜோஸ்லின், வேளாண்மை அலுவலர் மகேந்திரவர்மன் நுண்ணூ ட்ட உர பயன்பாடுகள் குறித்த தொழில்நுட்பங்களை எடுத்துக் கூறினர். நிகழ்ச்சி யில் ஜெயங்கொண்டம் ஒன்றிய துணை பெருந்தலை வர் கண்ணன் சிறப்பு விருந்தி னராக கலந்து கொண்டார்.  நிகழ்ச்சியில் ஜெயங்கொண் டம், செந்துறை, ஆண்டி மடம், தா.பழூர் மற்றும் திரு மானூர் வட்டார கூட்டுப் பண்ணைய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மது அருந்துதலும் தீமைகளும்  விழிப்புணர்வு வாசக போட்டி பங்கேற்க அழைப்பு

அரியலூர், ஜன.21- மது அருந்துதல் மற்றும் மது அருந்திவிட்டு வாகனம்  ஓட்டுவதால் ஏற்படும் தீமை கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அரியலூர் மாவட்ட  பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாண வியர்கள் பங்கேற்கும் வித மாக, இணையவழி மூலம், “மதுவினால் ஏற்படும் தீமை கள் மற்றும் சமூக கொண்டாட் டங்களும், மது ஏற்படுத்தும் விளைவுகளும்” என்ற தலைப்பின்கீழ் ஓவியப் போட்டிகள், கவிதைப் போட்டிகள், விழிப்புணர்வு வாசக (ஸ்லோகன்) போட்டி கள் மற்றும் குறும்படங்கள் தயாரித்தல் ஆகிய போட்டி கள் நடத்த மாவட்ட நிர்வாகத்தி னரால் உத்தேசிக்கப்பட்டு உள்ளது. மேற்படி போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் அரியலூர் மாவட்ட இணையதளமான https://ariyalur.nic.in -இல்  கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் முலம் தங்க ளது படைப்புகளை 26.1.2022  முதல் 15.2.2022 வரை பதி வேற்றம் செய்யலாம். இந்த போட்டிகளில் தேர்ந்தெடுக்க ப்பட்டவர்களுக்கு மாவட்ட தலைமையில் பரிசுகள் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பெ.ரமண சரஸ் வதி தெரிவித்துள்ளார்.

கொள்ளிடத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படுமா?

சீர்காழி, ஜன.21  மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்திலிருந்து மாங்கனாம்பட்டு, ஆச்சாள்புரம், நல்லூர், கோதண்டபுரம், மகேந்திரபள்ளி, கொடக்கார மூலை, புதுப்பட்டினம், பழையாறு உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் நெடுஞ்சாலையின் குறுக்கே கொள்ளிடம் ரயில் நிலையம் அருகே ரயில் பாதை செல்கிறது. இந்த நெடுஞ்சாலையில் செல்வோர் இந்த ரயில்வே பாதையை கடந்துதான் செல்ல வேண்டும். அரசு மற்றும் தனியார் பேருந்துகள், கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் இவ்வழித்தடத்தில்தான் சென்று கொண்டிருக்கின்றன. மாங்கானாம்பட்டு, நல்லூர், புதுப்பட்டினம் ஆகிய பகுதியில் உள்ள மருத்துவமனைகளுக்கு செல்பவர்களும், பழையாறு மீன்பிடி துறைமுகத்திற்கு செல்பவர்களும் இந்த சாலை வழியேதான் சென்று வருகின்றனர்.  மேலும் கொள்ளிடம், சிதம்பரம், சீர்காழி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவியர்களும் இந்த நெடுஞ்சாலை வழியேதான் சென்று வருகின்றனர். இப்பாதையில் அடிக்கடி ரயில்கள் செல்வதால் சாலையின் குறுக்கே ரயில்கள் கடந்து செல்லும் வரை ரயில்வே கேட் போடப்படுகிறது.  ரயில் வருவதற்கு பத்து நிமிடத்திற்கு முன்பே கேட் மூடப்படுவதால், சாலையில் செல்பவர்கள் குறைந்தபட்சம் 25 நிமிடங்கள் காத்திருந்து, ரயில்வே கேட் திறக்கப்பட்ட பிறகு செல்ல வேண்டிய சூழல் உள்ளது. ரயில் காலதாமதமாக வந்தால் மேலும் நீண்ட நேரம் வாகன ஓட்டிகள் காத்து நிற்கின்றனர். இதனால் அவசர பணிகளுக்காக செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்று வர முடியாமல் சிரமம் அடைகின்றனர். குறிப்பாக மருத்துவமனைகளுக்கு செல்பவர்கள் மிகுந்த அவதி அடைகின்றனர். எனவே இந்த ரயில் பாதை சாலையை கடக்கும் இடத்தில் மேம்பாலம் அமைத்தால், கொள்ளிடம் பகுதியிலிருந்து செல்பவர்களுக்கு எந்த இடையூறும் இருக்காது. கொள்ளிடம் ரயில் நிலையம் அருகே நெடுஞ்சாலை குறுக்கே மேம்பாலம் கட்டுவதால் சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயனடைவர். எனவே ஒன்றிய-மாநில அரசுகள் இதனை கவனத்தில் கொண்டு பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மேம்பாலம் அமைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

