districts

img

சத்துணவு ஊழியர் சங்க நிர்வாகிகளுக்கு பயிற்சி முகாம்

புதுக்கோட்டை, மார்ச் 17 - தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின்  மாநில, மாவட்ட நிர்வாகிகளுக்கான ஒரு நாள் பயிற்சி வகுப்பு புதுக்கோட்டையில் அண்மையில் நடைபெற்றது. பயிற்சி வகுப்புக்கு சங்கத்தின் மாநிலத்  தலைவர் ஆர்.கலா தலைமை வகித்தார். வகுப்பின் நோக்கம் குறித்து மாநில பொதுச் செயலாளர் அ.மலர்விழி பேசினார். தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு துணைத் தலைவர் சி.முத்துக் குமாரசாமி, உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு நிர்வாகி என்.கண்ணம்மாள் ஆகி யோர் உரையாற்றினர். முன்னதாக மாவட்டத் தலைவர் ஜி.பாஸ்கர் வரவேற்க, மாநிலப் பொருளாளர் எம்.ஆர்.திலகவதி நன்றி கூறினார்.