districts

img

பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை மருத்துவர்கள் சங்க மாநாடு

திருச்சிராப்பள்ளி, செப்.23 - தமிழகம் மற்றும் திருச்சி  நியோனாட்டாலஜி (பச்சிளம்  குழந்தைகள் சிகிச்சை மருத் துவர்) சங்கம் சார்பில் சவுத் நியோகான் 2022 எனும் மாநில மாநாடு திருச்சியில் புதனன்று தொடங்கியது. திருச்சி நியோனாட்டாலஜி சங்க தலைவர் மரு.செங் குட்டுவன், செயலாளர் செந் தில்குமார், பொருளாளர் மாத்ருபூதம் ஆகியோர் தலைமையிலும், மாநில  தலைவர் அரசர்சீராளர், செயலாளர் சீனிவாசன் ஆகி யோர் வழிகாட்டுதல்படியும் இந்த மாநாடு செப்.25 ஆம் தேதி வரை நடக்கிறது. இதில் பச்சிளம் குழந்தை களுக்கு தரமான சேவை  வழங்குவது எனும் கருப்பொ ருளில் மாநாடு நடக்கிறது. 13 பயிலரங்குகள், சிறப்பு சொற் பொழிவுகளுடன் நடக்கும்  மாநாட்டில் ஆயிரம் மருத்து வர்கள் கலந்து கொள்கின்ற னர். கிராமங்களில் பச்சிளம்  குழந்தைகளுக்கு வீட்டிலிருந் தபடியே மேற்கொள்ளப்பட வேண்டிய பராமரிப்பு குறித்த  பயிற்சி அங்கன்வாடி ஊழி யர்களுக்கு வழங்கப்படு கிறது. தாய்ப்பால் ஊட்டுதல், தொப்புள்கொடி பராமரிப்பு, காய்ச்சலை கையாளுதல், வயிற்றுப்போக்கு, சுவாசத் தொற்று, தீவிர பச்சிளம் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த பயிற்சி அளிக்கப் படுகிறது.

;