முக்கொம்பில் புதிய கதவணை: பணிகள் மே மாதம் முடிவடையும் திருச்சி ஆட்சியர் தகவல்

திருச்சிராப்பள்ளி, ஜன.21 - திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணை யில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப் பட்டு வரும் புதிய கதவணைப் பணிகளை மாவட்ட ஆட்சியர் சிவராசு வியாழனன்று ஆய்வு செய்தார். இப்பணியில் இதுவரை தெற்கு மற்றும்  வடக்கு கொள்ளிட கதவனையில் அஸ்தி வார பணிகள், தூண்களை உயர்த்தும் பணி கள், பாலம் அமைக்கும் பணிகள், நீர் வழிந் தோடும் பகுதியில் கான்கிரீட் தளம் அமைக் கும் பணிகள் முடிவுற்று உள்ளன. வடக்கு கொள்ளிட கதவணையில், தடுப்புச் சுவர்கள்  அமைக்கும் பணிகள், முன்புறம் சிமெண்ட் கான்கிரீட் கட்டைகள் அமைக்கும் பணிக ளுக்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வரு கின்றன. மேலும், முக்கொம்பு முதல் வண்ணத்துப் பூச்சி பூங்கா வரையிலான கரையை பலப்படுத்தி சாலை அமைக்கும் பணிகள், கலிங்கு பாலம் (ஊசி பாலம்) அமைக்கும் பணி கள் மற்றும் காவிரி பாலத்துடன் புதிய கதவ ணையை இணைக்கும் அணுகு சாலைப் பணி கள் உள்ளிட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர்  ஆய்வு செய்தார்.  பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கை யில், கொள்ளிடம் ஆற்றில் அதிக நீர்பெருக் கின் காரணமாக கதவணையில் இருந்த 9 கண் வாய்கள் கடந்த 22.8.2018 அன்று தொடர்ச்சி யாக விழுந்து சேதமடைந்தன. இதைத்தொ டர்ந்து புதிய கதவணை கட்டுவதற்கு ரூ.387 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் அர சாணை வழங்கப்பட்டு, கடந்த 6.3.2019 அன்று  பணிகள் துவங்கப்பட்டு நடைபெற்று வரு கிறது. கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே பழைய கத வணைக்கு 75 மீட்டர் கீழ்புறமும், கொள்ளி டத்தில் 628 மீட்டர் நீளத்திற்கு 45 கண்வாய்கள் மற்றும் வடக்கு கொள்ளிடத்தில் 138 மீட்டர் நீளத்திற்கு 10 கண்வாய்கள் என மொத்தம் 766 மீட்டர் நீளத்திற்கு 55 கண்வாய்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.  இந்த கதவணையில் போக்குவரத்திற்கு ஒரு வழிச்சாலை வசதியும் அமைக்கப்பட்டு வருகிறது. இப்பணிகள் துரிதமாக நடை பெற்று தற்சமயம் 92 சதவீதம் பணிகள் முடி வடைந்த நிலையில் இதரப்பணிகள் தொ டர்ந்து நடைபெற்று வருகிறது.   இந்த பணியில், மொத்தமுள்ள 484  பைல்கள் அனைத்தும் கட்டி முடிக்கப்பட்டு உள்ளன.  மொத்தமுள்ன 1688 மீட்டர் நீளமுள கசிவில்லா சுவர் முழுவதும் கட்டி முடிக்கப் பட்டுள்ளது. மொத்தமுள்ள 1532 மீட்டர் நீள முள்ள குறுக்கு வெட்டுசுவரில் 1467 மீட்டர் நீளத்திற்கு முடிக்கப்பட்டுள்ளன.  அணையின் மேல் மற்றும் கீழ்புறத்தில் தேவையான 7800 எண்ணிக்கையிலான கான்கிரீட் பிளாக்குகளில் 7320 கான்கிரீட் பிளாக்குகள் முடிக்கப்பட்டுள்ளன. மொத்த முள்ள 55 கண்வாய்களில் அடித்தளம் அமைக்கும் பணிகளில் அனைத்தும் முடிக்கப் பட்டுள்ளன. 766  மீட்டர் நீளம் கொண்ட ஒரு  வழிப் பாலத்தில் முழுவதும் முடிக்கப்பட்டு உள்ளன. 55 கண்வாய்களின் மூடு பலகை கள் முழுவதும் செய்து முடிக்கப்பட்டது. இதில்  53 மூடு பலகைகள் பொருத்தப்பட்டுள்ளன. முக்கொம்பு முதல் வண்ணத்துப்பூச்சி பூங்கா  வரை உள்ள நடுக்கரையை பலப்படுத்தும் பணிகள் மற்றும் இதர பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள்  அனைத்தும் இந்த ஆண்டு மே மாதத்திற்குள் முடிக்க திட்ட மிடப்பட்டுள்ளது என்றார்.

நீட் தேர்வில் தோல்வி: மாணவி தற்கொலை தேசிய மனித உரிமை அமைப்பு கள ஆய்வு

தஞ்சாவூர், ஜன.21 - தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவா சத்திரம் ஒன்றியம், ஊமத்தநாடு கிரா மத்தில் நீட் தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட மாணவி துளசியின் வீட்டில் தேசிய மனித உரிமை அமைப் பின் மாநிலத் தலைவர் வழக்குரைஞர் ப. பா.மோகன் கள ஆய்வு மேற்கொண் டார்.  ஊமத்தநாடு கிராமத்தை சேர்ந்த மாணவி துளசி நீட் தேர்வில் போதிய மதிப்பெண் பெறாததால், அரசு மருத்து வக் கல்லூரியில் மருத்துவப் படிப்புக் கான இடம் கிடைக்கவில்லை. இதனால்  மனமுடைந்த மாணவி கடந்த டிச.25 ஆம்  தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, பேராவூரணி காவல்துறையினர் தற்கொலை என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்நிலையில், இதுகுறித்து தேசிய மனித உரிமைகள் அமைப்பின் மாநிலத்  தலைவர் வழக்குரைஞர் ப.பா.மோகன்,  ஊமத்தநாடு கிராமத்தில் கள ஆய்வு  மேற்கொண்டார். பின்னர் செய்தியா ளர்களிடம் வழக்குரைஞர் ப.பா.மோகன்  கூறியதாவது:  “நீட் தேர்வால் அனிதா தொடங்கி துளசி வரை மாணவிகள் தற்கொலை தொடர்கதையாகி வருகிறது. நீதியரசர் ஏ.கே.ராஜன் குழு தமிழகத்திற்கு நீட் தேவையில்லை என மிக தெளிவாக தமது அறிக்கையை அளித்துள்ளது. படிப்பின் மூலம் பெறுகிற மதிப்பெண் மருத்துவப் படிப்புக்கு போதுமானது. தமிழகத்தின் பாரம்பரியத்துக்கு நீட்  தேர்வு முரணானது. கூட்டாட்சி தத்து வத்திற்கு எதிரானது.  மாணவி துளசியின் மரணத்தில் திருச்சி துறையூர் தனியார் பயிற்சி நிறு வனம் குறிப்பிட்ட கெடுவுக்குள் மாற்றுச்  சான்றிதழை வழங்காததால் வேறு எந்த  படிப்பிலும் சேரமுடியாத மனவருத் தத்திலும் தற்கொலை செய்து கொண்டு உள்ளார்.  எனவே, அந்த தனிப்பயிற்சி நிறுவ னத்தையும் தற்கொலைக்கு தூண்டிய தாக வழக்கில் காவல்துறை சேர்க்க வேண்டும். சமூக நீதிக்கான அரசாக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு செயல்பட்டு வருகிறது. மாணவி துளசியின் மரணத்திற்கு உரிய இழப்பீடு வழங்க முதல்வர் நடவடிக்கை  எடுக்க வேண்டும்”. இவ்வாறு அவர் கூறினார். கள ஆய்வின்போது சமூக செயற் பாட்டாளர்கள் அரங்க. குணசேகரன், வழக்குரைஞர் முகமது தம்பி, மெய்ச்சு டர் வெங்கடேசன், திருவேங்கடம், முரு கேசன், எஸ்டிபிஐ மாவட்டச் செயலாளர்  இத்ரீஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

குடவாசல் வெளி மாவட்டத்திலிருந்து வந்த நெல் மூட்டைகள் பறிமுதல்

குடவாசல், ஜன. 21 -  திருவாரூர் மாவட்டம் குடவாசலில் உள்ள  நெல் கொள்முதல் கடைக்கு வெளி மாநிலத் தில் இருந்து விற்பனைக்கு வந்த நெல் மூட்டை கள் சிறைப்பிடிக்கப்பட்டு, 180 நெல் மூட்டை களை குடவாசலில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் ஒப்படைக்கப்பட்டது. குடவாசலில் எம்.எஸ். டிரேடர்ஸ் என்ற  பெயரில் பிடாரி அம்மன் கோவில் தெருவில்  முருகேசன் என்பவர் கடை வைத்துள்ளார். இந்த கடை முகவரிக்கு வெள்ளிக்கிழமை காலை  சிவகங்கை மாவட்டத்தில் இருந்து லாரியில் 180 நெல் மூட்டைகள் இறங்குவதை கண்ட அர சூரை சேர்ந்த  சரவணன் என்ற விவசாயி, குடவாசல் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.  சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை யினர் மேற்கண்ட லாரியை கைப்பற்றி கிராம  நிர்வாக அலுவலர் (பொ) பழனிமுத்து மூல மாக லாரியில் உள்ள நெல் மூட்டைகளை தமிழ்நாடு திறந்தவெளி சேமிப்பு குடோ னில் ஒப்படைத்தனர். மேலும் வெளி மாவட்டத் தில் இருந்து நெல் மூட்டைகள் விற்பனைக்கு  வருகிறதா என காவல்துறை மற்றும் வருவாய்  துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள்  உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூர், ஜன.21 - பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவல கத்தில் 1.1.2022 முதல் தொடங்கும் காலாண்டிற்கு படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களிடமிருந்து வேலைவாய்ப்பற்ற உதவித்தொகைத் திட்டத்தின் கீழ்  பயன்பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. பத்தாம் வகுப்பு தோல்வி, பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கு மேலான கல்வித் தகுதிகளை பெற்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, பதிவி னைத் தொடர்ந்து புதுப்பித்து 31.12.2021 அன்றைய  நிலையில் ஐந்தாண்டுகளுக்கு மேலாக வேலைவாய்ப் பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு தமிழக அர சால் உதவித்தொகை வழங்கப்படுகிறது.   மாற்றுத்திறனாளிகளை பொருத்தவரையில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு  முடித்திருந்தால் போதுமானது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்ச வரம்பு ஏதும் கிடையாது. ஏனையோருக்கு மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். இந்த உதவித்தொகையினை பெறுவதற்கு தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மனு தாரர்கள் 31.3.2022 அன்றைய நிலையில் 45 வயதிற் குள்ளும் இதர இனத்தைச் சார்ந்தவர்கள் 40 வயதிற் குள்ளும் இருத்தல் வேண்டும்.  உதவித்தொகை விண்ணப்ப படிவம் பெற விரும்பும்  மனுதாரர்கள் தங்களின் வேலைவாய்ப்பு அடையாள அட்டையினை ஆதாரமாக காண்பித்து பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பங் களை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.  ஏற்கனவே, விண்ணப்பித்து மூன்றாண்டுகள் உதவித்தொகை பெற்றவர்கள் விண்ணப்பிக்க தேவை யில்லை. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மனு தாரர்கள் பிப்ரவரி 28 ஆம் தேதி வரை அனைத்து அலுவ லக வேலை நாட்களிலும் பெரம்பலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இயங்கும் வேலைவாய்ப்பற் றோர் உதவித் தொகை திட்டப் பிரிவில் அனைத்து அசல் கல்விச் சான்றிதழ்கள், வேலைவாய்ப்பு அடை யாள அட்டை மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்  கணக்கு புத்தகத்துடன் நேரில் ஆஜராகி சமர்ப்பிக்கலாம். மேலும் உதவித்தொகை பெற்று வரும் பயன்தா ரர்கள் விதிமுறைகளுக்குட்பட்டு சுய உறுதிமொழி ஆவணம் சமர்ப்பிக்க பிப்ரவரி 28 ஆம் தேதி வரை கால  அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் ப. ஸ்ரீ.வெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.

அரசு மருத்துவமனையை  தரம் உயர்த்த கோரிக்கை

திருச்சிராப்பள்ளி, ஜன.21 - திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி பேரூராட்சி 1 ஆவது வார்டு  காமராஜர் நகர் பகுதியில் வடிகால் வசதியுடன் சிமெண்ட் சாலை, தெருவிளக்கு, கொள்ளிடம் கூட்டு குடிநீர், பொது  கழிப்பிட வசதி, சமுதாயக் கூடம், பொது கிணற்றை தூர்வாரி  கம்பி வேலி அமைக்க வேண்டும். பேரூராட்சியில் குடியிருக் கும் மக்களுக்கு வீட்டுவரி, மின் இணைப்பு, இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும்.  அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் பொதுமக்கள் வெள்ளியன்று பேரூராட்சி அலுவலகம் முன்பு காத்தி ருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு தமிழ்செல்வன், கிருஷ்ணகுமார், அண்ணாதுரை ஆகியோர் தலைமை வகித்தனர். போராட்டத்தை விளக்கி புறநகர் மாவட்ட செயலாளர் ஜெயசீலன், புள்ளம்பாடி ஒன்றிய செயலா ளர் ரஜினிகாந்த், ஒன்றியக்குழு உறுப்பினர் வினோத்குமார். விவசாய தொழிலாளர் சங்க சண்முகம் ஆகியோர் பேசினர்.

 

;